Skip to main content

உடைகிறதா ராஜபக்ச குடும்பம்?

சீனாவின் கொழும்பு Port City Project/கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பாக சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத ராஜபக்ச அரசுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி, சீனா தற்போது கொழும்பில் ஒரு கரையோர நகரத்தை கட்டமைத்து வருகிறது. 
இந்த நகரம் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படாமல், ஒரு தனி நாடு போல் இயங்க கூடும் என்ற அச்சம் தற்போது சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகளும் சிங்கள தேசத்தில் வலுத்து வருகிறது. தற்போது பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சீனாவின் Port City Projectக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக
சிங்கள தேச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கையில் சீன projectஐ எதிர்க்கும் பௌத்த துறவிகளையும், தனது கட்சியினரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார்.

ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியில் அமர முக்கிய காரணமாக இருந்த
Muruttutuwe Ananda Thero எனும் பௌத்த துறவியும் தற்போது ராஜபக்சவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார். அவரும் விஜயதாச எனும் ராஜபக்ச கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரும் சமீபத்தில் கோத்தாபய ராஜபக்சவால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்துள்ளதாக ஊடகங்கள் முன் முறையிட்டுள்ளனர்.
அவர்களின் ஊடக சந்திப்பின் பின்னர் பிரச்சனை பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

வெளிப்படையாகவே
சீனாவுக்கு ஆதரவாக அடியாள் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.

இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்துக்குள் இரண்டு அணிகள்(மகிந்த அணி, கோத்தாபய அணி) உருவாகிவிட்டது என்று சில ஊடகங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறது. மகிந்தவுக்கும் கோத்தாபயவுக்கும் இடையே விரிசல்கள் உள்ளது போல் ஊடகங்கள் சித்தரித்தாலும், உண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறார்கள்.

ராஜபக்ஸ சகோதரர்கள் இதுவரை காலமும் தாக்கு பிடிக்க காரணம் மகிந்த ராஜபக்சவின் balancing act தான். மகிந்த கோத்தாபய எனும் இரு சகோதரர்களும் தங்கள் good cop bad cop விளையாட்டை, பிரதமர், ஜனாதிபதி எனும் பதிவுகள் ஊடாகவும் விளையாடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள்.

ராஜபக்ச குடும்பம் தற்போது வலுவிழந்து வருகிறது. அரசியலில் செயல்பட முடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமாகும் போது, ராஜபக்ச குடும்பமும், கட்சியும் உடையும்..அதை சிங்கள பேரினவாதமே நிகழ்த்தி காட்டும் என்று நினைக்கிறேன்.

-Mr. பழுவேட்டரையர்
18/4/21

Comments

  1. வாழ்க்கை ஒரு வட்டம்! ❤️🔥

    ReplyDelete
  2. இலங்கை அரசு இந்திய வுடன் சேர்ந்து தேசிய இனத்தை படுகொலை செய்தற்கு கிடைத்த பலன்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...