Skip to main content

திலீபன் எனும் பெண்ணியவாதி


தேசியத் தலைவர் மதுரையில் இருந்த காலகட்டத்தில் தான்
பெண் போராளிகளை இயக்கத்துக்குள் இணைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் தோன்றியது. பெண் விடுதலை, பெண்ணிய கருத்தியலை இயக்கத்திலும், சமூகத்திலும் விதைப்பதன் ஊடாக தான் பெண்களுக்கான சம அற வெளியை உருவாக்க முடியும் என்று தேசியத் தலைவர் ஆழமாக நம்பினார். 
தலைவரின் அந்த கனவு மெய்ப்பட காரணமாக இருந்த முதன்மையான தளபதி அண்ணன் திலீபன் தான்.  அண்ணன் திலீபன் உருவாக்கிய 'சுதந்திர பறவைகள்' என்ற பெண்ணிய இயக்கம், தமிழீழத்தின் பழமை வாதங்களை எதிர்த்து களமாடியது. 
வெளிப்படையாகவே தமிழ் சமூகத்தின் சில போக்குகளை "காட்டுமிராண்டி"த்தனம் என்றே புலிகள் விமர்சித்தார்கள். சீதனத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், 

பெண்களின் சொத்துரிமை பற்றியான பிரச்சாரங்கள். அதை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட தமிழீழ சட்டங்கள் பற்றியான விழிப்புணர்வு..

Gender rolesக்கு எதிரான பிரச்சாரங்கள்,
'ஆணாதிக்கத்தில்' இருந்தான விடுதலை பற்றிய பிரச்சாரங்கள்,

பெண்களை பண்டமாக மாற்றும் Commoditization of womenக்கு எதிரான பிரச்சாரங்கள் 

என்று அனைத்து விதமான தளங்களிலும் 'சுதர்ந்திர பறவைகள்' இயங்கின. சமூக மாற்றங்கள்(changing the social construct)சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை,குறிப்பாக ஆணாதிக்கத்தில் இருந்த விடுதலை சார்ந்த அதிகப்படியான அரசியல் பிரச்சாரங்களை தமிழர் தேசத்தில் முன்னெடுத்தது புலிகள் தான்.

பெண்களின் கல்வி பாரம்பரியம், அதன் முக்கியத்துவம் என்று பெண்கள் பற்றிய உரையாடல்கள் அதிகம் நிகழ்ந்தது புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழத்தில் தான். 

பெண்கள் கையில், அரசியல், பொருளாதார நிர்வாகம் வர வேண்டும் என்ற அடிப்படையிலான விழிப்புணர்வு பிரச்சாரம், என்று பெண்ணியம் சார்ந்து புலிகளின் அரசியல் பிரிவு முன்னெடுத்த பிரச்சாரங்கள் எண்ணில் அடங்காது.
இது மட்டுமா, நம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படாத பெண்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சிகளிலும் அண்ணன் திலீபன் உருவாக்கிய சுதந்திர பறவைகள்  ஈடுபட்டது.. இது அனைத்தும் போர் சூழலில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்.

குண்டு மழை பொழியும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சமூக புரட்சி இது. இது சாதாரண விடயமல்ல. 

விடுதலை புலிகள் எனும் ஆயுதம் ஏந்திய ஒரு போராட்ட குழுவின் அரசியல் இயக்கம் தான், ஈழத்தின் பிரதான, வலிமை மிக்க பெண்ணிய இயக்கமாக இருந்தது. 
 
அதை உருவாக்கிய தளபதிகளில் முக்கியமானவர் அண்ணன் திலீபன். 
-Mr. பழுவேட்டரையர்

Comments

  1. மிக அருமை சகோதரரே...வாழ்துக்கள்,தொடரவும்.நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...