Skip to main content

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள்.

இது புதிதல்ல, 

திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும்,

ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து,
தனித்து நிற்கும் பலம் இழந்து,
வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது.

இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது.

அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற தேவையான வேலைகள் அனைத்தையும் ஸ்டாலின் குடும்பம் செய்ய ஆரம்பித்துவிட்டது. திமுக எனும் கட்சியின் கட்டமைப்புக்கு இங்கு தீர்மானிக்கும் அதிகாரம் எதுவும் இல்லை. உதயநிதிக்கு அடிபணிவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. திராவிட அமைப்புகள் அனைத்துமே திமுகவின், திராவிடத்தின் அடுத்த தலைமை உதயநிதி தான் என்ற முடிவை ஏற்றுக்கொண்டு விட்டதாக தான் தெரிகிறது.

இங்கே அடுத்த தேர்தலில் ஸ்டாலின்/உதயநிதி இருவருக்கும் போட்டியாக இருக்க போகும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். சீமானின் தலைமைத்துவ தகைமைகள் முன் ஸ்டாலின் உதயநிதி இருவரும் தோற்றுவிடுவார்கள்.

உதயநிதி இனி திமுகவில் முன்நிலைப்படுத்தப்படுவதை, அடுத்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் பல எதிர்க்க கூடும்.
திமுக பாஜகவுடனான தனது current equationஐ மாற்றுக்கொள்ளும் போது, மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு மேலும் அடி வாங்கும்.

அடுத்த தேர்தலில் திமுக போட்டியிட்டு எளிதாக ஜெயிக்க வேண்டும் என்றால், அடுத்த தேர்தல் வருவதற்குள், அதிகாரத்தை பயன்படுத்தி, போட்டியற்ற ஒரு சூழலை திமுக உருவாக்க வேண்டும், போட்டியாக இருக்கும் கட்சிகளை, மாற்றை அழிக்க வேண்டும்!

கருணாநிதி வலிமையாக இருந்த காலகட்டத்திலேயே அண்ணன் வைகோவை வீழ்த்த திமுக முனையவில்லையா என்ன?

அண்ணன் திருமாவின் முதல் தேர்தல் பிரவேசத்தின் போது, பாமகவுடன் சேர்ந்து சாதி கலவரங்களை தூண்டி, அண்ணன் திருமாவின் அரசியல் எழுச்சியை திமுக தடுக்கவில்லையா என்ன?

கால காலமாக இது தானே திமுகவின் modus operandiயா இருந்திருக்கு.

அதே தந்திரோபாயத்தை தான் திமுக தற்போது நாம் தமிழரிடமும் பயன்படுத்துகிறது.
அண்ணன் வைகோ, அண்ணன் திருமா, Captain விஜயகாந்த் போன்றோர் ஒடுக்கப்பட்ட போது, கருணாநிதி எனும் ஒரு தலைமை அந்த மூவரின் புகழையும் செல்வாக்கையும் overshadow செய்து கொண்டிருந்தது, ஆனால் அந்த advantage தற்போது திமுகவிடம் இல்லை.

வெறும் பணத்தையும் அதிகாரத்தையும் மட்டுமே வைத்து தான் அண்ணன் சீமானை வீழ்த்த ஸ்டாலினின் திமுகவால் முயற்சி எடுக்க முடியும்.

இவ்வளவு காலமும் நாம் தமிழர் பணத்தையும் அதிகாரத்தையும் எதிர்த்து தான் அரசியலில் வளர்ந்து வந்திருக்கிறது. ஒரு விதத்தில் இந்த எதிர்ப்பும் நாம் தமிழரின் வளர்ச்சிக்கு உரமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் இந்த சவால்களை நாம் தமிழர் திறம்பட எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை நாம் தமிழர் தம்பி தங்கைகள் மத்தியில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கு. Infact they are looking forward for this battle.

அரசியலில் இந்த அத்தியாயம்..
சீமான் சூழ் திராவிடம்.

-Mr. பழுவேட்டரையர்
10/4/21

Comments

  1. Expected forward for this battle.

    ReplyDelete
  2. துல்லியமான பார்வை! பொருத்தமான அத்தியாய பெயர்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...