Skip to main content

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,  
கலவரங்கள் செய்தோம் 
ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள், 

அவர்களின் உரிமைகளை பறித்தாலும், 
தளராமல் போராடுகிறார்கள், 
ஏறி மிதித்தாலும் 
திமிறி எழுந்து போராடுகிறார்கள். 

இனக் கலவரங்களை உண்டாக்கினோம், 
அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம், 
அவர்களின் உடமைகளை எரித்தோம், 
அவர்களை விரட்டி அடித்தோம், 
கொன்று புதைந்தோம், 
இவ்வளவு செய்தும், 
இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்!

அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை!
இந்த தமிழர்களை!
இயக்கும் அந்த சக்தி தான் என்ன?
இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..?

என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும் 

அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும், 
தமிழ் மீதும் 
அவன் கை வைக்க காரணமா இருந்தது.!

இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது. 

இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கீரிமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர் நகுலேஸ்வர படிப்பகம்.

அதன் பின்னர் 1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் Court Secretary ஆக இருந்த கே எம் செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்தில் இருந்த இளைஞர்களை ஒன்று திரட்டி, பொது நூலகத்துக்கான புத்தகங்களை திரட்டும் பணியை ஆரம்பித்தார். அதன் பின்னர் 
1/08/1934 ஆம் ஆண்டு Hospital Roadஇல் இருந்த யாழ் மின்சார நிலையத்துக்கு முன்பு இருந்த சிறு கடையொன்றை வாடகைக்கு எடுத்து, அதை முதல் பொது நூலகமாக்கினார். 

ஒரு சிறு அறையில் 844 புத்தகங்களோடும், 184 ரூபா நன்கொடையோடும் , தமிழ் அறிஞர் K M செல்லப்பாவினால் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் தான் படிப் படியாக வளர்ச்சி கண்டு 1959ஆம் ஆண்டில் கட்டிடத்தோடு யாழ் பொது நூலகமாக மாறியது.

அதன் பின்னர் 1952 ஆம் ஆண்டு சாம் சபாபதி ஐயா யாழ் மேயரா இருந்த போது யாழ் பொது நூலகத்துக்கான நிலம் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது


PIC: Mayor Sam Sabapathy

யாழ் பொது நூலகம் முழுமை பெற 23 வருடங்கள் எடுத்தது. 
தமிழர்கள் வெள்ளையனுக்கு எதிராக அணிதிரண்ட காலம் தொடங்கி, சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக அணிதிரண்டு நின்ற காலம் வரையிலான 23 வருடங்களாக அந்த காலம் இருந்தது. 

அடிமைகளாக இருந்த இனம், 
தமிழினமாக, ஒன்று சேர்ந்து நிமிர்ந்து நிற்க ஆரம்பித்த காலம் அது.

எங்கள் தேசத்தை நிலையாமை சூழந்தது..
இருப்பினும் நிலைத்து நின்றது தமிழ் மீதான எங்கள் பற்றும், கல்விக்கு நாங்கள் வழங்கிய முக்கியத்துவமும். 

அதனால் தானோ என்னமோ சலுகைகளுக்கும் சொகுசுகளுக்கும் ஆசைப்பட்டு பிற இனங்கள் உரிமைகளை விட்டு கொடுத்த போதிலும், தமிழர்கள் மட்டும் எதுவாயினும், உயிரினும் மேலான உரிமையை விட மாட்டோம் என்று உறுதி கொண்டு போராடினார்கள். 

கோவில்கள் தேவாலயங்கள் கட்ட ஊரா, உறவா, சாதியா, மதமா ஒன்று கூடிய தமிழர்கள், யாழ் பொது நூலகம் கட்ட இனமாக ஒன்று கூடின வரலாறு, ஈழத்தமிழின வரலாற்றின் உன்னதமான பக்கங்களில் ஒன்று. 

யாழ் பொது நூலகம் தான் ஈழத்தமிழினத்தின் முதல் பெரும் சிவில் சமூக முன்னெடுப்பு என்று கூட சொல்லலாம். அதற்காக தமிழர்கள் ஒன்று கூடினார்கள் என்று சொல்லும் போது, அங்கு 
எம் தேசம், 
அதன் பொருளாதாரம், 
அதன் நோக்கம், என்று எல்லாம் ஒன்றானது என்று தான் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

மீன் பிடித்த கையோடு வந்த பணம் 
அறுவடை செய்த கையோடு வந்த பணம் 
சம்பளம் பெற்ற கையோடு வந்த பணம் 
முடி திருத்திய கையோடு வந்த பணம் 
பண்டங்கள் விற்ற கையோடு வந்த பணம் 
கூத்து கட்டிய கையோடு வந்த பணம் 
என்று 
எல்லா உழைப்பும் ஒரு சேர குவிந்த பணத்தோடு உருவானது தான் யாழ் பொது நூலகம் 

இன்று ஈழத்தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் யாழ் பொது நூலகத்தின் அந்த கட்டிட வடிவமைப்பும், கட்டிட கலையும் கூட தமிழர் ஒற்றுமையை பறைசாற்றி நின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

நூலகத்தின் கட்டிட வடிவமைப்பில் தாய்த்தமிழகத்தை சேர்ந்த அன்றைய மெட்றாஸ் Presidencyஇன் அரச கட்டிடக்கலை நிபுணராக இருந்த K.S நரசிம்மனின் பங்களிப்பும் இருந்தது. அது மட்டுமல்லாமல் நூலக அறிவியலின் தந்தை என்றழைக்கப்படும் ரங்கநாதனும் அவரது ஆலோசனைகளையும் பங்களிப்பையும் நூலகத்துக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

Pic: Father of Library Science, Ranganathan

இரண்டு தாயக நிலங்களின் பங்களிப்பும் இதில் இருந்தது ஒரு தனி சிறப்பு.

இப்படியாக ஒரு இனமே எழுப்பிய அந்த ஆலயம், 
அந்த இனம் எழ, 
கல்வியில் சிறந்தெழ உதவியாக நின்றது. 
பல நல்ல ஆசிரியர்கள், நல்ல மாணவ மாணவிகள், நல்ல போராளிகள், நல்ல வீரர்கள், நல்ல மனிதர்கள் என்று பல மாண்புள்ள, மானமிக்க மனிதர்களை உருவாக்கியது அந்த நூலகம். 

அது தமிழர்களின் உறுதியின் கருவறையாக இருந்தது.  
அது தமிழர்களின் வரலாற்று தொன்மத்தின் காப்பகமாய் இருந்தது, 
அது தமிழர்களின் இறைமையின் அடையாளமாய் நின்றது...

அதை அப்படியே இருக்க விடுவானா சிங்களன்? அதை அப்படியே நிற்க விடுவானா அந்த பாதகன் ?

1981ஆம் ஆண்டு மே மாதம் காமினி திஸாநாயக்க சிரில் மத்தியூ என்ற இரண்டு சிங்கள அமைச்சர்களும், அவர்களின் காடையர் கூட்டமும் தேர்தல் பணி(District Development Council Election) சார்ந்த நடவடிக்கைகளுக்காக, சிங்கள தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னிலங்கையில் இருந்து, தமிழர் தேசத்து பண்பாட்டு தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் வந்தடைந்தவுடன், அங்கிருந்த முக்கிய காவல்த்துறை அதிகாரிகளை அழைத்து பேசினார்கள், ஏதோ ஒரு கலவரத்துக்கான தயார்ப்படுத்தல் அங்கு நடந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணமே ஒரு சில நாட்களில் எரிய வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. காவல்த்துறை அதிகாரிகளளை கலவரக்காரர்களாக களமிறக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தன. 

அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்த சிங்கள அமைச்சர்கள் மற்றும் சிங்கள ராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் 
Mahaweli Development Minister Gamini Dissanayake
Industries Minister Cyril Mathew. 
Defence Secretary Col. C. A. Dharmapala, Cabinet Secretary G. V. P. Samarasinghe, IGP Ana Seneviratne, 
Army Chief-of-Staff Brigadier Tissa Weeratunga, & DIG Edward Gunawardene.

இதில் இருக்கும் அந்த இரண்டு சிங்கள அமைச்சர்களும், அன்றைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கு மிகவும் நெருக்கமான இரு அமைச்சர்கள்.

இந்த இரு அமைச்சர்களின் காட்டுப்பாட்டின் கீழ் தான் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்களான 
 Jathika Seva Sangamaya (JSS) & Lanka Jathika Estate Workers Union (LJEWU) இருந்தன.

இந்த தொழிற்சங்கங்கள் ஊடாக கொண்டு பேருந்துகளில் பல சிங்களவர்கள் நூலக எரிப்புக்காக கொண்டு வரப்பட்டார்கள். 

மே 31 1981ஆம் ஆண்டு திட்டமிட்டப்படி கலவரம் தொடங்கியது. 

சிங்கள காவல்த்துறை அதிகாரிகள்,
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அலுலகத்தை அடித்து நொறுக்கினார்கள். 
யோகேஸ்வரன் என்ற நாடாளுமன்ற உறுப்பினரின் வீடும் தாக்கப்பட்டது, 
தமிழர்கள் சிலரை வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டார்கள்!  
சைவ ஆலயங்கள் தாக்கப்பட்டன, 
கடைகள் தாக்கப்பட்டன 
ஈழ நாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது!
சந்தை கட்டிடங்கள் தரமட்டமாக்கப்பட்டது 
மருந்துக் கடைகள் எரிக்கப்பட்டன ! 


அதை தொடர்ந்து அந்த காடையர் கூட்டத்தில் இருந்து ஒரு பகுதி, யாழ் நூலகம் நோக்கி சென்றது..

மே 31 இரவு, சிங்கள காவல்த்துறை அதிகாரிகள் சிலரும், சிங்கள காடையர்கள் சிலரும் யாழ் பொது நூலகத்துக்குள் நுழைகிறார்கள். 

தமிழர்கள் புனிதமாக கருதும் நூலகத்துக்குள் பூட்ஸ் கால்களுடன் திருடர்கள் போல் நுழைகிறார்கள். நுழைவாயிலில் தமிழ்த்தாயுக்கு ஒரு சிலை இருந்தது.. புத்தனின் உணர்வற்ற சிலையை மட்டுமே கண்டு பழக்கப்பட்ட அவன்ட கண்களுக்கு, கோவில் போல், கோவிலுக்கு நிகரான முக்கியத்துவத்துடன் காட்சியளித்த யாழ் நூலகம் வியப்பை அளித்திருக்கும்.

அந்த இருட்டிலும் அந்த கட்டிடத்தின் கட்டிட கலை, ஏதோ ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அரண்மனைக்குள் இருப்பது போன்ற உணர்வை அந்த சிங்கள காடையர்களுக்கு கொடுத்திருக்கும். 

மாளிகை, அரண்மனை என்று சொல்லி அந்த சிங்கள காடையர்கள் அது வரை கண்ட கட்டிடங்கள் எல்லாமே பௌத்த துறவிகளின் கூடாரமாகவும், சனாதிபதிகளும், பிரதமர்களும் வசிக்கும் வீடுகளாகவும் விடுதிகளாகவும் தான் இருந்திருக்கும். 

எந்த சாமானிய மனிதனும், வந்து அமர்ந்து,அறிவு கொண்டு ஆளும், எளிய மனிதர்களின் பிரம்மாண்டமான இந்த பொது சன மாளிகையை கண்டு அவன் வியந்திருப்பான்.
எரிந்திருப்பான். 
பொறாமை கொண்டு, 
வெறுப்பு கொண்டு!

அந்த காடையர் கூட்டத்தில் ஒருவன், அவர்களுக்கு எந்தெந்த பகுதிகளை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு கொண்டிருந்திருப்பான். திட்டமிட்டு அரிய ஓலைச்சுவடிகளும், நூல்களும் இருக்கும் பகுதிகள் தான் எரியூட்டி அழிக்கப்பட்டது.

எண்ணற்ற தமிழர்களின் சிந்தனையில் தீ மூட்டிய நூல்கள், சிங்களனின் இனவெறி தீ தீண்டி அழிந்து கொண்டிருந்தது. 97,000க்கும் மேற்பட்ட நூல்கள், ஓலைச்சுவடிகள் எரியூட்டபட்டது. தெற்காசியாவின் மிகப்பெரும் நூலகம், கோடிக்கணக்கான தமிழர்களின் பண்பாட்டு புதையல், ஒரு இரவில், தீயினால்! சாம்பலானது ..

அந்த காடையர்கள் நூலகத்தை திட்டமிட்டப்படி எரியூட்டி விட்டு, தொடர்ந்து ஒரு கலவரத்தை கட்டவிழ்த்து விட புறப்பட்டார்கள்.

தூரத்தில் இருந்து இரண்டு சிங்கள அமைச்சர்களான, காமினியும், சிறிலும் தீக்கிரையாகி கொண்டிருந்த நூலகத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏவி விட்ட காடையர்கள் கச்சிதமா வேலையை முடித்து விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில், மன நிறைவில், சகல அரச பாதுகாப்புடனும் அவர்களின் சாராயமும் இனவெறியும் ஏறிய உடல்கள் தூங்க சென்றன.

நூலகம் எரிந்து கொண்டிருந்த செய்தியும் தீ போல பரவ ஆரம்பித்தது.

தெற்காசியாவின் மிகப்பெரும் நூலகமாக கருதப்பட்ட நூலகத்தின் பயனாளிகள் ஒருவர். அந்த அருட்செல்வத்தால் பயன்பெற்ற அருட்தந்தை ஒருவர் வீட்டுக்கும் அந்த செய்தி பரவியது. அன்றிரவு நிம்மதியாக உறங்க சென்ற அருட்தந்தை Davidஇன் தூக்கம் இந்த துயர செய்தியால் முறிந்தது. 30க்கு மேற்பட்ட மொழிகளை கற்றறிந்து, Linguistic studiesஇல் முனைவர் பட்டம் பெற்றவராக இருந்த அருட்தந்தை டேவிடின் கல்வி, மற்றும் ஆய்வுக்கான மிகப்பெரும் தளமாக யாழ் பொது நூலகம் இருந்தது. அது எரியும் செய்தியின், அங்கே அந்த தருணத்தில் எம்மினம் இழந்து கொண்டிருந்த அந்த செல்வத்தின் முழு மதிப்பை சரிவர உணர்ந்த அவரால், அந்த இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. செய்தி கேட்ட தருணமே அவரும் நெஞ்சழுத்ததில் விழுந்து மடிந்தார். அன்று தமிழ்த்தாயுடன் சேர்ந்து எரிந்தது அவர் உயிரும் தான்.

யாழ் பொது நூலகத்தை எரித்தார்கள், கலவரங்களை எல்லாம் நிகழ்த்தி முடித்தார்கள், எல்லாம் எரிந்து சாம்பலானது! எல்லாம் நாசமானது! ஆனால் அத்தோடு சிங்கள பேரினவாதம் நிறுத்தவில்லை. வெந்த புண்ணில் வேல பாய்ச்சும் வேலையையும் அவர்கள் செய்தார்கள்.
பாராளுமன்றம் எனும் சிங்கள பேரினவாதிகளின் கேலி கூத்து கூடாரத்தில், இந்த நாசகார வன்முறை வெறியாட்டத்தை குறித்து கேள்வி எழுப்பி, கண்டன குரல்களை எழுப்பிய ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளை எப்படி எப்படியெல்லாம் கொன்று குவிக்கலாம் என்று ரசித்து ருசித்து பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தினார்கள் சிங்கள அரசியல்வாதிகள். 

“இந்த நாட்டில் தமிழர்கள் உங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றால். ஏன் இங்கே இருக்கிறீர்கள்? இது உங்கள் நாடல்ல! உங்கள் நாடு இந்தியா அங்கே போங்கள்! தமிழர்கள் உங்களுக்கு கோவில் நூலகம், பாடசாலை எல்லாம் வேண்டும் என்றால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு போங்கடா. இது சிங்கள பௌத்தர்களின் நாடு, இங்கே நீங்கள் தனி நாடு என்றெல்லாம் பேசினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ! தூங்கும் சிங்களவர்களை எழுப்பாதீர்கள்... தூங்கும் சிங்கத்தை எழுப்பினால் என்ன நடக்குமோ, அது தான் நடக்கும்! நினைவில் இருக்கட்டும்” என்று எச்சரித்தான் M.W.J.M லொக்குபண்டார Lokubandara என்ற சிங்கள அரசியல்வாதி 
PIC: MWJM Lokubandara

“இது சிங்கள பௌத்தர்களின் நாடு, இங்கே இந்த சிறுபான்மையினரின் இஷ்டத்துக்கெல்லாம் நாட்டை ஆள முடியாது. இங்கே நடப்பது பெரும்பாண்மை சிங்கள பௌத்தர்களின் ஆட்சியாக தான் இருக்க வேண்டும்” என்று விமல கண்ணகர எனும் ஒரு சிங்கள அமைச்சர் எழுந்து அந்த அவையில் கொக்கரித்தாள் ! 

Pic:Wimala Kannagara

"இங்கே எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை தூணில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும்.! அதற்கு பிறகு யார் வேண்டும் என்றாலும் இவர்களை என்னவும் செய்யலாம் என்று விட்டு விடலாம், இவர்களை தூக்கி கடலில் கூட வீசட்டும் ! ஏன் என்றால் அதற்கு பிறகு இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன் ? " என்று கேட்டான் சந்திரபால எனும் சிங்கள அரசியல்வாதி ஒருத்தன் .

"நேற்றிலிருந்து நாங்கள் இந்த தமிழ் அரசியல்வாதிகளை எப்படி சித்தரவதை செய்து தண்டிக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். அது தொடர்பாக நானும் ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். சிங்கள அரசர்கள் இந்த மண்ணை ஆண்ட காலத்தில் ஒரு தண்டனை முறை இங்கே இருந்தது. அதில் இரண்டு தூண்களில் கால்களை விரித்து கட்டி விட்டு, கால்களை கொத்துவது! தான் அந்த தண்டனை. அதே தண்டனைய இவர்களுக்கு கொடுக்கலாம். இல்லை என்றால் இவர்களை காலி முகத்திடல் கடற்கரை ஓரமாக நிறுத்தி சுட்டு தள்ளலாம், இவ்வாறான தண்டனைகளையும் இவர்களுக்கு வழங்கலாம்" என்று சொல்லி சிரித்தான் சிங்கள அரசியல்வாதி புஞ்சிநிலமே ! 

எல்லா இழப்பையும், இளிப்பையும், இழிவையும் தாங்கி கொண்டு நாதியற்று நின்றது தமிழினம்.

காலங்கள் உருண்டோடின.. 
1994 ஆம் ஆண்டு வந்தது..

தாயகமே போர் களமானது,
செல்களும் தோட்டாக்களும் துளைத்த மதில்களுக்கு, நடுவே
எரியூட்டப்பட்ட நிலையில், யாழ் பொது நூலகம் காட்சியளித்தது,

தமிழ்த்தாய் எரியூட்டப்பட்ட நிலையில் காட்சியளித்தாள்!
குண்டு மழைக்கு நடுவே அவ்வப்போது அடித்த மழையாலும் அந்த எரிக்காயங்களை ஆற்ற முடியவில்லை..

அந்த அழிவுக்கான நீதி கிடைக்காதா என்று கோபம் ஒன்று இன்னும் அணையாமல் தமிழர்கள் மனதில் எரிந்து கொண்டிருந்தது..

ஆனாலும்.. 1981இல் இருந்த ஈழத்துக்கும் 1994இல் இருந்த ஈழத்துக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது..

இழப்பை தாங்கிய தமிழினம்!
இரும்பை தாங்கி நின்ற காலம் அது. 

தலை குனிந்து நடந்த இனம்.
தலை நிமிர்ந்து நடந்த காலம் அது. 

வரலாற்றில் தமிழன் திருப்பி அடித்த காலம் அது ..
வீரம், ஈகம், கொண்டு ஒரு மறவர் படை 
ஈழம் வென்று வாழ்ந்த காலம் அது... 

அன்று...1994ஆம் ஆண்டு,
தென்னிலங்கையில் ஒரு வெடிப்பு சத்தம்!
சிங்கள நாட்டின் அடுத்த சனாதிபதியாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ள ஆளுமை என்ற பெயரோடு, மேடையை அலங்கரித்து கொண்டிருந்த அரசியல்வாதி, குண்டு வெடிப்பில் சிக்குண்டான் .. அவன் உடலை துளைத்த இரும்பு தகடுகள், அவனை எரித்து தள்ளியது. 

யாழ் நூலகத்தை எரித்த அந்த பாதகன் காமினி திஸ்ஸாநாயக்கவின் உடல் யாழ் நூலகம் எரிந்தது போல எரிந்து கொண்டிருந்தது..

யாழ் நூலகத்தை எரித்தவன் குண்டு வெடிப்பில் உடல் கருகி செத்தான்!
என்ற செய்தி ... என்ற ஏதோ ஒரு நீதி.. தமிழர்கள் காதுகளுக்கு எட்டியது..

யாழ் பொது நூலக எரிப்பு வராலாற்றின் கடைசி வரியானது அந்த வெடிப்பு, அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் 
விடுதலை புலிகள்!
தமிழீழ விடுதலை புலிகள்!
தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் வழி நடத்திய விடுதலை புலிகள் இயக்கம்!
என்று வரலாற்றில் பதிவானது. 

எல்லா கதைகளும், வரலாறும் நீதியோடு தான் முடிய வேண்டும். 
தமிழர்களுக்கான நீதி என்பது வழங்கப்படவில்லை. அது போராடி வென்றெடுக்கப்பட்டது..

அந்த நீதியை எங்களுக்கு வென்றெடுத்து தந்த தெய்வங்களாக எப்போதும் இருந்தது இருப்பது விடுதலை புலிகள் இயக்கம் தான். 

யாழ் பொது நூலக எரிப்புக்கான நீதி முழுவதுமாக கிடைக்காத போதிலும், காமினி திஸாநாயக்க கருகி செத்தான் என்ற செய்தி இன்றும் ஒரு ஆறுதலை தருகிறது.

-Mr பழுவேட்டரையர்
03/05/2025

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Shoba Shakthi & Tamil Solidarity Group's 'Group Sex Ideology'

I just dont know where to start, but this story needs to be told. In the last few years I've gained insights into internal problems within numerous Dravidian groups in Tamil Nadu and abroad through interactions on Clubhouse with the current and ex-members of such groups, and in this blog, I aim to shed light on such groups and activists linked to cases of sexual exploitation.  Firstly I would like to discuss about Shoba Shakti. A few months ago, a fellow comrade shared an old article on Shoba Shakthi from a website called Keetru. This article was written by a Human Rights activist called Thamizhachi who was based in France. The article is all about the sexual harrasment Thamizhachi faced through Shoba Sakthi.  Shobha Shakti is an activist/author who operates from France. He is an Sri Lankan Tamil who has made a name by being very critical about the Tamil struggle in Eelam. He calls himself a Dalit/Dravidian activist or Periyarist and is closely connect...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...