Skip to main content

சாப்பிடலாம் வாங்கோ

ஈழத்தில் சோறுக்கு மேல கறிகள் எல்லாத்தையும் உண்டன ஊத்தி சாப்பிடும் பழக்கம், வழக்கமா இருக்கு. 
இதை அவதானித்த ஒருவர், மேலே உள்ள படத்தை நான் twitterஇல் பகிர்ந்ததை விமர்சிக்கும் விதமாக,

 "பிச்சைக்காரி தட்டு போல எல்லாம் ஒன்னா போட்டுதான் திங்கனுமா?? தட்டை விட திருவோடு கரெக்டா இருக்கும்"
என்று பதிவிட்டிருந்தார்..

அவருக்கு நான் கொடுத்த பதில்;

மலை போல சோற தட்டுல/இலையில போட்டு, அதுக்கு மேல காய் கறிய போட்டு, குழம்ப ஊத்தி, குழைச்சு சாப்பிடுவது தான் எங்கள் பழக்கம். கறிய தனியா வெச்சு தொட்டு சாப்பிடுறது எல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த கறியையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கோ. தனியா விருப்பம் இல்லாத சில சத்தான உணவுகள் கூட குழையலில், தேனுடன் மருந்து போல் சாப்பிடலாம்.

சோறு, புட்டு, இடியப்பதுக்கெல்லாம், உண்டன கறியவோ, சொதியவோ விடாமல் ரொட்டி மாதிரி தொட்டு சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாட்டில் முழு நாளை ஓட்டும் என் தரவழி ஆளுங்களுக்கு இப்படி சாப்பிட்டா தான் 12-14hrs at a stretch வேலை செய்ய முடியும்..

ஒரு முறை தெரியாமல் சரவண பவனுக்குள் நுழைந்துவிட்டேன். காகத்துக்கு வைக்குற மாதிரி சின்ன பாத்திரத்தில் கொண்டு வந்து சோற வெச்சான். ஒரு அரிசி மூட்டை வாங்கி கொடுத்து, சமைச்சு கொண்டு வாங்கோ எண்டு சொல்லோனும் போல இருந்துச்சு.

கீரை வகைகளை விட நெய், தயிர் தான் அந்த உணவுகளில் அதிகமாக இருந்தது. அதனாலேயே சரவண பவன் மாதிரி கடைகளை தவிர்க்கிறேன். எங்கட Portion size பெருசா இருந்தாலும், "பிச்சைக்காரன்" மாதிரி சாப்பிட்டாலும், இது நல்ல தரமான சாப்பாடு தான்.

தமிழ் உணவுகளுக்கு பிறகு, திராவிட ஒன்றிய உணவுகளில் தெலுங்கு தேசிய கடைகளில் தான் அதிகம் விரும்பி ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவேன், அவர்கள் கீரையை வைத்தும் ஒரு பிரியாணி செய்வார்கள், நல்லா இருக்கும். அதன் portion sizeஉம் உரைப்பும் எங்கட நாக்குக்கு ஏற்ற மாதிரி இருக்கும்..
Melbourneஇல் தெலுங்கு நண்பனின் பரிந்துரையில் சாப்பிட்ட கோங்குரா பிரியாணி

தோசை இட்லி எல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கு இறங்காது. Lightஆன itemனா எங்கட ஊர் அப்பம் தான் நமக்கு சரி.
சிட்னி ஈழத்து கடை அப்பம்

புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கதைய கேட்டு பலருக்கு சிவபெருமான் மீது மதிப்பு கூடியது, ஆனால் என் தரவழி ஆளுங்களுக்கு, சாப்பாட்டு ராவனங்களுக்கு, புட்டு மேல தான் மதிப்பு கூடியாது 😂
ஊரில் அப்பம்மா சமையல்: சுறா வறையும் புட்டும்

இரவு மிஞ்சும் புட்டு, இடியப்பத்த, அடுத்த நாள் காலையில் வெங்காயம், கிழங்கு, முட்டையுடன் பிரட்டி சாப்பிடுவம், வழக்கமா அது தான் பாடசாலைக்கு எடுத்து செல்லும் உணவாகவும் இருக்கும். அப்படி பிரட்டப்பட்ட புட்ட, சம்பல் தொட்ட துண்டு பான் உடன் அள்ளி சாப்பிட்டாலும் தனி ருசி தான்.
நண்பன் துவாவுடன் புட்டு கொத்தும் இடியப்பமும், யாழ் restaurant கொழும்பில்

மத்தியானம் மிஞ்சிய சோரையும் மரக்கறியையும்(இறைச்சி மிஞ்சாது), இரவு சூடாக்கி, எல்லாத்தையும் ஒரு தட்டில் போட்டு,ரசம் கொஞ்சம் ஊத்தி குழைச்சு, பெரிய குழையல் உருண்டையாக பிடித்து, அப்பம்மா வீட்டில் உள்ள எல்லோரும் சுத்தி வர அமர பரிமாறுவார்கள்.

சிறுவர்களுக்கு இடியப்பம் அல்லது புட்டுடன் தேங்காய்ப்பூ மட்டும் சீனி சேர்த்து குழைத்து ஊட்டுவீனம். கொஞ்சமா பாலும் விடலாம்...

இந்த குழைத்து உண்ணும் பழக்கம் தான் Ceylon Burgher இன குழுமத்தின் Lampraisக்கும் inspirationஆ இருந்திருக்க கூடும்.சோறுடன் எல்லா கறியையும் சேர்த்து ஒரு வாழையிலையில் பொட்டலமாக கட்டி அவித்து உண்ணும் உணவு.மீன் cutletஉம் உள்ளே இருக்கும்.போன மார்கழியில் நான் ஈழத்தில் சாப்பிட்ட lamprais 
Colombo 'Variety' Lamprais 2017

'ஈழத்து வாழ்வும் வளமும்' என்ற நூலில் ஈழத்து உணவை பற்றி பேசும் போது பேராசிரியர் கணபதி

"இராவிலே எஞ்சிய கறிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துக்(குழைத்து 🙂) கவளமாகத் திரட்டிக் கையிலே ஏந்தி வைத்துண்பர்"...

என்ற அந்த பழக்கம் தான் இன்றுவரை தொடர்கிறது. 

அநேகமான உணவுகளை பற்றி படங்களுடன் பேசிவிட்டேன், சங்கீகள் specialஆ எதுக்கும் கிளிநொச்சி பாரதி உணவகத்தில் சாப்பிட்ட மாட்டிறைச்சி சோரையும் இங்கே பகிர்கிறேன் 😂 😉👇


உலக சராசரியுடன் ஒப்பிடும் போது ஈழத்தில் அதிகமாகவே சோறு உண்பார்கள்.
உலக சராசரிப்படி ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 54kg சோறு சாப்பிடுகிறான்
ஈழத்தில் ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 108kg சோறு சாப்பிடுகிறான். 
(கொழும்பில் 2017 மார்கழியில் சாப்பிட்ட சவன்)

இறுதியாக,

வயிறார சாப்பாடு,
சுட சுட தேத்தண்ணி,
அறிவார்ந்த உரையாடல்,
திகட்டாத உழைப்பு,
சிந்திக்க வைக்கும் வாசிப்பு, கொள்கையுள்ள வாழ்வியல், நேர்த்தை களவாடும் நண்பர்கள், நேசத்தை பரிமாறும் உறவுகள்,
கொட்டி தீர்க்க காதல்
வெட்டி தள்ள பகை
பெருமை பேச தமிழ்
போதும் வாழ்க்கை ..

That's all. 

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர் 

Comments

  1. என்னையே நான் மறந்துவிட்டேன் தோழா அருமை அருமை இன்றும் நம் உணவில் பல மாற்றங்கள் வந்தாலும் நம் பழைய சோறும் மோரும் வெங்காயமும் மாறவில்லை இலங்கையாக இருந்தால் என்ன இந்தியாவாக இருந்தால் என்ன எங்கு இருப்பினும் பிறப்பினும் தமிழன் தமிழனே

    ReplyDelete
  2. உங்களுடைய பதிவு,
    ஒவ்வொரு பதார்தத்தையும் நானே ருசித்த உனர்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...