தேசியத் தலைவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த உறவு ஆழமானது. சிறு வயதில் இருந்தே அவர் செதுக்கிய, அவரை செதுக்கிய அந்த கலாச்சார தொடர்பு பற்றிய ஒரு சின்ன பதிவு. கடலுக்கும் அன்றைய(5/6/1956) பழைய சிலோனின் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்த ஒரு திறந்த வெளியில் boots கால்களால் தன் மகனும் மக்களும் ஏறி மிதிக்கப்படுவதை பார்த்தபடி ஒரு தந்தை உணர்வற்று அகிம்சையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். தந்தை செல்வாவின் மனதில் எந்த ஒரு அகிம்சை போராளியும் திருப்பி அடித்து விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அகிம்சைக்கு சுயமரியாதையை விட பொறுமையே முக்கியம். அடிமையிலும் பொறுமையான அடிமை அகிம்சை. தமிழர்களின் ஓலமும் சிங்களத்தின் சிரிப்பு சத்தமும் காலி முகத்திடலை ஆக்கிரமித்தது.. கோரிக்கை காகிதங்கள் காற்றில் பறந்தன. ரெத்தம் கொட்ட ஒரு போராளியை தோளில் சுமந்தபடி, வவுனியா M.P C.சுந்தரலிங்கம் சிங்கள only சட்டம் நிறைவேற்றப்பட இருந்த அவைக்குள் நுழைந்தார். போராளியின் தலையில் இருந்து கொட்டும் ரெத்ததை பார்த்து கைகொட்டி சிரித்தது சிங்களம். அந்த கூட்...
The official website of @mrpaluvets from twitter