இன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருக்கும் JVP அல்லது NPPஐ ஏதோ ஒரு மாபெரும் புரட்சிக்கர இயக்கம் போல சிலர் சித்தரிப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.
சிங்கள தேசத்துக்குள் இருந்த இடதுசாரி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரி அமைப்புகளை தேடி தேடி வேட்டையாடி கொன்று குவித்த JVP எப்படி ஒரு புரட்சிக்கர அமைப்பாகும். ? அது சிவப்பு சட்டை அணிந்த மற்றுமொரு சிங்கள இனவாத அமைப்பு தான்!
சரி கதைக்கு வருவம்.
70கள் காலப்பகுதிகளில், JVPயின் முதல் கிளர்ச்சி/புரட்சி (ஏதோ ஒன்று) எப்படி தோல்வியில் முடிந்தது என்று தேடி பார்த்தால், ஒரு நல்ல ஜனரஞ்சக நகைச்சுவை திரைப்படத்துக்கான 10-15 scriptsஏ அதில் கிடைத்து விடும்.
மார்ச் 3ஆம் திகதி 1971ஆம் ஆண்டு, தென்னிலங்கையில் உள்ள JVP தலைவர் ரோஹன விஜயவீரவின் வீட்டில் ஒரு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
இலங்கையில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவது தொடர்பான திட்டம் பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் அது.
அந்த நேரத்தில் JVPக்குள் ஒரு சகோதர யுத்தமொன்றும் ஓடிக்கொண்டிருந்தது. JVPக்குள் சனத் மற்றும் லொக்கு அத்துல என்ற இரண்டாம் கட்ட தலைவர்களுக்கிடையே இரண்டு பிரிவுகள் இருந்தன. இதில் ரோஹன விஜயவீரவுக்கு நெருக்கமாக இருந்தது சனத் பிரிவு. சனத் என்ற இரண்டாம் கட்ட தலைவன் தான் JVPஇன் மலையகத் தமிழர்களுக்கு எதிரான இனவாத கருத்தியலை உருவாக்கியவன் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த இரண்டு பிரிவும் அன்று சந்திக்க இருந்தது. ஆனால் சந்திப்பு தொடர்பான செய்தி எப்படியோ கசிந்து, சிங்கள காவல்துறை அந்த இடத்தை raid செய்தது, உடனடியாக ஆளுக்கொரு பக்கமாக அங்கு கூடியிருந்த JVPயினர் தப்பி ஓடினார்கள். ஒரு சில நாட்களிலேயே ரோஹன விஜயவீர கைது செய்யப்படுகிறார். அவரை யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் அடைத்து வைக்கிறார்கள்.
தலைமை அடைப்பட்ட போதிலும், தாக்குதல் நடவடிக்கையை கைவிட கூடாது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தார்கள். குறிப்பாக லொக்கு அலுத்தின் குழு, காவல் நிலையங்களை தாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். சனத் குழுவுக்கு இதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ஆனாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஏப்ரல் 5 1971ஆம் ஆண்டு பின்னேரம் 5 மணிக்கு இலங்கை முழுவதும் உள்ள காவல் நிலையங்களை தாக்குவது என்று முடிவெடுத்தார்கள். இந்த முடிவை பற்றி லொக்கு அழுத் குழுவுக்கு Telegram மூலமாக ரகசிய மொழியில் செய்தி அனுப்பப்பட்டது. அவர்கள் பின்னேரம் 5 மணிக்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை காலை 5 மணி என்று புரிந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் வெல்லவாய எனும் ஊரில் உள்ள காவல் நிலையத்தின் மீது காலையிலேயே தாக்குதலை நடத்தியதால், இலங்கை முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் alert ஆகி விட்டது. இது முதல் சுதப்பல்.
அப்போது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது லொக்கு அழுத் தரப்பு மட்டும் தான்..ரோஹன விஜயவீரவுக்கு நெருக்கமான சனத் குழு, யாழ்ப்பாணத்துக்கு சென்று ரோஹன விஜயவீரவை மீட்டு வரும் பணியை செய்வதென்று முடிவு செய்தது.
அந்த பொறுப்பு பியத்திலக்க என்ற ஒரு தோழரிடம் கொடுக்கப்பட்டது. அவரும், அவரது தோழர்களை அழைத்து கொண்டு யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் திடீர் என்று நொச்சியாகம எனும் ஊரில் வண்டியை நிறுத்த சொன்னார் பியத்திலக்க. வண்டியில் இருந்து இறங்கிய அவர். தான் இன்னொரு குழுவொன்றையும் அழைத்து வர வேண்டும் அதனால், மற்றவர்களை யாழ்ப்பாணத்துக்கு தொடர்ந்து பயணிக்க சொல்லிவிட்டு அவர் அங்கேயே நின்று விட்டார். அதன் பின்னர் உடனடியாக அங்கிருந்த ஒரு கோவில் ஒன்றில் சென்று தஞ்சமடைந்துவிட்டார்.
போப்பகே, உயனகொட என்ற இரு தோழர்களின் தலைமையில் கொழும்பிலும் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது. காலையிலேயே தாக்குதல் ஒன்று சுதப்பியப்படியினால், கொழும்பில் உள்ள காவல் நிலையங்கள் High alertஇல் இருந்தன. அதனால் அந்த teamஉம் கொழும்புக்குள் நுழைய முன்னமே பானதுரை என்ற ஊரில் உள்ள ஒரு சைவ கோவிலில் தஞ்சைமடைந்தார்கள். இப்படியாக ரோஹன விஜயவீரவுக்கு நெருக்கமாக இருந்த எல்லா இரண்டாம் கட்ட தலைவர்களும் தாக்குதல் நடத்த வேண்டிய நாளில், தமிழ் கோவில்களுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இது தான் இவர்கள் புரட்சி செய்த லட்சணம். லொக்கு அழுத் அணி மட்டும் தான் தாக்குதலை நடத்தியது. ஆனால் அவர்களின் தாக்குதலும் தோல்வியில் தான் முடிந்தது. அந்த சண்டையில் லொக்கு அலுத்தும் சுட்டு தள்ளப்பட்டான்.
மற்ற எல்லாம் இரண்டாம் கட்ட தலைவர்களும், ஏதோ ஒரு சைவ கோவிலில் ஒளிந்து கொண்டார்கள். இவர்களை நம்பி சென்ற சில அப்பாவி சிங்கள இளைஞர்கள் மட்டும் தான் கடைசியில் செத்து மடிந்தார்கள்.
தமிழர்களுக்கு எதிராக இன்று வரை இனவாதத்தை கக்கும் இந்த கூட்டம் அன்று தங்களை பாதுகாத்து கொள்ள இதே தமிழர்களின் கோவில்களுக்குள் தான் தஞ்சம் புகுந்தார்கள் என்பதை நாமும் அடிக்கடி இவர்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கு.
-mrpaluvets
14/01/26
Comments
Post a Comment