ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள். இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம். PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது. ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்ட...
The official website of @mrpaluvets from twitter