Skip to main content

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான்.

அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை?

இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான்.

அந்த உணவின் மீது, 

ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது, 

ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான்.

மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி பயங்கரவாதம் தலை விரித்தாடும் நாட்டில், மாட்டிறைச்சி எங்கள் இனத்தின் உணவு, அது மாட்டு மூத்திரம் குடிக்கும் உங்கள் கேடுகெட்ட ஆரிய கலாச்சாரத்தை விடவும் மேன்மையானது என்று முழங்கும்  தலைமையாக திகழ்வது அண்ணன் சீமான் மட்டும் தானே?.. முருகன் வேல் வைத்திருப்பது மரக்கறியை வெட்டவா? இறைச்சியை வெட்ட தானே? என்று கேட்கும் திராணி இன்று தமிழ்நாட்டில் வேறெந்த தலைவருக்கு இருக்கு?

இங்கே ஆமை கறி அரசியலை உங்களுக்கு முன் கட்டமைத்து, அண்ணன் சீமானை சிறுமைப்படுத்தும் கூட்டம், மாட்டிறைச்சி பற்றிய அவர் பேச்சை உங்களிடம் காட்டாது.

இது போல தான் பல கதைகள் பூதாகரமாக்கப்பட்டு உங்களுக்கு காண்பிக்கப்படும் போது, ஏதோ ஒரு முக்கியமான அரசியல் மறைக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.
இன்று ஏதோ ஒரு ஹோட்டல் கதையை தூக்கி கொண்டு வந்திருக்கு திராவிடம். சீமான் ஏன் நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல எளிமையாக இல்லை என்று திமுகவினர் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்.

திமுகவினரின் அகராதியில் "எளிமை", 'அதிகாரமற்ற நிலை'
என்று பொருட்படும். நெடுமாறன் ஐயா, மணியரசன் ஐயா போல சீமானும் அதிகாரத்தை அண்டாமல் விலகி இருந்தால், திமுகவினர் சீமானையும் ஒரு எளிமையான மனிதராக தான் பார்த்திருப்பார்கள்.

Pauperism isnt humility.

இன்று
▪️நாம் தமிழர் வளர்ந்து விட்டது, இனி அதை அதிகாரம் கொண்டு எளிதில் ஒடுக்கிவிட முடியாது.

▪️நாம் தமிழரை கூட்டணி வலைக்குள்ளும் சிக்க வைக்க முடியாது,

▪️நாம் தமிழரை அங்கீகரித்து, சனநாயகரீதியாக அவர்களுடன் விவாதிப்பதும் ஆபத்து,

என்று எதையும் செய்ய முடியாது திணறி கொண்டிருக்கிறது திராவிடம். இந்த நிலையில் திராவிடத்தின் கையில் இருக்கும் ஒரே கருவி அவதூறு மட்டும் தான். அதனால் தான் அதை மட்டும் அதிகமாக கொட்டி தீர்க்கிறார்கள்.

சீமானும் அவரது தமிழ்த்தேசிய படையும் அதிகாரத்தை நெருங்க நெருங்க, அவர் மீதான அவதூறுகளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எதிரான அவதூறுகள் இனிமேல் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
9/4/21





Comments

  1. சிறப்பு 😍

    ReplyDelete
  2. உண்மைதான் பழு... இன்னும் புத்திசாலித்தனமாக இந்த திராவிட கூட்டத்தை கையாள வேண்டும்... அடிக்கிற அடியில் ஒருவனும் எதிராக நிற்க்க கூடாது...

    ReplyDelete
  3. தெளிவான விளக்கம் நண்பா...

    ReplyDelete
  4. வாதத்தில் தோற்றவன் ,அவதூறை கையில் எடுக்கிறான்

    ReplyDelete
  5. 👍👍👍👍👍❤️❤️

    ReplyDelete
  6. உண்மையில் அண்ணன் சீமானை காக்க வேண்டியது நமது கடமை

    ReplyDelete
  7. Correct 🤔nam tamilar katchi karan mayira kooda pudunga mudiyathu intha dmk vala

    ReplyDelete

Post a Comment