இன்று இலங்கையின் ஆளுங்கட்சியாக இருக்கும் JVP அல்லது NPPஐ ஏதோ ஒரு மாபெரும் புரட்சிக்கர இயக்கம் போல சிலர் சித்தரிப்பதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. சிங்கள தேசத்துக்குள் இருந்த இடதுசாரி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிங்கள இடதுசாரி அமைப்புகளை தேடி தேடி வேட்டையாடி கொன்று குவித்த JVP எப்படி ஒரு புரட்சிக்கர அமைப்பாகும். ? அது சிவப்பு சட்டை அணிந்த மற்றுமொரு சிங்கள இனவாத அமைப்பு தான்! சரி கதைக்கு வருவம். 70கள் காலப்பகுதிகளில், JVPயின் முதல் கிளர்ச்சி/புரட்சி (ஏதோ ஒன்று) எப்படி தோல்வியில் முடிந்தது என்று தேடி பார்த்தால், ஒரு நல்ல ஜனரஞ்சக நகைச்சுவை திரைப்படத்துக்கான 10-15 scriptsஏ அதில் கிடைத்து விடும். மார்ச் 3ஆம் திகதி 1971ஆம் ஆண்டு, தென்னிலங்கையில் உள்ள JVP தலைவர் ரோஹன விஜயவீரவின் வீட்டில் ஒரு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இலங்கையில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவது தொடர்பான திட்டம் பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் அது. அந்த நேரத்தில் JVPக்குள் ஒரு சகோதர ய...
The official website of @mrpaluvets from twitter