26 October 2019.. - Bigil #Bigil பார்த்தேன்.. ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருந்தது. தொய்வில்லா திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கைத்தட்டி ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கு. பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம் பாடல், மேலும் வெறியேற்றும். விஜயின் நடனத்திற்கு ஈடு கொடுக்க படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் இருக்குன்னு ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், ஆனால் வெறித்தனம் எனும் ஒரு பாட்டு, நாலு விஜயின் குத்து பாடல்கள் பார்த்த திருப்தியை தரும். பாடல்கள் தரம். 👍 Michael intro அதிரடி என்றால், ராயப்பன் intro காட்சி அதகளம்! முதல் காட்சியே வாத்தியார் பாடலுடன் ஒரு action வகுப்பு தான். விஜய இதுக்கு முன்ன இப்படி ஒரு introல பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். ராயப்பன், கதை முழுவதும், கதையின் உயிர்நாடியாக வலம் வருகிறார். ராயப்பன் கதாபாத்திரம் விஜய்க்கு புதுசு. ஒரு matured mass hero எப்படி இருக்கணுமோ, அப்படியிருக்கிறார் ராயப்பன். 3 மணித்தியாலத்தில் படத்தில் வரும் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எல்லாமே சரியாக பொருந்தும்.....
The official website of @mrpaluvets from twitter