Skip to main content

Posts

Showing posts with the label #யான்

Mr.பழுவேட்டரையர்

பழுவேட்டரையர் என்ற பெயர் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட பெயர்.  வரலாற்று ஆசிரியர்களுக்கும் இது புதினமான பெயர் அல்ல, அதே நேரம், இது வெறுமனே புதினத்தில் மட்டும் வரும் பெயரும் அல்ல. இது ஒரு உண்மை வரலாற்று கதாபாத்திரத்தின் பெயர்.  சோழர்களின் தளபதியாக இருந்த ஒரு சிற்றரசனன் தான் பழுவேட்டரையர். அவனது பெயரில் ஒரு படையணி கூட சோழர்களின் ராணுவத்தில் இருந்தது. ஈழத்தில் அதிக போர் களங்கள், சண்டைகள் கண்ட படையணி என்ற பெருமை பழுவேட்டரையர் படையணிக்கு இருக்கு. பொன்னியின் செல்வனெனும் வரலாற்று புதினத்தில் பழுவேட்டரையரின் வரலாறு, கதாபாத்திரத்தின் உணர்வுகளால் விழுங்கப்பட்டாலும், அந்த பெயருக்கான வரலாறு, ஆர்வம் கொண்டு தேடினால் எளிதில் கிட்டும். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொன்னியின் செல்வனில் பிடித்த கதாபாத்திரமும் பழுவேட்டரையர் தான். போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி போராளிகளுக்கு தைரியம் கொடுப்பாராம் தலைவர். இந்த காரணங்கள...

நடுமுற்றம் உள்ள வீடு

"வெளிய முன்னுக்கு தான் கிணறு இருக்கு.. போய் பார்.. இங்க வா!.. இது தான் அறை, அங்கால குசினி நடுவுல பாரு திறந்த வெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் முற்றம், அதில் அந்த பக்கதில் கட்டியிருக்கும் ஊஞ்சலை சுத்தி தான் எல்லாரும் இருப்பம், இங்க வந்து பார்... அதுல நிண்டா எப்படி தெரியும்? இங்க நிண்டு பார்த்தா தான் பாதை தெரியும்.. அங்க தூரத்துல main roadல வாகனங்கள் வரும் சத்தம் இங்க வரைக்கும் கேட்கும்"... என்று குண்டுகள் விழுந்து,  முழுவதுமாய் அடையாளம் தெரியாத அளவுக்கு இடிந்து விழுந்த கட்டிடத்தின்,  கற்கள் கிடந்த திறந்த வெளியில்... என் பாட்டன், பூட்டன் வாழ்ந்த பூர்விக வீட்டை, இன்னும் இடிந்து விழாத நினைவுகள் ஊடாக,  எனக்கு கட்டி காட்டி மகிழ்ந்த அப்பம்மாவின் முகமும், பெருமை தொனித்த குரலும் தான் மீண்டெழும் எங்கள் தேசத்தின் நம்பிக்கை குரலாய் இன்று வரை எனக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது.. -கிரி

என் சுயத்தின் மொழி

ஆரம்பத்துல யாராவது என் தாயை பழித்து பேசினாலோ, பொதுவாக அநாகரிகமாக பேசினாலோ, அவர்களுக்கு சரி சமமாக அவர்கள் மாதிரியே எதிர்வினையாற்றுவேன். என் அம்மாவ நீ திட்டினா உன் அம்மாவா நான் திட்டுவேன் போன்ற போக்கே என்னிடம் அதிகம் காண கூடியதாக இருந்தது.  உணர்வுகளின்,  சுயத்தின் வெளிப்பாடு தான் மொழியின் முக்கிய அடிப்படை பயன்பாடாகிறது.  ஒருவனின் கோபத்தில் வெளிப்படும் உணர்வே பெரும்பாலும் அவனது பண்பை, ஒரு விடயத்தை அவன் கையாளும் விதத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பாலினத்தை, ஒரு தொழிலை ஒரு அடையாளத்தை இழி சொல்லாக மாற்றி இன்னொருவர் மீது நாம் நம் வெறுப்பை கக்கும் போது, அந்த குறிப்பிட்ட தனி நபர் மீதான நமது வெறுப்பு மட்டும் அங்கு வெளிப்படவில்லை. அங்கு இழி சொற்களாக நான் பயன்படுத்தும் சொற்களில் நம் அரசியலும் வெளிப்படுது. பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகளின் வந்தேறி என்ற சொற் பயன்பாடும், பிற்போக்கு திராவிடர்களின் 'அகதி நாயே' என்ற சொல்லின் பயன்பாடும் வெளிப்படுத்தும் அரசியலானது அவர்களின் மனிதத்தின் தரத்தை உணர்த்தி நிற்கிறது. 'வந்தேறி', 'அகதி நாயே' போன்ற சொற்களில் மட்டும் அல்ல, சாதிய, பாலின அடையாளங்கள...

நடத்தை சரியில்லை

இரவு பத்து மணியிருக்கும்.அலுவல்களை முடித்து கொண்டு, கடைசி பேருந்தில் வீட்டுக்கருகில் வந்து இறங்கினேன், என்னுடன் தரிப்பிடத்தில் ஒரு சீன பெண்ணும்(தனியாக), நான்கு அவுஸ்திரேலிய ஆண்களை கொண்ட ஒரு கும்பலும் இறங்கினார்கள். அந்த கும்பல் கொஞ்சம் சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு வந்தார்கள். பேருந்து தரிப்பிடத்துக்கு எதிரே உள்ள ஒழுங்கையில் தான் நான் வசிக்கும் வீடிருக்கு, அதனால் பாதையை கடந்து மற்ற பக்கத்துக்கு சென்றேன், நான் கடந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணும் பாதையை கடந்தார், அவர் வீடும் ஒரே ஒழுங்கையில் தான் இருக்கு போல என்று நினைத்து கொண்டேன். Eye contact ஏற்படவில்லை. நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுக்கொண்டு நடந்தேன், அந்த பெண் எனக்கு முன் நடந்து கொண்டிருந்தார். அவர் தான் முதலில் ஒழுங்கைக்குள் நுழைந்தார், அதன் பின் நான் நுழைந்தேன், இருவரும் ஒரே அளவு வேகத்தில், ஒரு சிறிய இடைவெளி வித்தியாசத்தில் நடந்து கொண்டிருந்தோம்.. அதனால் நானும் ஒழுங்கைக்குள் நுழைந்ததை அந்த பெண் உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. எங்கள் ஒழுங்கைக்குள் நிறைய மரங்கள் உண்டு, தெரு விளக்குகளை மறைக்கும் அளவுக்கு வளர்ந்தி...