Skip to main content

அன்று புரியவில்லை...

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்..

முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇

எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்...

அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது..

அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன்,
பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பேசிக்கொண்டே இருந்தார்.
எல்லாத்தையும் பொறுமையா காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்த புலி அதிகாரிகள்,
மெல்ல,
"நீங்கள் இப்படி சுதந்திரமாக பேசுவதற்காக தான் அம்மா நாங்கள் போராடுகிறோம்...அதற்காக தான் இதெல்லாம்" என்றார்,

அதுக்கு பிறகு என்ன பேசுறது?

அப்பம்மாவின் கோபம் சற்று தணிந்தது, நிதானமாக படிவங்களை நிரப்பி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்..

போர் சூழலில் கடுமையாக போரிட்ட வீரர்கள் அமைதியாக மக்களை எதிர்கொள்ளும் அந்த பக்குவம் எனக்கு புதிதாக இருந்தது. 'அதிகாரி' என்ற சொல் மீதிருந்த அச்சம் சற்று விலகியது. அப்போது எனக்கு அந்த ஒழுக்கத்தின் முக்கியத்துவம் புரியவில்லை.

பிறகு ஒரு நாள், யாழில் எங்கள் நிலத்தை அபகரித்து வைத்திருந்த ஒரு ஒட்டு குழுவின்(புலிகளுடன் மோதிய தமிழ் ஒட்டுக்குழு இயக்கத்தில் ஒன்று) கொழும்பு அலுவலகத்திற்கு அப்பம்மா, மற்றும் ஒரு மூத்த சட்டத்தரணியுடன் சென்றிருந்தேன். எனக்கு அப்ப 13-14 வயதிருக்கும்..

குடும்பத்தில் இருந்த கடன் தொல்லைகள், மருத்துவ சிலவுகளை சமாளிக்க அந்த நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வேறு வழி இல்லை.. அதனால் அதை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது..

இந்த சந்திப்பில் அந்த ஒட்டுக்குழுவின் தலைவர் எங்கள் சடத்தரணியை சந்திக்க முன் வந்தார், எங்கள் சட்டத்தரணி ஒரு முதியவர், அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த ஒட்டு குழுவின் தலைவர் கேட்பதாக இல்லை, அவருக்கு அருகில் இன்னொரு மேசையில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவனை அந்த தலைவர் ஒரு பார்வை பார்த்தார், உடனடியாக அவன் எழுந்து அவன் அமர்ந்திருந்த கதிரையை தூக்கி எங்கள் சட்டத்தரணி மீது ஓங்கி, வெளியே போ என்று மிரட்டினான். உடனடியாக அந்த ஒட்டு குழு தலைவர், அவனை அமைதியாக இருக்கும்படி நிதானமாக சொன்னார். அவன் அமைதியாகிவிட்டான்... அச்சத்துடன் அப்பம்மாவும், சட்டத்தரணியும் வெளியே வந்தார்கள், பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு நிலம் கிடைத்துவிட்டது, ஆனாலும் அந்த அனுபவம் இன்னும் நினைவில் இருக்கு..

போர் சூழலில் இருந்த ஒரு அதிகாரியின் பக்குவத்துக்கும், ஒழுக்கத்துக்கும்,

போரற்ற சூழலில், அரசாங்கம் கொடுக்கும் பணத்தில், சிங்கள ராணுவத்தின் பாதுகாப்பில் வாழும் இந்த ஒட்டு குழுவின் தலைவனுக்கு இருந்த அகந்தைக்கும், திமிருக்கும்

இடையே இருந்த அந்த வித்தியாசத்தை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கு.

எல்லாம் வளர்ப்பை பொறுத்தது, எதுவும் இங்கே தற்செயல் அல்ல..

அன்று புரியவில்லை,

சிரித்த முகத்தில் நான் பார்ததுது வீரம் என்றும்,
கதிரையை தூக்கி ஓங்கிய முகத்தில் நான் பார்த்தது கோழைத்தனம் என்றும் 
எனக்கு அன்று புரியவில்லை.

இன்று புரிகிறது....



நன்றி
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர் 

Comments

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற