1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.
1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது. அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது. கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது. அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீ...