Skip to main content

Posts

சஜித் பிரேமதாசா எனும் மகாதத்தி

முன்னொரு காலத்தில் தமிழ் மொழி உரிமைக்காக, தனி சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடிய ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான ஒரு அற வழி போராட்டத்தின் களமாக இருந்த கொழும்பின் பிரபல கடற்கரை ஓரமான காலி முகத்திடல், கடந்த சில மாதங்களாக சிங்கள தேசத்தின் inconvenienced group of peopleஇன் தற்காலிக குடியிருப்பாக மாறி இருக்கிறது. அந்த குடியிருப்பின் இருப்பால் சிங்கள அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆளும் கட்சியின் இருப்புகள், இருக்கைகள், இருக்கையை பற்றிக்கொண்ட அவர்கள் உடல் தசைகள் எல்லாம் தீ பிடித்து எரிந்தது. சிங்கள தேசத்தில் நடந்த இந்த திடீர் கிளர்ச்சி, ராஜபக்ச குடும்பத்தையே சிவப்பு துண்ட காணோம், போட்டிருந்த ஜட்டிய காணோம் என்று ஓட வைத்திருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த கிளர்ச்சி, இந்த அசாதாரண சூழல் வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அது அந்த நாட்டின் எதிர்கட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். ஆனால் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவோ கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தனக்கு வாய்ப்பு வடிவில் எத்தனை வடை வந்தாலும், அதை கசக்கி, பிழிந்து தூக்கி வீசிவிட்டு வடை போச்சே என்று பின்னர...

தேவை ஒரு Task Force

கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும். தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது. தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும். அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும் இணைந்து செ...

ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள்

ஈழத்தில், விடுதலை புலிகள் என்ற இயக்கம், ஈழத்தின் தனிப்பெரும் இயக்கமாக, ராணுவமாக, உலகத்தமிழினத்தின் முகவரியாக மாற காரணங்கள் பல இருக்கிறது, ஆனால் எல்லா காரணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, மக்கள் விடுதலை புலிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான். மக்களின் நம்பிக்கையை விடுதலை புலிகள் எப்படி வென்றெடுத்தார்கள் என்பதை பற்றி சமீபத்தில் Studies in Conflict and Terrorism journalஇல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை ஆராய்கிறது. அந்த ஆய்வு கட்டுரையின் விவரம் மற்றும் இணைப்பு👇 Kate Cronin-Furman & Mario Arulthas (2021): How the Tigers Got Their Stripes: A Case Study of the LTTE’s Rise to Power, Studies in Conflict & Terrorism, DOI: 10.1080/1057610X.2021.2013753 இந்த ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய செய்திகளை இங்கே உங்களுடன் பகிர விரும்புகிறேன்.. புலிகள் தனிப்பெரும் இயக்கமாக மாறியிருக்காவிட்டால், ஒரு சுதந்திர தமிழீழ அரசை உருவாக்கும் அளவுக்கான வளர்ச்சியை ஈழ விடுதலை போராட்டம் எட்டியிருக்காது. இது தொடர்பான ஒரு தெளிவான பார்வையை தராகி சிவராம் அவரது கட்டுரைகளில் முன்வைக்கிறார், அதை ப...

பொருளடக்கம்

அறிவோம் ஈழம் 1) தேசியத் தலைவர் பிரபாகரனை உருவாக்கிய காலம் 2) மதிவதனி 3) தொடர்ந்து ஒலிக்கும் திலீபனின் குரல் 4) திலீபன் எனும் பெண்ணியவாதி 5) இந்தியாவின் துரோகம் 6) அகிம்சையின் உச்சம் திலீபன் 7) கலவரங்கள் 8) Chola's Look and Act East Policy 9) Operation Kadaram 10) பெண்களும் புலிகளும்   11) விடுதலை புலிகளின் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு அவதூறு முறியடிப்பு 1) ராஜீவின் Child Soldiers (ENDLF/EPRLF/IPKF) 2) நாபாவின் மண்டையன் குழு (EPRLF) 3) ஈழம் வெறுக்கும் ஒட்டுக்குழுக்கள் 4) தமிழினப்படுகொலை facts and figures 5) Sri Lanka's Assassination List 6) Arun Siddharthan's lies exposed   7) ஜி ஜி பொன்னம்பலமும் மலையகத் தமிழர்களும்   சமகால அரசியல் 1) யாரோ தமிழர்களாம் 2) நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக 3) தேர்தல் நேர இலவச கூத்து 4) நாம் தமிழரின் வெற்றியும் வளர்ச்சியும் 5) திமுகவும் கிரீஸ் டப்பாக்களும் 6) சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? 7) சீமான் சூழ் திராவிடம் 8) சீமானும் ஈழத்து விருந்தோம்பலும் 9) போராட்டத்தின் விலை என்ன லாரன்ஸ்? 10) உடைகிறதா ராஜபக்ச குடும்பம்? 11) ச...

ராஜீவின் Child Soldiers

ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள். இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம். PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது. ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு. ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்ட...

நாபாவின் 'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான். ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன. அப்படிப்பட்ட குழுக்களில் ஒரு குழு தான் EPRLF பதம்நாபாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிய "மண்டையன் குழு". இந்திய அமைதி காக்கும் படையின் வருகையின் பின்னர் மீண்டும் செயல்பட ஆரம்பித்த EPRLF, தமிழ் மக்கள் மீது ஒரு வெறுப்புடனும் வன்மத்துடனும் தான் செயற்பட்டு வந்தது. மக்களுக்கு எதிரான அவர்களின் கொடூர தாக்குதல்களே இதற்கு சிறந்த சாட்சியாக இருந்தது. (இதை பற்றி...

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு. சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது  சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது.  சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல்.  தமிழ் மொழியில் சம்பன் ...

The Dravidian Sex Cults | Dravidam 2.0

After the demise of Thanthai Periyar, the Dravidian 'movement' became stagnant and the institutionalisation, or to put it more accurately, the corporatisation of the Dravida Kazhagam/DK and the Dravidian movement started. The new Dravidian outfits, or break away factions from DK too split over management, leadership and other property related issues rather than over issues pertaining to ideological disputes. While the Dravidian parties started to rise in the electoral political scene, the purpose of the Dravidian outfits too changed. The movement that ones drove the electoral politics of the State, has now started to serve the political parties instead. It has become a very submissive relationship. Throughout this time the only way the Dravidian outfits remained relevant in the political scene is by extending its support to the Eelam cause. Post 2009, that too changed and thereafter the once vibrant movement started to transform into a cult .  The new transformation...

தமிழினப்படுகொலை Facts & Figures

#அறிவோம்ஈழம் தொடர்ந்து தமிழினப்படுகொலை ஒன்று நடக்கவில்லை என்றும், அதை மறுக்கும் விதமாகவும், ஒரு genocide denier மனநிலையுடன், பல அவதூறுகளும் தவறான செய்திகளும் சிங்கள அரசு மற்றும் திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்ப பட்டு வருகிறது. அவற்றில் முதன்மையான அவதூறு இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பானது தான். இனப்படுகொலையில், அதிலும் குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட இந்த அவதூறு பரப்பும் மனிதமற்ற காடையர் கூட்டம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அந்த கேடுகெட்ட முயற்சியை முறியடிக்கும் விதமாக இந்த தளத்தில் ஒரு சில ஆவணங்களை, ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இறுதிக்கட்ட போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக பல மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் பல ஆதாரங்களை திரட்டி, அமபலப்படுத்தி, zero civilian casualty எனும் பெரும் சிங்களப் பொய்யை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள். அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தான் தற்போது அநேகமான உலக அமைப்பு இறுதி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 40,000,-50,000 என்றளவுக்கு கொண்டு வந்...

சீன Colonyயாகும் கொழும்பு துறைமுக நகரம்

இலங்கையில் சீனாவின் துறைமுக நகர திட்டத்துக்கு ஒரு தனி கொடி, அரசியலமைப்பு மட்டும் தான் இல்லை, மற்றப்படி அது ஒரு சீன colony மாதிரி தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வாகிக்க இருக்கும் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டத்துக்கு எதிராக சிங்கள தேசத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. துறைமுக நகரத்தின் பொருளாதார ஆணைக்குழு சார்ந்த சட்டமூலம் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமான பல அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. அந்த சட்டத்தின் படி ▪️அந்த ஆணைக்குழுவை நிர்வாகிப்பவர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெளிநாட்டவரும் அதில் இடம்பெறலாமாம். ▪️இலங்கையர்கள் யாரும் இலங்கை currencyஐ வைத்து அந்த நகரத்தில் முதலீடு செய்ய முடியாதாம், இலங்கை வைப்பகத்தில் உள்ள வெளிநாட்டு currencyஐ பயன்படுத்தி கூட இலங்கையர்கள் முதலீடு செய்ய முடியாதாம். ▪️அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்த நகரத்தை மேற்பார்வை செய்யும் ஆணையமே தீர்த்து வைக்குமாம். ▪️துறைமுக நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பள...

உடைகிறதா ராஜபக்ச குடும்பம்?

சீனாவின் கொழும்பு Port City Project/ கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பாக சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி, சீனா தற்போது கொழும்பில் ஒரு கரையோர நகரத்தை கட்டமைத்து வருகிறது.  இந்த நகரம் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படாமல், ஒரு தனி நாடு போல் இயங்க கூடும் என்ற அச்சம் தற்போது சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகளும் சிங்கள தேசத்தில் வலுத்து வருகிறது. தற்போது பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சீனாவின் Port City Projectக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சிங்கள தேச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையில் சீன projectஐ எதிர்க்கும் பௌத்த துறவிகளையும், தனது கட்சியினரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார். ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்த Muruttutuwe Ananda Thero எனும் பௌத்த துறவியும் தற்போது ராஜபக்சவுக்கு எதிராக போ...

சண்டையிட முன் சிந்தியுங்கள்

நமக்கெதிரான அவதூறுகள் பரப்பப்படுவது, நமது எதிர்வினையை எதிர்பார்த்து தான். நமது எதிர்வினை ▪️நம் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை மெய்பிக்க உதவ கூடாது. நமது எதிர்வினை ▪️அவதூறுகளுக்கு வலு சேர்க்க கூடாது. என்பதில் கவனம் தேவை. நாம் எங்கே களமாட வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.  முகலாய மன்னன் Aurangzeb சிறந்த போர் வீரன். அவன் தனது முகலாய பேரரசை விரிவாக்க எல்லைகள் கடந்து போரிட்டான், எல்லா சண்டைகளிலும் கலந்து கொண்டான், இறுதியாக அவன் எல்லையை விரிவாக்க நடத்திய சண்டைகளும், போர்களும், தான் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமானது. என்ன தான் போர்களில் அவன் வென்றாலும், அவனால் தன் பேரரசின் நீட்சியை உறுதி செய்ய முடியவில்லை. He lost focus on important things. அதனால் நாம் எங்கே, எப்போது யாரோடு சண்டையிடுகிறோம் என்பது முக்கியம். எங்கள் ஒவ்வொரு சண்டையும், எங்களது வலிமையை அதிகரிக்க உதவ வேண்டும், எங்களது முன்னேற்றத்துக்கு அது வழிவகுக்க வேண்டும். எங்களது கவனத்தை எதிரியிடம் சிதறடிக்கும் சண்டைகளை நாம் தவிர்க்க வேண்டும். அனுமானின் வாலை கொளுத்தி பயனில்லை, ராமன் கடல ...

வள்ளுவர் வாழ்ந்த காலம்..

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்தியா,  இலங்கை என்று தமிழர் தேசம் வெட்டி  துண்டாப்பட முன் அன்றைய தாய்த்தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் உலகத்திற்கே நெறி வகுத்து கொண்டிருந்தார். அவர் தாடியோடு இருந்தாரா, அவர் வீட்டு திண்ணையில் இருந்து அதை எழுதினாரா, மாளிகையில் இருந்து எழுதினாரா, அவர் எந்த சாதியை சேர்ந்தவர்?, அவர் எந்த மதம்?, என்று அவர் அடையாளம் என்ன, அவர் தாடி அளவு என்ன?, அவர் ஆண்ட பரம்பரையா?,  முற்றும் துறந்த சித்தனா?, பித்தனா? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு இழிவான தமிழ் சூழலில் அவர் பிறக்கவில்லை. அவர் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற சொல் கூட இல்லை, ஒரு ஆரிய கடவுளின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ, சாதியையோ குறிப்பிட்டு பதிவுகள் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்க கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.  எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் ,  எந்த ஒரு அடையாளங்களுக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடனும் எழுதப்பட்ட  திருக்குறள் போன்ற ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?...

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...