Skip to main content

திமுகவும் கிரீஸ் டப்பாக்களும்

நாம் தமிழருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளில் மிகவும் வேடிக்கையான தேர்தல் நேர பிரச்சார நடவடிக்கை என்றால் அது நாம் தமிழரில் இருந்து விலக்கப்பட்ட கிரீஸ் டப்பாக்களை கொண்டு நாம் தமிழரை அவர்கள் தாக்கியது தான்.

கட்சி தாவும் கிரீஸ் டப்பாக்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு போதும் மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. அந்த டப்பாக்கள் ஊடாக நாம் தமிழரை திமுக தாக்கிய போது, திமுகவின் விமர்சனங்கள் எல்லாமே அவதூறுகளாக தான் வெளிப்பட்டது. திமுகவினர் ராஜீவின் பதிவுகளை கண்டு குதூகலித்தாலும், நாம் தமிழர் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

This is an old strategy that doesn't work anymore. Nevertheless, it was good for NTK. When your enemy makes stupid mistakes, help them in their course of action.

ராஜீவ் போன்றவர்களை பயன்படுத்தி திமுக நாம் தமிழரை தாக்கும் போது
ராஜீவின் நம்பகத்தன்மை, நேர்மை, integrityஐ தான் மக்கள் முதலில் சந்தேகித்தார்கள்.

திமுகவினர் ராஜீவை போன்றோரை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, அண்ணன் சீமான் ராஜீவ் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக இருந்தது.

திமுக ஒரு விதத்தில் நாம் தமிழருக்கு இந்த விஷயத்தில் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜீவ், கல்யாண் கட்சியை விட்டு வெளியேறிய போது கட்சிக்குள் இருந்த சிறு புலம்பல்களும், அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்த பிறகு காணாமல் போய்விட்டது.

அதுவரை அவர்களுக்கு கட்சிக்குள் இருந்து கொஞ்ச நஞ்ச பரிதாபமும், தொலைந்தது. ராஜீவ் திமுகவில் சேர்ந்தது நாம் தமிழருக்கு கிடைத்த ஒரு எதிர்பாரா நன்மை தான். அதற்கு திரு செந்தில்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

திமுகவினர், குறிப்பா செந்தில் குமார் அவர்கள் ராஜீவை ஊர் ஊராக காவிக் கொண்டு, ஏதோ பெரிய பரிசை வென்றது போல் திரிந்தார். கிட்டத்தட்ட எல்லா திமுக பிரமுகர்களின் வீட்டுக்கும் ராஜீவை அழைத்து சென்று உபசரித்தார்கள்.

அவரும் அங்கு நல்ல ஆடு போல் கொழுத்தார். தேர்தல் முடிந்து விட்டது, இனி தான் ஆடு வீட்டில் இருந்து கசாப்பு கடைக்கு அழைத்து செல்லப்படும்.

தமிழன் பிரசன்னா, கரு பழனியப்பன், இவன், அவன் என்ற பலர் பல வருடங்களாக திமுகவுக்குள் ஒரு நல்ல இடத்துக்கு வர முக்கி கொண்டிருக்கும் போது, ராஜீவுக்கு கிடைத்த இந்த திடீர் கவனம், ஒரு காரணத்துடன் வழங்கப்பட்ட கவனம் என்பதை ராஜீவ் உணர்ந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து விட்டது, இனி கொஞ்சம் கொஞ்சமாக அவர் காலாவதியான ஒரு பொருள் என்பதை உணர்வார் என்று நம்புகிறேன்

-Mr. பழுவேட்டரையர்
7/4/21

Comments

  1. Rajivku theriyala Namma election mudinjathum DMK vala etti othaikkapada pora grease dappanu,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக