Skip to main content

ஆண்களுக்கான பெண்ணியம்

பெண்ணியம், ஆண்களுக்கிடையிலான உரையாடலாகவும் கிளைவிட வேண்டும்.ஆண்மையை ஒழிக்க ஆண்கள் நாம் தான் முன்வர வேண்டும். தேசியத் தலைவர் சொன்னது போல் எங்கள் ஆழ்மனதில் இருந்து தான் மாற்றம் ஆரம்பிக்க வேண்டும்.

ஆண்மை எனும் கருத்தியல் ஆண்களாகிய எங்கள் மேலாதிக்கத்தை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டது. நாம் பேசும் பெண்ணியத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைப்பாடு, அது பெண்மை சார்ந்ததாகவே இருப்பது தான்.

பெண்ணியம் என்பது வெறுமனே பெண்களுக்கான விடுதலை மட்டுமல்ல, அது ஆண்மையெனும் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துடிக்கும் ஆண்களுக்குமான விடுதலை தான்..இதற்கான வேலையை ஆண்களும் செய்தாக வேண்டும். ஆண்கள் பேசும் பெண்ணியம் ஆண்மையை கேள்வி கேட்க வேண்டும்.!
ஊர் எங்கும் பெண்ணியம் பேசும் ஆண்கள் அனைவரையும் அழைத்து, அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தால், அப்போதும் பெண்களுக்கு அதிகாரத்தில் சம பங்கு கிடைக்க வாய்ப்பில்லை.

ஆண்கள் பேசும் பெண்ணியம், ஆண்கள் இதுவரை அனுபவித்து வந்து ஆனெனும் சலுகைகள், ஆதிக்கத்துக்கு விரோதமானது! It is against the collective interest of men. ஆகையினால் நாங்கள் எங்களுக்கு,எங்கள் interestsக்கு எதிராக செயல்பட வேண்டும்! எங்கள் சலுகைகளை, ஆதிக்கத்தை, மீளாய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஓடுக்குமுறையை ஏவுபவன், எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு பக்க பலமாக நிற்கலாம்? அவர்களிடம் சென்று அவர்கள் முழக்கத்தையே, அவர்களுடன் இருந்து எழுப்புவதனால் என்ன பயன்? ஆண்கள் மத்தியில் நாம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கிவிட்டோம்? எதை சாதித்துவிட்டோம்?

How are we men going to get rid of or question the hegemonic masculinity that serves the collective interest of us as males? How are we going to work against our own collective interests?

பெண் விடுதலை எல்லாம் சரி, எதிலிருந்து பெண்கள் விடுபட துடிக்கிறார்கள்? அவள் விடுதலைக்கு விரோதமாக இருக்கும் நிறுவனங்கள், சாஸ்திரங்கள், கட்டமைப்புகள் அனைத்துமே ஆண்களாகிய எமது அதிகாரத்தை நிறுவவே அவளை அடிமைப்படுத்தியிருக்கிறது! அவளின் சமத்துவத்துக்கு இடையூறாக இருப்பது நமது சலுகைகள் தான்.

How well do we understand our privilege as men?

ஆண்மைக்கும் அதிகாரத்துக்கும் ஒரே பண்புகள் தான் இருக்கிறது! ஆண்மை அதிகாரத்தின் மொழி! அதற்கு அடக்க மட்டும் தான் தெரியும்! அதற்கு சமத்துவத்தை எப்படி புரிய வைப்பது? அதனால் தான் அதிகாரம் பெண்களின் சிந்தனையில் இருந்து உடல் வரை அனைத்திலும் தலையிடுகிறது.

"பொம்பளைப் பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்"னு அடக்கமுறையையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தி, பெண்களுக்கு அதை சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்தும் இந்த ஆணாதிக்க சமூகம் எப்படி அவளிடம் நீ அடங்காதே, ஒடுங்காதே என்று சொல்லும்? ஆண்மையெனும் அதிகாரத்தின் மொழியை எப்படி மாற்றுவது?

ஆண்மை அதிகாரத்தின் மொழியென்று நாம் சொல்லும் போது, அந்த அதிகாரத்தை கைப்பற்றிய திராவிடமும், கைப்பற்ற துடிக்கும் தமிழ் தேசியமும் அந்த மொழியை பேசலாமா? பேசுகிறதே! என்ன செய்ய?

நாம் அதிகாரத்தின் பண்புகள் என்று வரையறை செய்த அனைத்து பண்புகளும் ஆண்மையின் பண்புகள் தான். முறுக்கு மீசைகளும், ஆண்ட பரம்பரை கதைகளும், வீர வரலாறும், எல்லாமே ஆண்களின் masculinityக்கான validationஆகவே கட்டமைக்கப்பட்டிருக்கு. ஆண்மையும் அதிகாரமும் ஒருசேர வளர்கிறது!

விடுதலை புலிகளின் வீரத்தை முறுக்கிய மீசைகளை விட, கட்டிய கொண்டைகளே அதிகம் பேசியது. அந்த இயக்கத்தில் அதிகார மொழியாக 'ஆண்மை' இல்லை!
ஆனால் நம் சமூகத்தில் ஆண்கள் கட்டமைத்த பெண்மையெனும் கருத்தியலில் பெண் என்பவள் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களிள் பிரதிநிதியாகவே இருக்கிறாள்! 

ஆண்மை தொடர்ந்து அதிகாரத்தின் மொழியாக இருக்க காரணம் என்ன? கோவில், ஆகமம்,சடங்கு, ஆன்மிகம், ஊடகம்,விளம்பரங்கள்,கலை, இலக்கியம், பாடல்கள்,கவிதைகள் என்று சமூகத்தின் சிந்தனையை செதுக்கும் அனைத்திலும் ஆண்மை தொடர்ந்து அங்கீரகரிக்கப்பட்டு வருகிறது.

ரொம்ப எல்லாம் போக வேண்டாம், ஒரு தமிழ் news channelஅ பாருங்க, அதில் செய்தி வாசிக்க பெண் ஒருத்தி இருப்பாள், ஆனால் கருத்து சொல்லும் ஆர்வலர்கள்,expert panel எல்லாத்திலும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

திரைப்படங்களில், பாடல்களில் சொல்ல வேண்டுமா? ஏன் விளையாட்டு போட்டிகளில், cricket, football?..

இவற்றை எல்லாம் மாற்ற பெண்களை விட ஆண்கள் நம் பங்களிப்பு தான் அதிகம் தேவைப்படுகிறது. பெண்ணியம் பேசணும்! ஆனால் நாம் பேசும் பெண்ணியம், பெண்ணுக்கான உபதேசமாகவோ, முழக்கமாகவோ இருப்பதை விட ,அது ஆண்மை எனும் collectiveஇல் இருந்து நாம் எப்படி விடுபட வேண்டும் என்பதற்கான உரையாடலாக இருக்க வேண்டும்.

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர்
25/9/2018




Comments

  1. சார், என்ன please unblock pannunga Twitter il ...

    My I'd: @qN3Dr7YamLL8DAH

    Please, I don't know why you blocked me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக