Skip to main content

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு.

சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது 
சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. 

சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல். 
தமிழ் மொழியில் சம்பன் 'சம்மன்' ஆனது, 

சிங்கள மொழியில் அது 'ஹம்பன்'ஆனது

இதன் அடிப்படையில் கடல் வழி வணிகம் செய்ய வந்தவர்கள், கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் என்று அணைவரையும் சிங்களவர்கள்  'ஹம்பன்காரயா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு மதத்தினரை மட்டும் குறிக்கும் சொல்லாக சிங்களத்தில் மாறியது. 

இலங்கையில் வாழ்ந்த கரையோர தமிழ், சிங்கள மக்கள், Portugueseஇன் வருகைக்கு பிறகு மதம் மாறியது மட்டுமன்றி, தங்கள் ஆடைகளையும் மாற்றி கொண்டார்கள். சாரம், அதிலும் குறிப்பாக coloured சாரங்கள் என்பது அதிகம் கரையோர மக்களின் ஆடையாகவே Upcountry சிங்களவர்களால் பார்க்கப்பட்டது.
சிங்களவர்களை 'ஆரியர்களாக' முன்னிறுத்திய, சிங்கள தேசியத்தின் தந்தை தர்மபால, சிங்களவர்களில் உள்ள "தூய இன சிங்களவர்களான" மேல்நாட்டு சிங்களவர்களின் ஆரிய ஆடை கலாச்சாரமே "தூய சிங்கள கலாச்சாரம்" என்று அறிவித்தார். கரையோர மட்டும் Non Kandyan rural சிங்களவர்களை அவர்க்ளை போல மாற சொன்னார்.

அதுவரை சாரம் உடுத்தி வந்த சிங்களவர்களிடம் coloured சாரங்களை தவிர்த்து விட்டு, வெள்ளை சாரங்களை அணிய சொன்னார். 

அதை அநாகரிக தர்மபால எப்படி சொன்னார் தெரியுமா? "சிங்களனே! ஹம்பயா மாதிரி சாரம் உடுத்துவதை நிறுத்து" என்றார்.

'ஹம்பன்காரயா' என்று முஸ்லிம்களை குறிக்கும் சொல்லை, "ஹம்பயா" என்ற இழி சொல்லாக மாற்றி இங்கு பயன்படுத்தினார் தர்மபால.

சம்மாந்துறை(சம்பன் துறை) ஹம்பான்தோட்ட(சம்பன் தோட்ட) போன்ற பல கடலோர பகுதிகளின் பெயராக இருந்த சம்மான்/ஹம்பான் என்ற அடையாளத்தை just like that ஒரு இழி சொல்லாக மாற்றினார் தர்மபால. 

'பறையன்' என்ற சொல் சிங்களத்தில் 'பற தெமலா/தமிழா' ஆனது போல்,
சக்கிலியன் என்ற சொல் சிங்களத்தில் 'சக்கிலி தெமலா' ஆனது போல்,
ஹம்பன்காரயாவை சிங்களத்தில் ஹம்பயா என்ற இழி சொல்லாக, ஒரு இனத்தை தாழ்த்தும், இழிவுப்படுத்தும் சொல்லாக மாற்றினார் தர்மபால. 

தமிழர்களை 'டம்பளர்' என்று சொல்வதும்,
தெலுங்கு தேசிய இன மக்களை 'கொலுட்டி' என்று சொல்வதும்,
அப்பறம், சக்கிலி, சக்குடுன்னு ஒரு மக்கள் கூட்டத்தை இழிவுபடுத்தும் நோக்குடன் அடையாளப்படுத்துவது எல்லாம் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட அதே கேடுகெட்ட அரசியல் தான். 

Don't wear only a sarong like the Hambaya, 
Don't expose the body like the Vedda,
Don't wear a head comb like the Javanese என்றார் தர்மபாலா.
இலங்கையில் சிங்கள ஆதிக்க சாதியினர், தங்களை கூலி தொழிலாளர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட, தலையில் ஒரு சீப்பை இப்படி வைத்திருப்பார்கள்.


இதை எல்லாம் தவிர்த்து விட்டு, சிங்கள ஆரிய ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுமாறு கட்டளையிட்டார் தர்மபால. சிங்களவர்கள் கருப்பு ஆடைகளை தவிர்த்து 'வெள்ளை' நிற ஆடைகளை தான் தங்கள் தேசிய ஆடைகளாக அணிய வேண்டும் என்றார் தர்மபால. 

சிங்களவர்கள் அதிகம் "வெள்ளை" நிற ஆடைகளை பயன்படுத்துவது தங்களை தூய சிங்களவர்களாக அடையாளப்படுத்த தான். தமிழர் தேசத்தில் ஆறுமுக நாவலரும் இப்படி சைவர்களுக்கு வேறு விதமான சட்டங்கள் போட்டார். ஆனால் தமிழர்கள் இதை எல்லாம் கணக்கெடுக்கேல. நமக்கு சாரம் தோது தான் 🙂
நன்றி
Mr.பழுவேட்டரையர்
19/3/2020

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...