Skip to main content

தலைவரை உருவாக்கிய களம்

தேசியத் தலைவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த உறவு ஆழமானது. சிறு வயதில் இருந்தே அவர் செதுக்கிய, அவரை செதுக்கிய அந்த கலாச்சார தொடர்பு பற்றிய ஒரு சின்ன பதிவு.

கடலுக்கும் அன்றைய(5/6/1956) பழைய சிலோனின் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்த ஒரு திறந்த வெளியில் boots கால்களால் தன் மகனும் மக்களும் ஏறி மிதிக்கப்படுவதை பார்த்தபடி ஒரு தந்தை உணர்வற்று அகிம்சையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார்.

தந்தை செல்வாவின் மனதில் எந்த ஒரு அகிம்சை போராளியும் திருப்பி அடித்து விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அகிம்சைக்கு சுயமரியாதையை விட பொறுமையே முக்கியம். அடிமையிலும் பொறுமையான அடிமை அகிம்சை. 
தமிழர்களின் ஓலமும் சிங்களத்தின் சிரிப்பு சத்தமும் காலி முகத்திடலை ஆக்கிரமித்தது.. கோரிக்கை காகிதங்கள் காற்றில் பறந்தன. 
ரெத்தம் கொட்ட ஒரு போராளியை தோளில் சுமந்தபடி, வவுனியா M.P C.சுந்தரலிங்கம் சிங்கள only சட்டம் நிறைவேற்றப்பட இருந்த அவைக்குள் நுழைந்தார். போராளியின் தலையில் இருந்து கொட்டும் ரெத்ததை பார்த்து கைகொட்டி சிரித்தது சிங்களம்.

அந்த கூட்டத்தின் அதிகார சிரிப்பை பார்த்து சுந்தரலிங்கம், "ஒரு காலம் வரும், அன்று தமிழ் புலியை கண்டு சிங்கள சிங்கம் வாலை சுருட்டி கொண்டு ஓடும்" என்றார். சிங்கள ஆதிக்கம் சிரித்தப்படி அகிம்சையின் அலங்கோலத்தை பார்த்து ரசித்தது.

கொழும்பில் இருந்து தொலை தூரத்தில் ஒரு கடற்கரை ஓரத்தில் இருந்த வல்வெட்டித்துறையில் 2 வயது நிரம்பிய ஒரு அரச அதிகாரியின் மகன் பிரபாகரனுக்கு அந்த சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

வல்வெட்டித்துறை; கோடியக்கரையில் இருந்து வெளிக்கிடும் கடலோடிகள் காணும் முதல் தமிழ் வாசல். 
கப்பல்கள்,வீரர்கள்,வணிகர்கள்,
மீனவர்கள், என்று எல்லோரும் வந்திறங்கி, பண்பாடிய 250 ஏக்கர் பட்டினம் அது. சிங்கள தேசத்தை விட தமிழகத்தையே அதிகம் பார்த்து வளர்ந்த நெய்தல் மண் அது.

பார்ப்பனிய ஊடகங்களும், சிங்கள ஊடகங்களும் இந்த ஊரை ஒரு சமூக விரோதிகளின், கடத்தல்காரர்களின் கூடாரமாக சித்தரித்து அதன் காரணமாகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார் என்று கட்டவிழ்த்துவிட்ட கட்டுகதைகள் ஏராளம்...

கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் வல்வெட்டித்துறையினர்.அமெரிக்கா வரை பயணம் செய்த அன்னபூரணியே இதற்கு நல்ல சான்று. 

ஆனால் இதெல்லாம் ஒரு சிறப்பா?

எல்லாளனுக்கு பின் சிங்களவர்கள் மனதில் ஆழ பதிந்த தமிழன், 
ஈழத்து கரிகாலன், 
தமிழினத்தின் முதல் தேசிய ராணுவத்தை கட்டிய தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண் என்பதை விட வேறு சிறப்பு அந்த ஊருக்கு வேண்டுமா? 

தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை ஒரு காந்தியவாதி, சிறு வயதில் இருந்தே அகிம்சைக்கும் இவருக்கும் நல்ல உறவிருந்தது. அப்பரின் அரசியலை கேட்டு வளர்ந்த இவர் காந்தியை விட பகத் சிங், கொடி காத்த குமரன், நேதாஜியின் கதைகளையே அதிகம் விரும்பி கேட்டு வளர்ந்தார். 


அவர் வளர்ந்த சூழல் ஒரு போராட்ட களம். ஈழத்தை அவர் அமைதியான ஒரு தேசமாக கண்டதில்லை. எங்கு திரும்பினாலும் தமிழர்களின் ஓல சத்தமும், போராட்ட முழக்கமும் தான் அவருக்கு கேட்டது.. 

மொழியுரிமை போராட்டங்களை, சிங்கள இனவெறியர்களின் கலவரங்களை, எண்ணற்ற தமிழர்களின் துயரங்களை கண்டு வளர்ந்தார். அந்த சூழல் தான் அவரை வளர்த்தது.

அந்த காலகட்டத்தில் இளைஞர் கூட்டம் குருதியால் திலகமிட்டு வரவேற்ற தமிழ் சனநாயக தலைவர்கள் எல்லாம் மேடைகள் எங்கும் அலங்கார தமிழில் வீர வசனங்கள் பேசினார்கள். இளைஞர்கள் மத்தியில் போர் குணத்தை ஊட்டி வளர்த்தார்கள்.

இளைஞர்கள் மத்தியில் போராட்ட குணத்தை வளர்த்த இந்த தலைவர்கள், சிங்கள தலைவர்களிடம் அந்த குணத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். எந்த தீர்வுமின்றி தொடர் ஏமாற்றங்களை மட்டுமே சிங்களம் இந்த தலைவர்களுக்கு பரிசளித்தது.

இந்த தொடர் ஏமாற்றங்களை பொறுக்க முடியாது, இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார் வி.நவரத்தினம்.

அவருடன் இணைந்து தமிழர் சுயாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் தான் பொ.வேணுகோபால் மாஸ்டர். சிவகுரு வித்தியாசாலையில் நடந்த மாஸ்டரின் அரசியல் வகுப்புகள் தான் பிரபாகரன் என்ற மாணவனை போராளியாக மாற்றியது..

அகிம்சை இனி சரிப்பட்டு வராது, ஆயுதம் ஏந்தி போராடுவது தான் இனி ஒரே வழி என்ற முடிவை பிரபாகரன் என்ற மாணவன் எடுத்தது அந்த காலகட்டத்தில் தான்.

16 வயதில் நாட்டுக்காக வீட்டை விட்டு வெளியேறினார் பிரபாகரன்..

The rest is history.
Mr. பழுவேட்டரையர்
(6th October 2018)

Comments

  1. வாழ்த்துக்கள் சகோதரா.....மிக அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற