Skip to main content

முக்கோண சாஸ்த்ரியின் நாம் தமிழர் எதிர்ப்பு

2009இல் தாய்த்தமிழகத்தில் ஒரு புரட்சிக்கர சூழல் நிலவியது. திராவிடத்தின் போலி முகம் அம்பலப்பட்டு நின்ற அந்த நேரத்தில். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்த ஒரு கூட்டம், இனி ஏமாறுவதில்லை என்ற முடிவுடன், தமிழை மட்டுமே உறுதியாக பற்றிக்கொண்டு ஒருங்கிணைந்தது.

அந்த ஒருங்கிணைப்பின் முகமாக இருந்தவர், இருப்பவர் தான் அண்ணன் சீமான்.

தாய்த்தமிழகத்தில் துணிச்சல் மிக்க தலைமையின்றி, தெளிவான அரசியல் பார்வையின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் இருந்த தமிழ்த்தேசிய கருத்துநிலையை சீற்றமிகு புலியாக, தமிழர்கள் இணையும் சமத்துவத்தின் புள்ளியாக மாற்றிக்காட்டியவர் அண்ணன் சீமான்.

அந்த எழுச்சி உருவாக்கி தந்த தளத்தில் சரஸ்வதி சபதம் சிவாஜி போல தமிழ்த்தேசியத்தின் ஆ'னா ஆ'வன்னா படிச்சுட்டு வந்தவர்கள் பலர். அதில் தொடங்கி தமிழ்த்தேசிய கருத்து நிலையின் அடிநாதம், பொருள் அறிந்து கொண்டவர்கள் பலர், அப்படி கருத்துநிலை பிடிமானத்தில முன்னேற்றம் கண்டோர், செயல் வடிவில் அதை அமுல்ப்படுத்தி, கள போராளிகளாக உருமாரி, நாம் தமிழரின் படையணியின் ஒரு அங்கமாகி எதிரிகளின் கோட்டைகளை தகர்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஆ னா ஆ'வன்னா லயே நின்று விட்ட சில service செய்யப்படாத, வண்டிகளும், அதன் service செய்யப்பட்ட வாய்களும் ஒரு ஒரத்தில் நின்று கொண்டு என்னத்த கண்ணையாக்கலாக பேசி கொண்டிருந்தார்கள். அதில் சிலர், கிரீஸ் டப்பாக்கலாக உருண்டு வெளியேறிவிட்ட பின்னரும் சிலர் நாம் தமிழருக்கு வெளியே நின்று கொண்டு என்னத்த கண்ணையாக்கலாகவே தங்கள் வியாபாரத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் பாரி சாலன்.

பாரி சாலன் போன்றவர்கள், தொடர்ந்து தங்களுக்கான வியாபார தளங்களை அமைக்க (youtube வியாபாரம்) நாம் தமிழரின் வளர்ச்சியை பயன்படுத்தி கொண்டார்கள். பேசு தமிழா பேசு ராஜவேல், tentu kottai விக்கி, மற்றும் பல youtube வியாபார தளங்கள் தங்கள் புத்திய காட்டியது போல, அரபிக் குத்து எதிர்ப்பாளர் என பலரால் அறியப்பட்ட பாரி சாலனும் தற்போது  தனது புத்தியை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

வெளிப்படையாக நாம் தமிழரையும் அண்ணன் சீமானையும் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார் இந்த youtube வியாபாரி.

அண்ணன் சீமானை மட்டுமன்றி நாம் தமிழரின் மிக முக்கியமான முன்னெடுப்புகளையும்  மிக கேவலமாக விமர்சிக்கும் வேலையை இவர் ஆரம்பித்திருக்கிறார்.

அண்ணன் சீமானின் இருப்பிடத்தை பற்றி திராவிடர்கள் கேவலமாக பேசும் போது, அவர்களுடன் சேர்ந்து அதை கேவலப்படுத்தி பேசுவதாகட்டும் 👇


அண்ணன் சீமானின் உருவ அடிப்படையில் தான் சோழர்களின் உருவத்தை நாம் தமிழர் வடிவமைத்திருக்கிறது என்ற பொய்ய திராவிட ஊடகத்தில் பரப்புவதாகட்டும்.


ஏன் சமீபத்தில், அரசேந்திர சோழன் சார்ந்த நாம் தமிழர் நிகழ்வில் சோழனுக்கு சாதி பட்டம் சூட்ட வந்து, குழப்பத்தை ஏற்படுத்திய சாதியவாதிகளை கூட ஆதரித்து பேசியிருக்கிறார் சாலன். அவர்கள் பக்கம் சரி இருப்பது போலயும், நாம் தமிழர் பக்கம் தான் தவறு இருப்பது போலயும் பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல முப்பாட்டன் முருகனின் புணூலற்ற வடிவத்தையும். நாம் தமிழர் பண்பாட்டு மீட்சியின் மிக முக்கியமான முன்னெடுப்பாம் வீரத்தமிழர் முன்னணியின் சமஸ்கிருதமயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கையை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

அதுவும் ஒரு திராவிட ஊடகத்தில் நாம் தமிழரை சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார்.

அது மட்டுமன்றி. பொது வெளியில் நாம் தமிழரை ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சார்புடைய ஒரு கட்சியாக சித்தரிக்கும் நடவடிக்கையையும்,

நத்தம் சிவசங்கரன் சிக்கலில் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல, வெளியே நின்று கொண்டு இருந்து சிண்டு முடியும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் இந்த முக்கோண சாஸ்த்ரி.


மாட்டிறைச்சி எதிர்ப்பு, கருப்பு மீது வெறுப்பு , சாதியவாதம் என தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சங்கீத்தனங்களோடு இதையும் செய்ய ஆரம்பத்திருக்கிறார் இந்த இழுமிநாட்டி ஆர்வலர்.

இதை விடவும் வெளிப்படையா ஒருத்தனால நாம் தமிழரை எதிர்க்க முடியாது.

தெளிவாக நாம் தமிழர் எதிர்ப்பு, அண்ணன் சீமானை மட்டம் தட்டுதல் போன்ற வேலையை செய்யும் சாலனை இனியும், இப்போதும் யாராவது ஆதரித்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் நாம் தமிழரை வேறு வழி இல்லாமல் ஆதரிக்கும் ஒரு கூட்டமாக தான் இருப்பார்கள்.

நாம் தமிழர் என்பது வெறும் கட்சியல்ல. அது ஒரு இனத்தின் ஒற்றுமையை நோக்கிய கருத்தியல் முழக்கம். அது ஒரு இனத்தின் அணிவகுப்பு.

ஒடுக்கமுறைக்கு எதிரான அணிவகுப்பு.

அதை குளிர் அறைக்குள் இருந்து சாதி பெருமை பேசி, களத்தில் இறங்கி செயல்படாமல் நோட்டை சொல்லும் சகடை மேனி எருமைகள் விமர்சிக்கலாம் என்று நினைத்தால்,

தமிழர்கள் அதை வேடிக்கை பார்த்து கடந்து போவார்கள் என்று நினைக்க கூடாது. அது தப்பு கணக்கு.

கிரீஸ் டப்பா போல, இந்த பால் டப்பாக்களையும் எட்டி உதைச்சுட்டு தன் இலக்கை நோக்கி போய்ட்டே இருக்கும் தமிழ்த்தேசியம்

-Mr. பழுவேட்டரையர்
10/08/2022




Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...