விடுதலை புலிகள் இயக்கம், ஈழ விடுதலை போராட்டம் என்று வரும் போது, பெரும்பாலானோருக்கு போறும், சண்டைகளும், மண்டியிடாத தமிழினத்தின் வீரம் செரிந்த வரலாறும் தான் முதலில் நினைவுக்கு வரும். அது போல, அதே அளவுக்கு இயக்கத்தின் அரசியலும் இங்கே அதிக அளவில் பேசப்பட வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் வெறுமனே தமிழினத்துக்கான ஒரு தேசிய இராணுவத்தை மட்டும் கட்டவில்லை, அவர்கள் ஒரு தேசத்தையும், அந்த தேசத்துக்கான சுதந்திர நாட்டையும் கட்டியெழுப்பியவர்கள். உங்களுக்கு அவர்களை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சாதி மதம் பிரதேசமென பிளவுப்பட்டிருந்த ஒரு இனத்துக்குள் இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உருவாக்கிய விடுதலை புலிகள் இயக்கம், உலகெங்கும் தமிழினத்தின் இன மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை மிகவும் ஆழமாக வேரூன்ற நிறுத்தி விட்டு தான் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படைகளில் ஒன்று ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு. ஈழ அரசியல் வரலாற்றில் ஆரிய பார்ப்பனியத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் எதிர்த்த ஒரே இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் மட்டும் தான். தேசியத் தலைவர் தனத
காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார் அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார். ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை. ராமனின் சூழல், வெள்ளையா, சுத்