Skip to main content

சிங்கள பேரினவாதத்தின் கருவியான முஸ்லிம் தலைமைகள்

ஈழத்தில் தமிழ்- முஸ்லிம் உறவு பற்றி பேசும் போது,

முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கருவியாக செயல்பட்டு வந்ததை பற்றியும் பேச தான் வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான தனது அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் முழு ஆதரவுடன் தான் சிங்களம் அரங்கேற்றி வந்திருக்கு.

தமிழகத்தில் ஐயா காயிதே மில்லத் தமிழ் மொழி உரிமைக்காக போராடிய போது, இலங்கையில், 'சிங்கள மட்டும் மொழி சட்டத்தை' மக்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லி, இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தார், Sir ராசீக் பாரீத் எனும் முஸ்லிம் தலைவர்.
தனி சிங்கள சட்டத்துக்கு ஆதரவாக களமாடிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
சிங்கள மொழிக்கும், அதன் திணிப்புக்கும் ஆதரவாக மட்டும் அல்ல, தனி சிங்கள கொடிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் தலைமைகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

16 January 1948 அன்று, இலங்கையின் தேசிய கொடியாக, சிங்கள இனத்தின் தனி சிங்கள சிங்க கொடியை பாராளுமன்றத்தில் முன்னிறுத்தி முதலில் motionஅ table பண்ணது மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அகமது சின்னலெப்பே தான். 

அதை தவிர மலையக தமிழர்களின் குடியுரிமை மறுப்பு சட்டத்துக்கு ஆதரவாக
Dr.MCM Kaleel மற்றும் Tuan Burhanuddin Jayah போன்ற முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்த வரலாறும் உண்டு


அந்த கால கட்டத்தில் மலையக தமிழர்கள் பக்கம் நிற்க தவறிய தமிழ் அரசியல் தலைவர் பொன்னம்பலத்தை கண்டித்து, அவரிடம் இருந்து பிரிந்து சென்று தான் தந்தை செல்வா இலங்கை தமிழரசு கட்சியை தொடங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் முஸ்லிம் தலைமைகள் மத்தியில் எந்த குழப்பமும் இருக்கவில்லை. மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைமைகளும் சிங்கள தலைமைகள் போல் தெளிவாகவே இருந்தார்கள்.
அதற்கு பிறகு,

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தின் போது அன்றைய முஸ்லிம் தலைமைகள் சிங்களத்தின் பக்கம் தான் நின்றார்கள். அன்றைய All Ceylon Muslim League தலைவர் Dr. கலீல், "தமிழர்கள் தனி நாடு கோரினால் கலவரங்கள் நடக்க தான் செய்யும்" என்று பேசியிருந்தார்.

இந்தியாவில் அன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, இந்திய பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த இந்திய முஸ்லிம் லீகையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

காத்தான்குடி படுகொலைக்கு முன்பு, பின்பு என்று ஈழத்தின் தமிழ்-மஸ்லிம் உறவை பிரித்தால், மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களுக்கு காத்தான்குடி முன் நடந்த வரலாறு என்றே வகைப்படுத்தலாம். 

-Mr. பழுவேட்டரையர்
25/08/2020

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...