Skip to main content

சுமந்திரனின் ஹிந்திய தொப்பி

தமிழர் தேசத்தில் நடக்கும் அணைத்து மக்கள் போராட்டத்திலும், மக்களின் கொடியாக, எங்கள் தேசத்தின் நிரங்களாக காட்சியளிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளை நீக்கி விட்டு ஹிந்திய முகவராகிய சுமந்திரன் நேற்று(4/2/2023) ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

புலி நீக்க அரசியலை மும்முரமாக செய்து வரும் சுமந்திரன் கோஷ்டி தற்போது தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளங்களையும் நீக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று உணர்வெழுச்சியோடு தாயகமே கருப்பு கொடியை ஏந்தி போராட்ட களத்தில் சிவப்பு மஞ்சள் எனும் தேசிய நிறங்களால் தெருக்களை நிரப்பிய போது.

இந்தியாவின், அதிலும் குறிப்பாக டெல்லியின் ஏதோ காந்தி ஜெயந்தி நிகழ்வு போல் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது சுமந்திரன் கோஷ்டி.

சுமந்திரனுக்கு தமிழர்களின் அடையாளங்கள் என்றால் allergy போல. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க சிங்களம் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நெருக்கடியான காலத்தில்..

சிங்கள்த்துக்கும் இந்தியத்துக்கும் ஏதுவாக தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்யும் ஒரு அரசியலை தொப்பி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் சுமந்திரன்.

கால காலமாக தமிழின விடுதலைக்கான போராட்டத்தை திசை திருப்ப எமது எதிரிகள் எங்கள் அரசியல் வெளிக்குள் தங்கள் முகவர்களை இறக்கி வேலை செய்து வந்திருக்கிறார்கள். அத்தகைய முகவர்களில் ஒருவர் தான் சுமந்திரன்

சுமந்திரனின் தொடர் செயற்பாடுகள்
▪️சிங்களத்தின் காலம் கடத்தும் நிகழ்ச்சி நிரலுக்கும்,
▪️கூட்டமைப்பின் போக்கை திசை திருப்புவதற்கும்,
▪️புலி நீக்க அரசியலை சனநாயக வெளியில் இயல்பாக்குவதற்கும் மட்டுமே தான் வழி வகுத்திருக்கிறது.

சுமந்திரனுக்கு பின்னரான இலங்கை தமிழரசு கட்சி, மட்டும் கூட்டமைப்பின் நிலை மேலும் குழப்பகரமாக இருக்கும், அந்த சூழலில் ஒட்டு மொத்த இலங்கை தமிழரசு கட்சியின் அரசியலை ஒரு தனி நபருக்குள் சுருக்கி, எஞ்சியிருக்கும் அதன் தமிழ்த்தேசிய பண்புகளை சிதைத்து,

ஹிந்திய சிங்கள நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஒரு பெரும் துரோகத்தை அரங்கேற்ற காத்திருக்கிறார் சுமந்திரன்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தான் நாம் மிகவும் விழிப்புடன் சுமந்திரன் எனும் போலி பிம்பத்தை உடைக்க வேண்டும். அதற்கு அணியம் ஆவோம்.

-Mr. பழுவேட்டரையர்
06/02/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...