Skip to main content

சங்கீயின் விஜயதசமி கதையும் என் பதிலும்

ட்விட்டர் தளத்தில் ஒரு சங்கீ (சரவணன்)இந்த பதிவை போட்டிருந்தார் 
👇

// ரெண்டு நாளா பொழுது போகலை...

அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேசினேன்...

'டேய்...! 
சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு...

 ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு....
 பயன்படுத்திக்கிறியா..?'

நண்பர் ஆர்வமானார். 

'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா...
 அதுமட்டுமில்ல... 
அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு...

 உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன்...

 நான் என்ன செய்யணும் சொல்லு'

நான் சொன்னேன்,

'இன்னைக்கு விஜயதசமி...

 வித்தியாரம்ப நாள்...
 இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய்...

அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து...

ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு...

 அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க.

இதுல குரு தட்சணைன்னு...

 அங்க இருக்கிற பார்ப்பனருக்கு துண்டு வேஷ்டி துட்டுன்னு காணிக்கை வேற கொடுப்பானுங்க...'

நான் பேசப்பேச நண்பருக்கு குஷி தாங்கலை...

 ஆச்சரியமாய் என்னிடம் கேட்டார்,

'நீயாடா இப்படி அறிவுப்பூர்வமா பேசுற?

 சங்கி பயல்களுக்கு கொடூரமா முட்டுக் கொடுப்பியேடா....

இந்த விஷயத்துல நான் என்ன செய்யணும்னு சொல்லு. உடனே செய்யுறேன்'.

நான் அவனிடம் கேட்டேன்,

'உனக்கு ஸ்கூலுக்கு போற வயசுல பேரப்பிள்ளைகள் இருக்கா?'

சடாரென பதில் சொன்னான்,

'ஆமா..! என் மகள் வயித்து பேரன் இருக்கான்'

நான் தொடர்ந்தேன்,

'நீ என்ன பண்ற..! 

உன் பேரனை தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்கு போயி,

அங்க கிடக்கிற பிணம் எரிச்ச சாம்பலை ஒரு தட்டுல பரப்பி,

அரைகுறையா வெந்து கிடக்கிற எலும்பு துண்டை அவன் கையில கொடுத்து,

அங்க வச்சு அந்த சாம்பல்ல...

 அவனுக்கு ஆனா ஆவன்னா எழுத சொல்லி தர்ற. 

சொந்தக்காரங்க எல்லாத்தையும் மறக்காம கூட கூட்டிட்டு போயிரு...

 அந்தப் பையன் எழுத ஆரம்பிக்கும் போது...
 சொந்தக்காரங்கள ஒப்பாரி வைக்கச் சொல்லு.

அத படம் புடிச்சு யூடியூப்ல போட்டு,

கலைவாணி முன்னால் தான் என்றல்ல...

 கல்லறையில் எழுதினாலும் கல்வி அறிவு வரும்; வளரும்னு...

 ஒரு பஞ்ச் டயலாக் போடுற.

இதுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்சும் வியூசும் கிடைக்கும். 

அதோடு...

 மக்களுக்கு கோவில்ல வச்சு தான் எழுத்தறிவை ஆரம்பிக்கணும் என்ற மூட நம்பிக்கையும் ஒழியும்...

 உன்னோட கொள்கையும் உலகம் பூராவும் பரவும். 

அங்க இருக்கிற வெட்டியானுக்கு தட்சணையாக...

சீயக்காய், எண்ணை, ஊதுவத்தி வாங்கி கொடுத்துடுவோம்...

சொல்லு எப்போ நாம சுடுகாட்டுக்கு போவோம்..?'

திடீரென நண்பருக்கு ஆறறிவில் ஓரறிவு அவுட் ஆகி போனது. காட்டுக்கத்து கத்தினார்...

'ஏன்டா நாயே..!

 உன் வாரிசுகள் மட்டும் நல்லா இருக்கணும்...

 என் வாரிசுகள்லாம் நாசமா போகணுமா?

 இப்படி ஒரு யோசனையை சொன்னேன்னா...

 என் மருமகன் விளக்கமாறால என்னை அடிச்சு என் மண்டையை பிளந்துருவாரு.

என் மகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுருவாரு.

கடவுள் இல்லைன்னு நான் வீர வசனம் பேசுறதையெல்லாம்...

 மேடையோடு நிறுத்திக்கலைன்னா எனக்கு வீட்டுக்குள்ள இடம் கிடையாது.

இந்த மாதிரி அபசகுனம் பிடிச்ச யோசனைய...

 எவனுக்கும் சொல்லாதே...

இனி செத்தாலும் உன்னோடு பேசமாட்டேன்டா' னு சொல்லி போனை கட் பண்ணிட்டார்.

அப்போதான் புரிஞ்சது...

 மூடநம்பிக்கை ஒழிப்புன்றதே ஒரு மூடநம்பிக்கை தான்னு..!//
...The end. 

சங்கீயின் ☝️இந்த பதிவுக்கு 
என் பதில் 👇

சங்கீ சரவணன் கதையை கொஞ்சம் பிழையாக சொல்லிவிட்டான். அதனால் அதை கொஞ்சம் திருத்த விரும்புகிறேன். சரவணன் சுடுகாட்டு யோசனையை சொல்லி முடித்தவுடன். அந்த பகுத்தறிவு பேசும் தோழர் சரவணனிடம்: 

"சுடுகாட்டில் சவத்தை எரிப்பார்கள், இடுகாட்டில் சவத்தை புதைப்பார்கள், கோவிலிலோ, பார்ப்பான் அதை மந்திரமாக்குவான்."..

அங்கெல்லாம் எதுக்கு கல்வியை தொடங்க பிள்ளைகளை கொண்டு போக வேண்டும்? 

தமிழர்கள் வீடுகளில் கல்வி என்பது பூசை போட்டு பார்ப்பான் செய்யும் காரியம் அல்ல! 
எண், எழுத்து இரு கண்கலென வாழும் தமிழர்கள், 
கோவில், பார்ப்பானை எல்லாம் காண முன்னமே அறிவை கண்டவர்கள். 

கோவில் கட்ட முன், 
நடுகல் நட முன், 
அகரம் கண்ட ஆதி தமிழினம் 
சுடுகாட்டிலோ, சவ மொழி ஓதுபவன் ஆசி கொண்டோ அவர்தம் கல்வியை தொடங்க வேண்டிய தேவை இல்லை. 

தமிழர்கள், அறிவை அருட்செல்வம் என்றழைத்தவர்கள். அது பார்ப்பானுக்கு பிச்சை போட்டு பெரும் வெற்றிலை சாம்பல் அல்ல. 

தமிழர்கள் உயிர்நாடியான தமிழே ஒரு அருட்செல்வம் தான். 
நா வளைத்து பிள்ளை அம்மா என்றழைப்பது,
நிமிர்ந்து, எழுந்து, பிள்ளை நடப்பது, 
எல்லாமே கல்வி தான். 

தமிழ் பிள்ளைகளுக்கு தட்டேந்தும் பார்ப்பான் எதையுமே எப்போதும் கற்றுக்கொடுத்ததில்லை. அவனிடம் பிள்ளைகள் உழைக்காமல் பிச்சை எடுத்து வாழ்வது எப்படி என்று தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பாடம் தமிழ் பிள்ளைகளுக்கு தேவை இல்லை. 

எங்கள் ஆன்றோர் சான்றோர் போற்றும் தமிழ் தந்த அறம், வாழ்வு வளர்ப்பு, பிறகு பாடசாலை செல்லும் காலத்தில் கற்றறிந்த ஆசிரியர்கள் சொல்லி கொடுக்கும் கல்வி, அது தான் அவர்களை வாழ வைக்குது. உன் பூசை சடங்கு சாம்பிரதாயம் எல்லாம் பார்ப்பானை மட்டும் தான் வாழ வைக்குது. அதனால் சங்கீ நீ விஜயதசமி, அஜித்ததசமிகளில் போய் பார்ப்பானுக்கு பொருள் பிச்சையிட்டு கல்விக்கு விலை பேசு. அந்த வியாபாரம் எங்களுக்கு தேவைப்படாது. 

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனின் பிள்ளைகள் எங்களுக்கு 
எந்த சங்கீயும் பாடம் எடுக்க தேவையில்லை. 

-mrpaluvets 
18/10/25

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...