Skip to main content

தமிழினப்படுகொலை Facts & Figures

#அறிவோம்ஈழம்

தொடர்ந்து தமிழினப்படுகொலை ஒன்று நடக்கவில்லை என்றும், அதை மறுக்கும் விதமாகவும், ஒரு genocide denier மனநிலையுடன், பல அவதூறுகளும் தவறான செய்திகளும் சிங்கள அரசு மற்றும் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருகிறது. அவற்றில் முதன்மையான அவதூறு இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பானது தான்.

இனப்படுகொலையில், அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட இந்த அவதூறு பரப்பும் மனிதமற்ற காடையர் கூட்டம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அந்த கேடுகெட்ட முயற்சியை முறியடிக்கும் விதமாக இந்த தளத்தில் ஒரு சில ஆவணங்களை, ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக பல மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் பல ஆதாரங்களை திரட்டி, அமபலப்படுத்தி, zero civilian casualty எனும் பெரும் சிங்களப் பொய்யை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்.

அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தான் தற்போது அநேகமான உலக அமைப்பு இறுதி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000,-50,000 என்றளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல மனித உரிமை அமைப்புகள் அந்த தொகையை 160,000க்கு மேல் என்று ஆதாரங்களுடன் நிறுவி வருகிறார்கள். இதில் முதன்மையான ஆதாரமாக, சாட்சியமாக இருப்பது மறைந்த பெருமதிப்புக்குரிய மன்னார் பேராயர் ஜோசப் இராயப்பு LLRC என்று அழைக்கப்படும் இலங்கையின் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு"விடம் வழங்கிய சாட்சியம் தான்.

அதில் அவர் கொடுத்த தொகையின் விவரம் மற்றும்
▪️UN Crisis Operation Group
▪️UN Panel of Experts
▪️World Bank Household Data
▪️LLRC Submissions
▪️Crisis Group
போன்ற அமைப்புகளின் estimateகளை

South African சட்டத்தரணியாகவும், Nelson Mandelaவின்
South African Truth and Reconciliation Commissionஇன் முன்னாள் Commissionerஆகவும், Ban Ki Moonஇன் expert panel Legal advisorஆகவும், UN Commission on Human Rights in South Sudanஇன் Chair personஆகவும் இருந்த Yasmin Zookaவின் International Truth and Justice Project எனும் மனித உரிமை அமைப்பு 2021இல்
வெளியிட்ட Death Toll in Sri Lanka's 2009 war என்ற அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் இறுதிப்போரில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,976ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் range 80,000இல் இருந்து 170,000 வரையில் இருக்கிறது.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை
TNA estimateபடி  87,620
LLRC Submission Estimate 147,000
World Bank Household data estimate 169,796
Crisis Group estimate 100,000

மேலே பகிரப்பட்டிருக்கும் அறிக்கையின் source file கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி
Mr.பழுவேட்டரையர்.Comments

  1. உங்களின் இந்த ஆக்கபூர்வமான பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக