Skip to main content

சீன தூதுவரின் எச்சரிக்கை கட்டுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கொழும்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தோன்றி, கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடி, ஆட்சி கவிழ்ந்து, புது சனாதிபதியாக ரணில் பதவியேற்று, ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய சிங்கள இளைஞர்களை, நன்றி கெட்ட ரணில் அரசு வேட்டையாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த  3 மாதங்களாக அமைதியாக இருந்த சீனா மீண்டும் அதன் வலு'வை தமிழர் கடலில் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்த சீனா, கடந்த மூன்று மாதங்களாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக இருந்த எதிர்ப்பலை சீனா பக்கம் திரும்பாத வண்ணம் கெட்டித்தனமாக அதன் நகர்வுகளை மேற்கொண்டது..

ஆனால் இந்தியாவோ, இந்த நெருக்கடியில் இலங்கையை மீட்க உதவுகிறோம் என்ற பெயரில் IMF உடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் தொடங்கி இலங்கையில் அதானிக்காக மோடி செய்த அரசியல் வரை எல்லா இடங்களிலும் மூக்குடைப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த இந்திய விரோத மனநிலையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டிருக்கு.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சீனா அதன் Yuan Wang 5 எனும் போர் கப்பலை இலங்கைக்கு அனுப்பி இந்தியாவுக்கு மேலும் ஒரு நெருக்கடியை கொடுத்தது.

சீனா அந்த கப்பலை ஒரு ஆராய்ச்சி கப்பல் என்று சொன்னது,  ஆனால் இந்தியாவோ அதை ஒரு உளவு கப்பல் என்று குற்றம் சாட்டி கடுமையாக எதிர்த்து வருகிறது.


இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் கப்பல் இலங்கைக்கு வந்து சேர்ந்தது. அதற்கு இலங்கையும் அனுமதி வழங்கிய அதே காலகட்டத்தில் Pakistan Navy frigate – PNS Taimur எனும் பாகிஸ்தானின் போர் கப்பலும் இலங்கைக்கு வந்தது.

இந்த இரண்டு நடவடிக்கையும் இந்தியா, இலங்கையில்
கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டு வந்த ராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த கப்பல் வருகை சர்ச்சையில் சிங்கள பேரினவாதிகள் வெளிப்படையாக சீனா பக்கம் நின்று குரல் கொடுத்ததையும் நம்மால் காண கூடியதாக இருந்தது.

தற்போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், சீனாவின் இலங்கைக்கான தூதுவர் Mr. Qi Zhenhong கட்டுரை வடிவில் ஒரு ஆப்பை இந்தியாவுக்கு வைத்திருக்கிறார்..

Sri Lanka Guardian இல் வெளிவந்த சீன தூதுவரின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கியமான செய்திகளை இங்கே பார்ப்போம்.

இந்த கட்டுரையின் சீனா Taiwan பிரச்னையை பற்றி பேசிவிட்டு, சீனாவின் One-China Principle- ஒற்றை சீனா கோட்பாடு பற்றி தூதுவர் பேசுகிறார்.

அதன் பின் அந்த கோட்பாட்டை பாத்துகாக்க வேண்டியதன் தேவை பற்றி பேசும் இடத்தில் இலங்கையை தொடர்புப்படுத்தி இந்தியாவையும் அமெரிக்காவையும் தாக்க ஆரம்பிக்கிறார்.

சீனாவின் வழக்கமான ராஜதந்திர உருட்டுகளை தாண்டி, இந்த கட்டுரையில் சீன தூதுவர், சீனாவை இலங்கை இறையாண்மையின் காவலராக முன்னிறுத்துகிறார்.

சீனாவின் போர் கப்பலை, இலங்கையில் நிறுத்த இலங்கை அரசு அனுமதித்தது என்பது, இலங்கையின் இறையாண்மையை நிலைநாட்டும் ஒரு செய்யற்பாடாக சீன தூதுவர் முன்னிறுத்துகிறார்.

அதனோடு மட்டும் நின்று விடாமல், மேற்குலக நாடுகள், இந்தியாவை எல்லாம் இலங்கையின் முன்னாள் ஆக்கிரமிப்பாளர்களாக அடையாளப்படுத்தும் வேலையையும் இந்த கட்டுரையில் குறிப்பாக இந்த பகுதியில்

'Looking back at the great history of the island, Sri Lanka overcome aggression from its northern neighbour 17 times, colonization by the west for 450 years, and an anti-terrorism war for nearly 3 decades, is now still standing in the world bravely and proudly. Any infringement on the national sovereignty, independence and territorial integrity of Sri Lanka shall not be tolerated.'

அவர் செய்கிறார். இதில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதனுடன், சிறுமைப்படுத்துவதுடன் மட்டுமே நின்று விடாமல், அந்த போராட்டத்தையும், சோழ படையெடுப்பையும், Colonialism ஐயும் சம நிலையில் நிறுத்தும் வேலையையும் அவர் செய்கிறார்.

கட்டுரை முழுவதும் சீன தூதுவர்
Any infringement on the national sovereignty, independence and territorial integrity of Sri Lanka shall not be tolerated.
என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இங்கே national sovereignty பற்றிய செய்தியை இலங்கையின் ஒற்றையாட்சிக்கு ஆதரவான ஒரு செய்தியாகவும்.

territorial integrity பற்றிய செய்தியை தமிழர்களின் தாயக, அதிகார பகிர்வு கோரிக்கைகளுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாடாகவும் தான் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கு.

இந்த கருத்தின் ஊடாக சீனாவின் தமிழர் உரிமை சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் எம்மால் உணர கூடியதாக இருக்கிறது. சீனா இலங்கை உறவில், சீனா முழுவதுமாக சிங்கள பேரினவாதத்தின் பக்கம் நகர்ந்திருக்கிறது.

இவ்வளவு நாளும் வெளிப்படையாக சொல்லாமல் இருந்தது, இப்போது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கு.

இந்த கட்டுரை முழுவதிலும் இந்தியாவின் பெயர் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இங்கே சீனா இந்தியாவை இன்னும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் ஒரு தரப்பாகவே, சுய புத்தி இல்லாத ஒரு நாடாகவே சித்தரிக்க முயற்சித்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கட்டுரையின் முடிவில்

Next month, the 51stsession of the UN Human Rights Council will be held in Geneva where human rights issues in Sri Lanka might probably be stirred up again. As the Sri Lankan people are still grappling with severe economic and humanitarian difficulties, many might wonder what those countries who have been always preaching about human rights will actually do.

Will they help Sri Lanka to ease its human rights crisis by providing concrete support? Or will they again use human rights as a cover-up tool to interfere into the island nation’s internal affairs and continue to rub salt into the wound of Sri Lankan people?

ஜெனிவாவில் நடக்கும் அரசியலையும் விமர்சித்து விட்டு முடித்திருக்கிறது.

சீனா தன்னை இலங்கை இறையாண்மையின் பாத்துகாவலராக, அங்கமாக தூதுவரின் கட்டுரை ஊடாக அடையாளப்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில்,இந்தியா யாழ்ப்பானத்தில் இந்து கல்லூரி மாணவர்களுக்கு ஏக் கவும் ஏக் கிசான் ரகு தாத்தா'னு இந்தி பாடம் எடுத்து கொண்டிருக்கிறது.

உருப்பட்ட மாதிரி தான்.

Mr. பழுவேட்டரையர்
27/8/22




Comments

Popular posts from this blog

Shoba Shakthi & Tamil Solidarity Group's 'Group Sex Ideology'

I just dont know where to start, but this story needs to be told. In the last few years I've gained insights into internal problems within numerous Dravidian groups in Tamil Nadu and abroad through interactions on Clubhouse with the current and ex-members of such groups, and in this blog, I aim to shed light on such groups and activists linked to cases of sexual exploitation.  Firstly I would like to discuss about Shoba Shakti. A few months ago, a fellow comrade shared an old article on Shoba Shakthi from a website called Keetru. This article was written by a Human Rights activist called Thamizhachi who was based in France. The article is all about the sexual harrasment Thamizhachi faced through Shoba Sakthi.  Shobha Shakti is an activist/author who operates from France. He is an Sri Lankan Tamil who has made a name by being very critical about the Tamil struggle in Eelam. He calls himself a Dalit/Dravidian activist or Periyarist and is closely connect...

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலின் சாதிய கொலை

இந்த மாதம் 13 திகதியன்று, யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் & கொலையை சுற்றி நிறைய கதைகளும், கட்டு கதைகளும் சமூக வலைத்தளங்களில் பின்னப்படுவதை காண கூடியதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களில் உண்மையோடு சேர்ந்து உண்மையான குற்றவாளிகளும் கதையோடு கதையா தொலைந்து போகிறார்கள். அதனால் நடந்த சம்பவத்தை பற்றியும், அதில் சாதியவாதத்தின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவு ஊடாக நாம் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்த பிரச்சனை பொன்னாலையில் இருந்து தொடங்கவில்லை.  2021/2022ஆம் ஆண்டு கால பகுதியில், அடைக்கலந் தோட்டம் கோவிலில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது.  13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பவித்திரன் என்ற இளைஞன் வட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலந் தோட்டம் கந்தசாமி கோவிலுக்கு அருகில் வாழ்ந்து வந்திருக்கிறார்.  கோவிலை சுற்றி வாழும் மக்கள் மத்தியில் வேளாளர்கள் மட்டும் முக்குவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வாழ்ந்த...