Skip to main content

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct).

'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது.

இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக்கு தெரிந்தன. 

போர் விமானிகளாய் அந்த பெண்கள் கூட்டி பெருக்கிய ஜெர்மன் கவச வாகனங்களும், சிறு சிறு குழுக்களாக பிரிந்து snipers ஊடாக அவர்களது துல்லிய பார்வைகள் துளைத்து, பிளந்து கிடந்த, இட்லர் படையினரின் நெற்றிகளும், அது வரை காலமும் அசைக்க முடியாத ஆண்மை வெறியுடன் அலைந்த அந்த நாசி மிருகங்களின் குருதியை உறைய வைத்தது..அங்கே அவர்கள் கட்டமைத்த பெண்மையே அவர்களது ஆண்மையை வீழ்த்தியது.

அதனால்,

ஒரு பாலினத்தின் 'தனி வேலை' என்று எதுவும் இல்லை. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், தன் இனத்தை வளர்ப்பது மட்டுமே எல்லா பாலினத்தினதும் வேலையாக இருக்கும். சமூகம், நாகரிகங்கள் கட்டமைக்கும் 'வேலைகள்', கடமைகள், அதிகாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன, அதில் அதிகாரம் தொடர்பான வேலைகள் ஆண்களுக்கும், அதிகாரத்திற்கு சேவகம் செய்யும் வேலைகள் பெண்களுக்கும் 'ஆண்மை' எனும் கருத்தியலின் அடிப்படையில் கால காலமாக வகுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த அடக்குமுறையின் நடைமுறையை உடைப்பது தான் பெண்ணியம்.

பெண்களை முடக்கும் பெண்மையை உடைக்கும் கருத்தியலே பெண்ணியம், அதனால் ஒரு பெண்ணியவாதி, ஆண்களாகிய நாம் வரையறை செய்யும் பெண்மை எனும் பண்புகளுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறு.

நம் சடங்குகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் எப்படி இருக்கு என்று பாருங்கள். உதாரணத்திற்கு ஒரு காலத்தில் திருமணமான பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது என்றொரு சமூக எதிர்பார்ப்பு இருந்தது..

என் மனைவி தான் விரும்பும் வேலையை செய்ய கூடாது என்று சொல்ல நான் யார்? திருமணம் என்பது இன்னொருவரின் இயல்பு வாழ்க்கையை கெடுத்து, அவரை வீட்டுக்குள் முடக்கும் சடங்கா? ஒரு ஆண் பெண்ணின் உழைப்பில் வாழ அவமானப்படுவான் என்றால், ஒரு சுயமரியாதை உள்ள பெண்ணுக்கும் அந்த மான உணர்வு இருக்காதா? ஒரு பெண் உழைக்க செல்வதினால் உறவுகள் முறியும் என்றால், அந்த உறவு ஒரு சிறை கைதிக்கும், jailerக்கும் உள்ள உறவாக தான் இருக்கும்! அது காதலால் கட்டமைக்கப்பட்ட கணவன் மனைவி உறவாக இருக்காது. அப்படிப்பட்ட வலிமையற்ற காதலையும், திருமணத்தையும் செய்து வாழ்வது, அற வாழ்வாகாது.

ஒரு பெண் எதை உடுக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் இருந்து, அவள் திருமண வாழ்க்கைக்கு பின் என்னவாக வாழ வேண்டும் என்பது வரைக்கும் அவள் சார்ந்த அனைத்தையமே ஆண்களாகிய நாம் பெண்மை எனும் ஒரு சமூக கோட்பாடு ஊடாக கட்டமைக்கிறோம். இந்த கட்டமைப்பை தொடர்ந்து வலியுறுத்த எத்தணிக்கும் ஆண்கள் எவ்வளவோ பேர் நம் மத்தியில் இன்னும் உலாவி கொண்டு தான் இருக்கிறார்கள். 

இந்த நிலை மாற வேண்டும் என்றால், ஆண்களாகிய நாம் நமக்கிடைய ஒரு பெண்ணிய உரையாடலை நிகழ்த்த வேண்டும். எப்படி பெண்களை முடக்கும் பெண்மையை உடைக்கும் கருத்தியலே பெண்ணியம், என்றேனோ, அதே போல் ஆண்களை ஆதிக்கவாதிகளாக மாற்றும் ஆண்மை எனும் கருத்தியலை உடைக்க வேண்டியது ஒவ்வொரு ஆண்மகனின் ஆழ்மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய ஒரு மாற்றம்..

ஒரு சில வருடங்களுக்கு முன் வரை கோபம் வந்தால் பெண்களை இழிவாக எல்லாம் பேசியிருக்கிறேன். என் கோபம் தான் எனது ஆழ் மனதின் உண்மை நிலையை sub conscious mindஇன் வன்மத்தை வெளிப்படுத்திகிறது. அது தவறு என்று புரிந்து கொண்டு, 
என்னை நான் மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள ஆரம்பிக்கும் போது,
என் சுயத்தை ஆட்டி படைத்த ஆண்மை எனும் கருத்தியிலில் இருந்து விடுபட்ட போது, 
வீரம், அறம் எனும் பொதுவான மனித பண்புகளுக்கு பாலின அடையாளம் கொடுக்காது, அவற்றை பாலினங்கள் கடந்த மனித பணப்பை, உயிரிய பண்பாய் பார்க்க வெளிக்கிடும் போது,
தான்,
கொஞ்சம் கொஞ்சமா கோபமும் எனக்கு ஒரு ஆக்கப்பூர்வமான கருவியாக மாறுது.

ஆண்மை எனும் ஒரு ஆதிக்க கருத்தியலை. வீழ்த்தும் போதும் இப்படி நிறைய மாற்றங்கள் நமக்குள் ஏற்படும்

பெண்ணிய உரையாடல்கள், பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை மட்டும் விடுவிக்காது, அது ஆதிக்க வெறியில் இருந்து ஆண்களையும் தான் விடுவிக்கும்.

நன்றி
தமிழுடன்
Mr. பழுவேட்டரையர்

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...