Skip to main content

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.  

ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு. 
தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம்.

அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇
இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார். 

அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video 

https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19 



எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு.

சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு, portion size, பலருக்கு set ஆகாது. அண்ணன் வைகோ புலிகளை சந்தித்த போது, தலைவரிடம் எங்க போனாலும் தேநீர் கொடுக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார், அதற்கு தலைவர் வேடிக்கையாக Tea is a our military drink என்றார்.

அண்ணன் வைகோவும், தலைவரும் உரையாடும் காட்சியின் காணொளி இணைப்பு 👇copy & paste the following link on your browser for video 

https://twitter.com/mrpaluvets/status/982599648723386369?s=19

அது போல் போராளிகள் மக்களை சந்திக்க செல்லும் போது, அவர்கள் தேநீர் கொடுத்தால், அதை மறுக்காமல் குடிக்க வேண்டும் என்று தலைவர் வலியுறுத்துவாராம், அதன் பின்னணியில் ஒரு சாதி எதிர்ப்பு காரணமும் இருக்கு..  இப்படி நிறைய செய்திகள் இருக்கு.

தேசியத் தலைவர் தன்னை இறக்கி மற்றவர்களை உயர்த்தி பேசும் பண்புடையவர். மிகவும் எளிமையானவர், தன் தளபதிகளை எப்போதும் உயர்த்தி பேசுவார், தோழர்களை விட்டுக்கொடுத்து பேச மாட்டார்.. அவர் கோபத்திலும் ஒரு நிதானம் இருக்கும். பேச்சில் அன்பிருக்கும், அச்சுறுத்தலை கூட சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் பக்குவம் அவரிடம் இருந்தது. வாழ்வியலின் அழகியலை புறக்கணித்து, போர் களத்தில் மிருகங்களாய் உலாவிய கூட்டம் அல்ல மாவீரர்கள். வாழ்வியலின் அழகியலை காக்க, போராட நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டம் எங்கள் மாவீரர்கள்.

சமையல் கலை மட்டும் அல்ல, போர் களத்தில் கவிதை எழுதியிருக்கிறார்கள், நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள், மரங்கள், காடுகள் வளர்த்திருக்கிறார்கள், மாட்டு வண்டி சவாரி நடத்தியிருக்கிறார்கள்,..

உங்களுக்கு தான் ஈழம் போர்க்களம், எங்களுக்கு அது தான் வீடு! எங்கள் வீட்டுக்குள், நாட்டுக்குள் போரை கொண்டு வந்தது சிங்களம்! அவனுக்கு அது போர் களம், எங்களுக்கு அது நாடு! அது தான் வீடு.

அண்ணன் வைகோவோ, திருமாவோ, சீமானோ, எங்கள் உறவினர் யார் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு விருந்தளிப்பது எங்கள் பண்பாடு. போர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும் கூத்து அல்ல! .

24 மணித்தியாலமும் நாங்கள் பங்கர்களுக்குள் வாழவில்லை. 

சீமான் பேசும் விதம் உங்களுக்கு மிகைப்படுத்தலாக தெரியலாம், ஆனால் அவர் சொன்ன செய்தி எங்களுக்கு வியப்பாக இல்லை.

நன்றி,
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர் 


Comments

  1. வாழ்க தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க நம் தமிழினம்

    ReplyDelete
  2. அருமை தோழா.
    அருமையாக சொன்னீர்கள் ஆனால் இங்கு ஆட்டு மந்தைகள் அதிகம்.
    மத வெறியும் சாதி வெறியும் துரோகமும் ஊறி கிடக்கு.
    அதை மாற்றுவது எளிதல்ல.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் கொடுத்ததற்கு நன்றி,,, ஈழத்து வாழ்கை முறை பற்றி இன்னும் நிறைய செய்திகளை எதிர்ப்பார்க்கிறேன்,,,,இங்கே(தமிழ் நாட்டில்) நிறைய திராவிடப் பன்றிகள் பொய்யையும் புரட்டையுமே சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள்,,

    ReplyDelete
  4. I got some valuable points through this blog. Thank you sharing this blog.
      transits blog

    ReplyDelete
  5. மரக்கறி என்றால் வெஜிடேரியன் தானே. திருமா சொல்வதில் மட்டும் தான் இறைச்சி பற்றி குறிப்பு உள்ளது. மற்ற எந்த இடத்திலும் இறைச்சி பற்றி குறிப்பு இல்லையே!!!
    அனைத்திலும் விருந்தோம்பல் புலப்படுகிறது. என்னென்ன உணவுகள் என்பது பற்றி குறிப்புகள் இல்லையே!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...