Skip to main content

யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள்?

ஈழத்து அரசியல் வெளியில் இதுவரை காலமும் நாம் கண்டிராத அளவுக்கு ஒரு பெரும் சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரழிவு ஒரு கலாச்சாரமாக உருமாரி, இன்று ஒரு சிறு குழுவாக ஒருங்கிணைந்து இயங்கி வருவதை காண கூடியதாக இருக்கு. அந்த குழுவை 'சுமந்திரனின் ரசிக குஞ்சுகள்' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் புலி நீக்க அரசியலின் ஒருங்கிணைப்பு. 2009 க்கு முன் வரை அரசியல் முகவரி இல்லாமல் இருந்த சுமந்திரன் என்பவர், 2009 க்கு பின்னர் தமிழர் அரசியல் வெளியில் இருந்து எங்கள் விடுதலை போராட்டத்தை அந்நியப்படுத்த, அந்நிய சக்திகளால் களம் இறக்கப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசியல் தரகர்.

அந்த தரகரின் ரசிக குஞ்சுகள், பொது வெளியில் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் குடுக்க தையத்தக்க என குதிக்கும் வானரங்களாக செயல்படுகின்றனர்.

▪️புலி நீக்க அரசியலை normalise செய்வது
▪️ஒட்டுக்குழு பண்புகளை அரசியல் வெளியில் விதைப்பது
▪️தேசியத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருப்பவர்களை மட்டம் தட்டி இழிவுப்படுத்துவது
▪️போராட்டத்தை விமர்சிப்பவர்களையும், சிங்களத்திடமும் இந்தியத்திடமும் இணக்கமாக செல்வோரையும் தமிழர் அரசியல் வெளிக்குள் ஊடுருவ வழி வகை செய்து கொடுப்பது
▪️சிங்களத்தின் எதிர்ப்பார்புக்கேற்ப தமிழர் தேசம் மாற வேண்டும் என்ற நச்சு சிந்தனையை விதைப்பது.

போன்ற திட்டங்களின் அடிப்படையில் கருத்தியலை விதைக்கும் வேலையை சமூக வலைத்தளங்களில் இந்த ரசிக குஞ்சுகள் செய்து வருகிறார்கள்.

அதற்காக இவர்கள் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று தமிழர் விரோத சக்திகள் அனைவருடனும் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒட்டுக்குழுக்களின் neo வடிவம் தான் சுமந்திரனின் அணி என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் செயற்பாடுகள் இருக்கிறது.

இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

அதை தொடர்ந்து செய்வோம். 
-Mr. பழுவேட்டரையர்
4/2/2023

Comments

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக