ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான். ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன. அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு". இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி...
The official website of @mrpaluvets from twitter