காலா படத்தின் முதல் காட்சியிலேயே ரஜினி clean bowled ஆகுறாரு. காலா முதல் sceneலயே score பண்ணுறாரு. ரஜினி என்ற பிம்பத்தை, brand powerஐ ரஞ்சித் அந்த காட்சியில் உடைக்கவில்லை, அதை ஒரு மக்கள் கூட்டத்திடம் பகிர்ந்தளிக்கிறார் அதன் பின் வரும் காலாவின் 'mass' எல்லாமே அந்த மக்கள் கூட்டத்தின் ஊடாகவே வெளிப்படுகிறது. முதல் காட்சியில் heroism உடைக்கப்படவில்லை, பகிரப்படுகிறது. இதுவரை காலமும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் வழி அறிமுகமான ரஜினி, காலாவில் சமத்துவ தன்மையை அடைகிறார். ஒவ்வொரு காட்சியிலும் ராமன் தன் பேத்தியிடம் ஆதிக்கத்தை போதிக்கிறான். காலாவின் கால தொட்டு கும்பிட சொல்கிறான். ஆதிக்க கட்டமைப்பை ராமனும் பின்பற்றுகிறான் என்பதை உணர்த்தவே அந்த காட்சி.அந்த பொண்ணு, காலாவை கொன்று விடாதீர்கள் என்று சொல்கிறாள்! ஆதிக்கத்தின் திமிர்/பிச்சை, பெருந்தன்மையல்ல காலா சிறுவர்களுடன் நடந்துகொள்ளும் முறை ராமனுக்கு நேர் எதிர். காலாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருப்பது அன்பின் அடிப்படையில் உருவான உறவு. ஆதிக்கம் அங்கு உறவாடவில்லை. ராமனின் சூழல், வெள்ளையா, சுத்...
The official website of @mrpaluvets from twitter