Skip to main content

தமிழர்களிடம் இலங்கை முஸ்லிம் தலைமைகள் எப்போது மன்னிப்பு கேட்க போகிறார்கள்?

தமிழினப்படுகொலையில் சிங்கள அரசோடு நகமும் சதையுமாக இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளும் தலைமைகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத, வெளிப்படையான உண்மை. 

இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பான எல்லா உரையாடல்களிலும் எப்படி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது பேசப்படுகிறதோ, அதே போல கிழக்கில் இருந்து முஸ்லிம் ஊர்காவல் படையால் வெளியேற்றப்பட்ட தமிழர்களின் வரலாறும், மொழியுரிமையில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரையிலான அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் தலைமைகளின் தமிழர் விரோத போக்கும் பேசப்பட வேண்டும். 

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சிங்களத்தின் பயங்கரவாதத்தால் அதிக உரிமைகள், உயிர்கள், உடமைகளை இழந்தது ஈழத்தமிழர்கள் தான். 

ஆனால் இன்றோ ஈழத்தமிழர்கள் மீதே பழியை திருப்பி போட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். 

குறிப்பா சமீபத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தேசியத் தலைவருடனான சந்திப்பு பற்றி பேசிய ஒரு பேச்சு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே பதிவிட்ட பெரும்பாலான முஸ்லிம் சகோதரர்கள், தமிழர்களையும் இயக்கத்தையும் தங்கள் முதன்மை விரோதிகளாக முன்னிருத்தி வன்மத்தை கொட்டினார்கள். காத்தான்குடி படுகொலை, வடக்கில் இருந்து முஸ்லிம் வெளியேற்றம் பற்றி தான் அதிகம் பேசினார்கள்.

தமிழர்கள் நாமும், நமது முஸ்லிம் சகோதரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். 

காத்தான்குடி படுகொலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு, இருப்பினும் அதை அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள், ஆனால் தமிழர்கள் நாம் அந்தளவுக்கு தீவிரமாக ஏன் முஸ்லிம் ஊர்காவல் படையின் படுகொலைகளை பற்றி பேசுவதில்லை? 

கிழக்கில் நடந்த மிகப்பெரும் படுகொலையான, தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம் ஊர்காவல் படை செய்த வீரமுனை படுகொலை பற்றி நாங்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?
தமிழர்கள் உயிர்களுக்கு மதிப்பில்லையா? இல்லை முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை பேச கூடாது என்று ஏதாவது வாய் பூட்டு சட்டம் இருக்கிறதா?
அதுக்கு பிறகு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தவறான நடவடிக்கை என்று இயக்கமே ஏற்றுக்கொண்டு மன்னிப்பும் கேட்டது. இலங்கையில் இப்படி எந்த தரப்பும் இன்னொரு குழுமத்திடம் மன்னிப்பு கோரியதில்லை. ஆனால் இயக்கம் அதன் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டது. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு விரோதமாக தானே செயல்பட்டு வருகிறார்கள்?. அதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து யார் மன்னிப்பு கேட்க போறது. 

ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெரும்பான்மை இனத்தோடு, அவர்களுக்கு துணையாக நிற்பது என்பது அவர்களின் உரிமை. அதை நான் மதிக்கிறேன். தமிழர்களுக்கு யாரோடும் கூட்டணி வைத்து போராட வேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் சிங்களவர்களிடம் உங்கள் விஸ்வாசத்தை நிரூபிக்க தமிழர்களை குற்றவாளிகளாக சித்தரித்தால், அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். 

உண்மையான நல்லிணக்கம் பிறக்க வேண்டும் என்றால், உண்மையை உள்ளபடி பேச வேண்டும். பேசுவோம்.

-@mrpaluvets
10/02/2026

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...