Skip to main content

Posts

Showing posts from November, 2019

அன்று புரியவில்லை...

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்.. முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇 எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்... அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது.. அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன், பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.. ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பே

நடுமுற்றம் உள்ள வீடு

"வெளிய முன்னுக்கு தான் கிணறு இருக்கு.. போய் பார்.. இங்க வா!.. இது தான் அறை, அங்கால குசினி நடுவுல பாரு திறந்த வெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் முற்றம், அதில் அந்த பக்கதில் கட்டியிருக்கும் ஊஞ்சலை சுத்தி தான் எல்லாரும் இருப்பம், இங்க வந்து பார்... அதுல நிண்டா எப்படி தெரியும்? இங்க நிண்டு பார்த்தா தான் பாதை தெரியும்.. அங்க தூரத்துல main roadல வாகனங்கள் வரும் சத்தம் இங்க வரைக்கும் கேட்கும்"... என்று குண்டுகள் விழுந்து,  முழுவதுமாய் அடையாளம் தெரியாத அளவுக்கு இடிந்து விழுந்த கட்டிடத்தின்,  கற்கள் கிடந்த திறந்த வெளியில்... என் பாட்டன், பூட்டன் வாழ்ந்த பூர்விக வீட்டை, இன்னும் இடிந்து விழாத நினைவுகள் ஊடாக,  எனக்கு கட்டி காட்டி மகிழ்ந்த அப்பம்மாவின் முகமும், பெருமை தொனித்த குரலும் தான் மீண்டெழும் எங்கள் தேசத்தின் நம்பிக்கை குரலாய் இன்று வரை எனக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது.. -கிரி

என் சுயத்தின் மொழி

ஆரம்பத்துல யாராவது என் தாயை பழித்து பேசினாலோ, பொதுவாக அநாகரிகமாக பேசினாலோ, அவர்களுக்கு சரி சமமாக அவர்கள் மாதிரியே எதிர்வினையாற்றுவேன். என் அம்மாவ நீ திட்டினா உன் அம்மாவா நான் திட்டுவேன் போன்ற போக்கே என்னிடம் அதிகம் காண கூடியதாக இருந்தது.  உணர்வுகளின்,  சுயத்தின் வெளிப்பாடு தான் மொழியின் முக்கிய அடிப்படை பயன்பாடாகிறது.  ஒருவனின் கோபத்தில் வெளிப்படும் உணர்வே பெரும்பாலும் அவனது பண்பை, ஒரு விடயத்தை அவன் கையாளும் விதத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பாலினத்தை, ஒரு தொழிலை ஒரு அடையாளத்தை இழி சொல்லாக மாற்றி இன்னொருவர் மீது நாம் நம் வெறுப்பை கக்கும் போது, அந்த குறிப்பிட்ட தனி நபர் மீதான நமது வெறுப்பு மட்டும் அங்கு வெளிப்படவில்லை. அங்கு இழி சொற்களாக நான் பயன்படுத்தும் சொற்களில் நம் அரசியலும் வெளிப்படுது. பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகளின் வந்தேறி என்ற சொற் பயன்பாடும், பிற்போக்கு திராவிடர்களின் 'அகதி நாயே' என்ற சொல்லின் பயன்பாடும் வெளிப்படுத்தும் அரசியலானது அவர்களின் மனிதத்தின் தரத்தை உணர்த்தி நிற்கிறது. 'வந்தேறி', 'அகதி நாயே' போன்ற சொற்களில் மட்டும் அல்ல, சாதிய, பாலின அடையாளங்கள

நான் இன்னும் எழுதி முடிக்காத சிறு கதை

{போன வருடம் ராமாயணத்தை களமாக கொண்டு எழுத ஆரம்பித்து,  பிறகு பாதியிலேயே நிறுத்திய ஒரு சிறு கதையின் முதல் பகுதி, மீண்டும் பதிவிடுகிறேன்... Work in progress. Grammar,spelling errors இருக்கும்..  } 👇 மடிந்த யானையின் உடல் மீது முதுகை சாய்த்தபடி நிமிர்ந்திருந்தான் வேந்தன். அவன் எதிரே மலையொன்றை சாய்த்த களிப்பில், கையில் வில்லுடன் தன் வெட்டு காயங்களை மதிப்பிட்டபடி நின்று கொண்டிருந்தான் ஒரு உளவாளி. இனி இவனால் எழ முடியாது என்று இளநகைத்தப்படி அந்த உளவாளி "எங்கள் இறைவனை வேண்டு வேந்தா. மோட்சமாவது கிடைக்கும்.. இறந்திருக்கும் யானை அறியாது அதன் மடமையை, ஆனால் நீயோ திக்கு திசை தெரியாமல் ஓடும் மதம் பிடித்த யானையல்ல. நீ தெரிந்தே தான் ஒரு கொடூரனின் படையை வழிநடத்தினாய், உன் வீரத்தை நான் போற்றுகிறேன், ஆனால் எங்கள் தர்மம் உன் வீரத்தை விடவும் வலியது. உன்னை காப்பாற்ற மக்களை கேடயமாக்கி, அவர்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கும் உன் தலைவன் வர மாட்டான். என் இறைவன் கரிசனையின் விளைவான என் சுவாசக்காற்று மட்டும் தான் உன் உயிரின் கடைசி செய்தியை இனி ஏந்தி செல்லும். இறைவனை வேண்டி சொல், உன் கடைசி செய்தி என்ன? "

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக

சாப்பிடலாம் வாங்கோ

ஈழத்தில் சோறுக்கு மேல கறிகள் எல்லாத்தையும் உண்டன ஊத்தி சாப்பிடும் பழக்கம், வழக்கமா இருக்கு.  இதை அவதானித்த ஒருவர், மேலே உள்ள படத்தை நான் twitterஇல் பகிர்ந்ததை விமர்சிக்கும் விதமாக,  " பிச்சைக்காரி தட்டு போல எல்லாம் ஒன்னா போட்டுதான் திங்கனுமா?? தட்டை விட திருவோடு கரெக்டா இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.. அவருக்கு நான் கொடுத்த பதில் ; மலை போல சோற தட்டுல/இலையில போட்டு, அதுக்கு மேல காய் கறிய போட்டு, குழம்ப ஊத்தி, குழைச்சு சாப்பிடுவது தான் எங்கள் பழக்கம். கறிய தனியா வெச்சு தொட்டு சாப்பிடுறது எல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த கறியையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கோ. தனியா விருப்பம் இல்லாத சில சத்தான உணவுகள் கூட குழையலில், தேனுடன் மருந்து போல் சாப்பிடலாம். சோறு, புட்டு, இடியப்பதுக்கெல்லாம், உண்டன கறியவோ, சொதியவோ விடாமல் ரொட்டி மாதிரி தொட்டு சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாட்டில் முழு நாளை ஓட்டும் என் தரவழி ஆளுங்களுக்கு இப்படி சாப்பிட்டா தான் 12-14hrs at a stretch வேலை செய்ய முடியும்.. ஒரு முறை தெரியாமல் சரவண பவனுக்குள் நு

ஆண்களுக்கான பெண்ணியம்

பெண்ணியம் , ஆண்களுக்கிடையிலான உரையாடலாகவும் கிளைவிட வேண்டும்.ஆண்மையை ஒழிக்க ஆண்கள் நாம் தான் முன்வர வேண்டும். தேசியத் தலைவர் சொன்னது போல் எங்கள் ஆழ்மனதில் இருந்து தான் மாற்றம் ஆரம்பிக்க வேண்டும். ஆண்மை எனும் கருத்தியல் ஆண்களாகிய எங்கள் மேலாதிக்கத்தை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டது. நாம் பேசும் பெண்ணியத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைப்பாடு, அது பெண்மை சார்ந்ததாகவே இருப்பது தான். பெண்ணியம் என்பது வெறுமனே பெண்களுக்கான விடுதலை மட்டுமல்ல, அது ஆண்மையெனும் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துடிக்கும் ஆண்களுக்குமான விடுதலை தான் ..இதற்கான வேலையை ஆண்களும் செய்தாக வேண்டும். ஆண்கள் பேசும் பெண்ணியம் ஆண்மையை கேள்வி கேட்க வேண்டும்.! ஊர் எங்கும் பெண்ணியம் பேசும் ஆண்கள் அனைவரையும் அழைத்து, அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தால், அப்போதும் பெண்களுக்கு அதிகாரத்தில் சம பங்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆண்கள் பேசும் பெண்ணியம், ஆண்கள் இதுவரை அனுபவித்து வந்து ஆனெனும் சலுகைகள், ஆதிக்கத்துக்கு விரோதமானது! It is against the collective interest of men. ஆகையினால் நாங்கள் எங்களுக்கு,எங்கள் interestsக்கு எதிராக செயல

ஆண்மை என்றால்

ஆண்மை, பெண்மை ஆண்மை, பெண்மை என்பது உயிரியல், அல்லது உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவை ஒரு சமூக கலாச்சார கட்டமைப்பு . இந்த கட்டமைப்பு காலத்திற்கு காலம் மாறும். ஆண்மையும், பெண்மையும், ஆண், பெண் பாலினங்கள் பற்றிய ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புகளின்(social expectations) கட்டமைப்பு. It defines the social expectations of the various genders.இந்த எதிர்பார்ப்புகள் நடை, ஆடை, நடத்தை, தொழில், பேச்சு, கட்டுப்பாடு என்று ஒரு பாலினத்தின் இயக்கத்தையே நிர்ணயிக்கிறது. They then construct the gender roles in the society. அன்பு, பரிவு, அடக்கம், நாணம், இப்படி பல விதமான "குணங்களின் ஐக்கியம்" 'பெண்மை'யாகவும். வீரம், துணிச்சல், ஆளுமை, அதிகாரம் போன்ற பண்புகள் ஆண்மையாகவும் கட்டமைக்கப்படுகிறது. பொது பண்புகளை, ஆண்மை பெண்மை என்று வகைப்படுத்தி , அந்த பண்புகளுக்கேற்ப பெண் என்பவள் இந்த தொழில் தான் செய்ய வேண்டும், இந்த படிப்பை தான் படிக்க வேண்டும், என்று சமூகம் நிர்ணயிக்கிறது. மனிதர்களின் பொது பண்புகளை, பாலின பண்பாக மாற்றும் கருத்தியல் தான் 'ஆண்மை பெண்மை. பெண்கள் அதிகாரத்தில் பங்

நடத்தை சரியில்லை

இரவு பத்து மணியிருக்கும்.அலுவல்களை முடித்து கொண்டு, கடைசி பேருந்தில் வீட்டுக்கருகில் வந்து இறங்கினேன், என்னுடன் தரிப்பிடத்தில் ஒரு சீன பெண்ணும்(தனியாக), நான்கு அவுஸ்திரேலிய ஆண்களை கொண்ட ஒரு கும்பலும் இறங்கினார்கள். அந்த கும்பல் கொஞ்சம் சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு வந்தார்கள். பேருந்து தரிப்பிடத்துக்கு எதிரே உள்ள ஒழுங்கையில் தான் நான் வசிக்கும் வீடிருக்கு, அதனால் பாதையை கடந்து மற்ற பக்கத்துக்கு சென்றேன், நான் கடந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணும் பாதையை கடந்தார், அவர் வீடும் ஒரே ஒழுங்கையில் தான் இருக்கு போல என்று நினைத்து கொண்டேன். Eye contact ஏற்படவில்லை. நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுக்கொண்டு நடந்தேன், அந்த பெண் எனக்கு முன் நடந்து கொண்டிருந்தார். அவர் தான் முதலில் ஒழுங்கைக்குள் நுழைந்தார், அதன் பின் நான் நுழைந்தேன், இருவரும் ஒரே அளவு வேகத்தில், ஒரு சிறிய இடைவெளி வித்தியாசத்தில் நடந்து கொண்டிருந்தோம்.. அதனால் நானும் ஒழுங்கைக்குள் நுழைந்ததை அந்த பெண் உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. எங்கள் ஒழுங்கைக்குள் நிறைய மரங்கள் உண்டு, தெரு விளக்குகளை மறைக்கும் அளவுக்கு வளர்ந்தி