Skip to main content

Posts

Showing posts from October, 2025

சங்கீயின் விஜயதசமி கதையும் என் பதிலும்

ட்விட்டர் தளத்தில் ஒரு சங்கீ (சரவணன்)இந்த பதிவை போட்டிருந்தார்  👇 // ரெண்டு நாளா பொழுது போகலை... அதனால கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாய் இருக்கிற என் நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு பேசினேன்... 'டேய்...!  சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் மூடநம்பிக்கைன்னு நிரூபிக்கிறதுக்கு...  ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு....  பயன்படுத்திக்கிறியா..?' நண்பர் ஆர்வமானார்.  'கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்டா...  அதுமட்டுமில்ல...  அந்த சம்பவத்தை படம் பிடிச்சு youtube ல போட்டு...  உலகம் பூராவும் இந்து மதத்தையும் அதோட வழிமுறைகளையும் நாறடிச்சுடுறேன்...  நான் என்ன செய்யணும் சொல்லு' நான் சொன்னேன், 'இன்னைக்கு விஜயதசமி...  வித்தியாரம்ப நாள்...  இந்த சங்கிப் பயலுக அவனுங்களோட பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கோவிலுக்கு கூட்டிட்டு போய்... அந்தக் கோவில்ல இருக்கிற கல்லு சிலைக்கு முன்னாடி உட்கார்ந்து... ஒரு தட்டில் நெல் மணியை பரப்பி குழந்தை கையை பிடிச்சு...  அதுல ஆனா ஆவன்னா எழுத்து எழுதி கல்வியை தொடங்கி வைப்பானுங்க. இதுல குரு தட்சணைன்னு...  அங்க ...