டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு.
தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில்
EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான்.
விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம் சம்பளம் , சாராயம், குடும்பத்தினருக்கு அரச வேலைகள், பதவிகள் வழங்கப்பட்டது.
இலங்கை வடக்கில் உள்ள தீவக பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பல படுகொலைகளை, ஆட்கடத்தல், போதை பொருட்கடத்தல், போன்ற குற்ற செயல்களை செய்து வந்தான். தென்னிலங்கையில் என்ன ஆட்சி மாற்றம் நடந்தாலும், இவனுக்கு நிச்சயம் ஏதாவதொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வந்தது. இவன் செய்த கொடூர செயல்களிலே மிகவும் கொடூரமானது ஆதரவற்று இருந்த சிறுவர்களை கடத்தி அடிமைகளாக விற்றது தான். எண்ணற்ற தமிழ் சிறுவர்கள், குறிப்பாக ஆண்கள், இவனது கும்பலால் கடத்தப்பட்டு, வெளிநாட்டு மாபியாக்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இந்த குற்றங்கள் குறித்தான ஆதாரங்களை வெளியே கொண்டு வந்த ஸ்டீபன் சுந்தரராஜ் எனும் World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரையும் இவனது கும்பல் படுகொலை செய்தது.
இப்படி இந்த மிருகம் செய்த படுகொலைகள் குற்றங்கள் சிலவற்றின் பட்டியல்..
1989 (சென்னை, இந்தியா): ஒரு 10-வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த குற்றத்துக்காக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டான். அதற்கு பிறகு சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இவன் மீது வழக்கிருக்கு.
1 ஜனவரி 1993 (கொழும்பு): தர்மலிங்கம் செல்வகுமார் என்ற முன்னாள் ஈ பி டி பி உறுப்பினர் ஒருவர் டக்ளசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததற்காக கடத்தப்பட்டு, சித்தரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
90களில் ஈபிடிபி சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது.
2 நவம்பர் 1999 (கொழும்பு): தமிழ் வார பத்திரிகை தினமுரசு இலக்கிய மற்றும் தலைமை ஆசிரியரான அற்புதராஜா நடராஜாவை அவரது டிரைவர் உடன் சுட்டுத் தள்ளினார்கள் இந்த ஈபிடிபியினர்.
19 அக்டோபர் 2000 (யாழ்ப்பாணம்): மைல்வாகணம் நிமல்ராஜன் – யாழில் உள்ள Uthayan, BBC தமிழ் & சிங்கள சேவைகள், விரகேசரி, போன்ற ஊடகங்களுக்கு எழுதும் பத்திரிகையாளர் ஈபிடிபியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2 மே 2006 (யாழ்ப்பாணம்): சுரேஷ் குமார், ரஞ்ஜித் குமார் – Uthayan பத்திரிகை ஊழியர்கள் ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
13 மே 2008 (யாழ்ப்பாணம்): மகேஸ்வரி வேலாயுதம் – மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் சமூக நலத் துறை ஆலோசகர்,ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்.
2009: ஸ்டீபன் சுந்தர்ராஜ் – World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்
2012 (நெடுந்தீவு): 12-வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு ஈபிடிபி காடையரால் படுகொலை செய்யப்பட்டாள்
இப்படி ஆயிரக்கணக்கான குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்த மிருகம் ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவன் கைது செய்யப்பட்ட செய்து தமிழர்கள் மத்தியில் கொண்டாட்டத்துக்குரிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
-mrpaluvets
08/01/26
Comments
Post a Comment