Skip to main content

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும் 

மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம். 

அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. 

மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் செய்த குற்றம், துரோகம், தவறு என்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளையும் அதன் உண்மைத்தன்மையையும் ஒவ்வொன்றாக இங்கே ஆராய்வோம். 
முதலாவது குற்றச்சாட்டு

மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்காக கொண்டு வரப்பட்ட Ceylon Citizenship Act (18/1948) சட்டத்தை ஜி ஜி பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு தான். 

இந்த குற்றச்சாட்டு உண்மையா? 
இல்லை! 
உண்மையிலேயே அவர் மலையகத் தமிழர்கள் குடியுரிமை பறிப்பை எதிர்த்து தான் வாக்களித்தார்.  

Ceylon Citizenship Act (18/1948). 

1948இல் சிங்கள பெரும்பான்மையின் ஆதரவில் கொண்டுவரப்பட்ட Ceylon Citizenship Act எனும் இந்த சட்டம், மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பறிக்க, அன்றைய இலங்கையின் பிரதமரான டி. எஸ். சேனாநாயக்கவால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக தான் ஈழத்தமிழர்களின் முதன்மை கட்சியாக இருந்த தமிழ் காங்கிரசினரும், அதன் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலமும் வாக்களித்திருந்தார்கள்.

படம்: சேனாநாயக்க 

இந்த சட்டம் 1948ஆம் ஆண்டு நவம்பர் 15 கொண்டு வரப்பட்ட போதிலும், மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கான வேலைகளை டி. எஸ். சேனாநாயக்க 1930களிலேயே ஆரம்பித்துவிட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் Donoughmore Commission ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் அதில் மலையகத் தமிழர்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட கூடாது என்பதில் சிங்கள தலைமைகள் தீவிரமாக இருந்தார்கள்.

மலையகத் தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி அவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும் என்று சிங்கள தலைமைகள் அன்று தீவிரமாக வாதிட்டு வந்தார்கள். அதற்கு இணங்கி இலங்கையின் முதல் அரசாங்க சபை(State Council) மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமையை மறுத்தது. அந்த அரசாங்க சபையில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக பெரி. சுந்தரம் ஐயா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அட்டன்(Hatton) தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகி அன்றைய அரசில் தொழில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக 1936 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இருப்பினும் அவரால் சிங்களத்தின் அந்த இனவாத நடவடிக்கையை தடுக்க முடியவில்லை. அதை தடுப்பதற்கு அவர் ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்தாரா என்பதையும் நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

அந்த காலக்கட்டத்தில் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிப்பு, குடியுரிமை சிக்கல் பற்றியும், அவை சார்ந்த தமிழர்களின் கோரிக்கைகள் பற்றியும் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் அவருடைய புகழ்ப்பெற்ற 50-50 கோரிக்கையை முன்னிறுத்திய அரசாங்க சபை உரையில் பேசியிருந்தார். அவருடைய புகழ்ப்பெற்ற 50-50 பேருரையில் அவர் மலையகத் தமிழர்களுகளின் உரிமைகளுக்காக பேசியதை இங்கே அவருடைய உரையில் இருந்து கீழே மீள்பதிவு செய்திருக்கிறேன்.

The Donoughmore Commission recommended the introduction of universal adult franchise to Ceylon on a qualification of five years residence as a test of abiding interest. The Sinhalese made the acceptance of the constitution conditional on the Franchise of the Indian Tamil workers being arbitrarily restricted by the requirement of domicile as a standard test. The suggested discrimination was communal and calculated to increase the numerical preponderance of the Sinhalese majority.

The Soulbury Commission admits that this material alteration regarding the Franchise, translated into the order in council has has and still has 

“An important effect on the enfranchisement of a substantial section of the population”(Indian Tamil)

The Elections Order in Council of 1931 was amended in 1936 by removing the requirement of an application by a voter for registration. This amendment which was intended to increase the numbers on the Electoral Rolls has been manipulated against the Indian Tamil worker by virtually making the registering officer the de facto objector to all of them, thereby throwing the onus of satisfying the complex legal test of domicile on the mass of the Indian Tamil voters.

The Indian Tamils have been reluctant to obtain certificates of permanent settlement in order to exercise the franchise as they were liable to be treated as inferior to those registered under the standard domiciliary test and thereby afford justification for the acts of legislative and administrative discrimination to which they have been subjected.

It is surprising that in the face of the declared intentions of Sinhalese leaders to eliminate the Indian Tamils from Ceylon and the series of legislative and administrative measures adopted by them. The soulbury commission should feel sure that there is a desire to assimilate the Indian community and make it part of a single nation.

The Tamil submission is that the Sinhalese objections to the enfranchisement of the Indian Tamil workers have been inspired by communal and political motives and not by economic considerations. The Soulbury commission rightly points out that franchise it self is only a means to an end and the end is to give people such a share of political power as may enable them to redress their grievances themselves”.

The commission goes on to observe that the “distribution of political power between the various communities is determined by the extent of the franchise”( with which is connected the question of emigration )

 It may be noted that the question of emigration is totally irrelevant, and the issue is in respect of Indians already lawfully admitted into Ceylon under governmental assistance and encouragement and on assurances of equality of civic and political status with the rest of the population of the Island.

 The Commission also points out that

“ any decision of the government of Ceylon upon the conditions of the enfranchisement of the Indian unskilled worker will have an important effect on our recommendation regarding the terms of reference of the delimitation commission”

The Commission has failed to offer a just or reasonable solution even to this limited problem which has been a fruitful source of annoyance to the peoples of Indian resulted in the progressive deterioration of the relations between India and Ceylon for the last 14 years.

The Tamil demand is that Indians should be allowed to qualify for the franchise on the same terms as the rest of the population especially as recruitment of Labour from India has been discontinued for over 10 years and India herself has placed a ban on the emigration of unskilled workers since 1939.
(Excerpts from Pages 235,236)

டொனோமோர் ஆணையம் கொண்டு வந்த அரசியலைமைப்புக்கு சிங்கள தரப்பு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால், அந்த ஆணையம் பரிந்துரைத்த அனைவருக்குமான வாக்குரிமை எனும் அடிப்படை உரிமை, மலையகத் தமிழர்களுக்கு பொருந்தாதென்றாக்க, மலையக தமிழர்களை குடியுரிமையை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சிங்கள தலைமைகள் வேண்டினர். 

மலையகத் தமிழர்களின் குடியுரிமை தகுதி பரிசோதிக்க கொண்டு வந்த நிபந்தனைகளை ஒரு இனவாத நடவடிக்கை என்றும், இலங்கைக்கு மலையகத் தமிழர்கள் கொண்டு வரப்பட்ட போதே, அவர்களுக்கு ஒப்பந்தம் வழி வழங்கப்பட்ட உரிமைகளில் குடியுரிமையும், இலங்கையில் வாழும் அணைத்து மக்களுக்கு உள்ள அணைத்து அரசியல் உரிமைகளும் உள்ளது என்றும் ஜிஜி பொன்னம்பலம் வாதிடுகிறார். அத்தோடு மலையகத் தமிழர்களுக்கு நிபந்தனையற்ற முறையில் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் தமிழர்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கிறார். 

ஜி ஜி பொன்னம்பலத்தின் 50-50 பேச்சை வெறுமனே ஒரு அதிகார பகிர்வுக்கான முழக்கம் என்று சுருக்கி விட முடியாது, அந்த உரை, தமிழர்களின் கோரிக்கை! அன்றைய State Councilலின் தனி சிங்கள அமைச்சரவையின் தமிழர் விரோத சதி திட்டங்களை அம்பலப்படுத்திய, தமிழர்கள் மற்றும் பிற சிறுபாண்மை சமூக மக்களின் உரிமைக்கான ஒரு பிரகடனமாக தான் நாம் 50-50 கோரிக்கையை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அன்று அரசியல் மேடைகளில் ஒலித்த முதன்மை குரல்களில், ஜி ஜி பொன்னம்பலத்தின் குரலும் ஒன்று.

State Councilலில் தொடங்கிய இந்த சிக்கல், சுதந்திர இலங்கையில் சட்டமானது. அந்த சட்டத்தை அன்று ஜி ஜி பொன்னம்பலம் எதிர்த்தே வாக்களித்தார். ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற கருத்து தவறானது. 

அன்று அவர் இந்த குடியுரிமை பறிப்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்ததற்கான சான்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

கீழே Ceylon Citizenship Actக்கு எதிராக வாக்களித்தவர்களின் பெயர்கள் 20 August 1948 Hansard இல் இருந்து இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கொடிய சட்டத்தை எதிர்த்து வாக்களித்தவர்களில் ஜி ஜி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வாவின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். சிங்கள பிரதிநிதிகள் சிலரும் அந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தார்கள்.