1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.
1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது.
அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது.
கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது.
அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு எதிராகவும் தான் வாதாடினார். அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாமல் வறுமையில் வாடிய சிங்கள கிராமங்களில் உள்ள மக்களின் மீதும் Martial law பாய்ந்தது. அவர்களுக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொன்னம்பலம் ராமநாதனின் நடவடிக்கையால் விடுதலையான 8000க்கு மேற்பட்ட சிங்களவர்களில் இப்படிப்பட்ட கூலித் தொழிலாளர்களும் அடங்குவார்கள்.
Martial lawஆல் ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் விவரங்களை எல்லாம் சேகரித்து அவர்களுக்கான நீதியையும் பெற்று கொடுத்தார் ராமநாதன். அதனால் தான் சிங்களவர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார்கள்.
ராமநாதன் மற்றும் அன்று தலையிடாமல் Martial law தொடர்ந்து நீடித்திருந்தால், இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களின் கோபம், கண்டிக்கு வெளியே வாழும் அப்பாவி சோனகர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கும்.
ராமநாதன் ஒரு சிக்களுக்குரிய அரசியல்வாதி என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் 1915இல் அவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாதாடினார் என்று பொது புத்தியில் ஏற்றப்பட்ட கதையானது ஆதாரமற்ற கட்டுக் கதை.
Martial law தண்டனை கட்டனத்தால் பாதிக்கப்பட்ட சில சிங்கள ஊர்களை பற்றிய விவரத்தை, பதிவோடு இணைக்கப்பட்டிருக்கும் ராமநாதன் உரையின் சில பக்கங்களில் காணலாம்.
-mrpaluvets, 08/02/26
Comments
Post a Comment