Skip to main content

Posts

சிங்கள பேரினவாதத்தின் கருவியான முஸ்லிம் தலைமைகள்

ஈழத்தில் தமிழ்- முஸ்லிம் உறவு பற்றி பேசும் போது , முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கருவியாக செயல்பட்டு வந்ததை பற்றியும் பேச தான் வேண்டும் . தமிழர்களுக்கு எதிரான தனது அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் முழு ஆதரவுடன் தான் சிங்களம் அரங்கேற்றி வந்திருக்கு. தமிழகத்தில் ஐயா காயிதே மில்லத் தமிழ் மொழி உரிமைக்காக போராடிய போது, இலங்கையில், 'சிங்கள மட்டும் மொழி சட்டத்தை' மக்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லி, இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தார், Sir ராசீக் பாரீத் எனும் முஸ்லிம் தலைவர். தனி சிங்கள சட்டத்துக்கு ஆதரவாக களமாடிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். சிங்கள மொழிக்கும், அதன் திணிப்புக்கும் ஆதரவாக மட்டும் அல்ல, தனி சிங்கள கொடிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் தலைமைகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். 16 January 1948 அன்று, இலங்கையின் தேசிய கொடியாக, சிங்கள இனத்தின் தனி சிங்கள சிங்க கொடியை பாராளுமன்றத்தில் முன்னிறுத்தி முதலில் motionஅ table பண்ணது மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அகமது சின்னலெப்பே தான்.  ...

Mr.பழுவேட்டரையர்

பழுவேட்டரையர் என்ற பெயர் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட பெயர்.  வரலாற்று ஆசிரியர்களுக்கும் இது புதினமான பெயர் அல்ல, அதே நேரம், இது வெறுமனே புதினத்தில் மட்டும் வரும் பெயரும் அல்ல. இது ஒரு உண்மை வரலாற்று கதாபாத்திரத்தின் பெயர்.  சோழர்களின் தளபதியாக இருந்த ஒரு சிற்றரசனன் தான் பழுவேட்டரையர். அவனது பெயரில் ஒரு படையணி கூட சோழர்களின் ராணுவத்தில் இருந்தது. ஈழத்தில் அதிக போர் களங்கள், சண்டைகள் கண்ட படையணி என்ற பெருமை பழுவேட்டரையர் படையணிக்கு இருக்கு. பொன்னியின் செல்வனெனும் வரலாற்று புதினத்தில் பழுவேட்டரையரின் வரலாறு, கதாபாத்திரத்தின் உணர்வுகளால் விழுங்கப்பட்டாலும், அந்த பெயருக்கான வரலாறு, ஆர்வம் கொண்டு தேடினால் எளிதில் கிட்டும். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொன்னியின் செல்வனில் பிடித்த கதாபாத்திரமும் பழுவேட்டரையர் தான். போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி போராளிகளுக்கு தைரியம் கொடுப்பாராம் தலைவர். இந்த காரணங்கள...

கலவரங்கள்

இலங்கையில் நடப்பது அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல. அது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிரான, வாழ்க்கைக்கான போராட்டாமகவே இருக்கிறது. இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க போரை தொடுக்கவில்லை,  சிங்களம் கால காலமாக போரிட்டு வருவது, இன அழிப்பு என்ற ஒற்றை நோக்குடன் மட்டும் தான். இலங்கையின் அனைத்து விதமான அதிகாரமும் சிங்கள தேசத்தின் கையில் தான் உள்ளது, சிங்கள தேசத்திற்கு எதிராக நின்று தமிழினத்தை காத்த புலிகளும் இன்றில்லை. இருப்பினும் தொடர்ந்து இலங்கையில் கலவரங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. போருக்கு முன்னும் கலவரங்கள், போருக்கு பின்னும் கலவரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. 83ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு உச்சம் அவ்வளவு தான், மற்றப்படி கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. பிற நாடுகளை போல் இலங்கையின் பெரும்பான்மை, சிறுப்பான்மை, மற்றும் பூர்வ குடிகளுக்கு இடையிலான உறவு, ஒற்றையாட்சி, அல்லது பகிர்ப்பட்ட ஒற்றை அடையாளத்தை நோக்கியான பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. இலங்கையில் நடப்பது ஒற்றையாட்சி தான். ஒரு குறிப்பிட்ட மதம்,...

சோழர்களும் பார்ப்பனியமும்

சோழர்களுக்கு முன் பார்ப்பனியத்தை அதிகாரத்தில் அமர்த்தியது சேரர்கள் தான்!முதலாம் பராந்தகன் காலத்தில், சேர நாட்டில் அரசனை விட அதிக அதிகாரம் படைத்த ஆளுமைகளாக இருந்தது பார்ப்பனர்கள் தான். சேர நாட்டுடனான உறவின் வழியாக தான் பார்ப்பனியம் சோழ அதிகார வட்டத்துக்குள் நுழையுது. செம்பியன் மாதேவியின் பங்கும் இதில் முக்கியமானது. ராஜ ராஜன் அதிகாரத்துக்கு வர முன்னமே பார்ப்பணியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. ராஜ ராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்குட்பட்ட நிலங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, பார்ப்பனியமும் பரவியது. பார்ப்பனியத்தை ராஜ ராஜனும், சோழர்களும் தான் கண்டுபிடித்தார்கள் என்றார் போல் கதை விடுவது எல்லாம் வரலாற்று திரிப்புகள். பார்ப்பனியத்தை சோழர்கள் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சேரர்களிடம் செலுத்திய  அதிகாரத்தை சோழர்களிடம் பார்ப்பனர்களால் செலுத்த முடியவில்லை. சோழர்கள் பார்ப்பானை கோவிலுடன் நிறுத்திவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். Practically speaking பார்ப்பானின் கட்டுப்பாட்டில் சோழர்கள் இருந்திருந்தால், அவர்கள் பேரரசாகியிருக்க முடியாது. Let me prove this case. வரலாற்றில் சோழ தேசம்...

போராட்டத்தின் விலை என்ன லாரன்ஸ்

2/2/2017 அன்று நான் எழுதிய ஒரு பதிவை இங்கே மறுபடியும் பதிவிடுகிறேன், லாரன்ஸ் யார் என்பதை நினைவுப்படுத்த ______ மாணவர்களை சந்தித்து சட்ட திருத்தத்தை பற்றி விளக்கம் கொடுக்க வந்தவர்கள் கையில் இருந்து micஐ புடுங்கி போராட்டத்தை எப்போது முடிப்பதென்று நாம் தான் முடிவு செய்வோம் என்று லாரன்ஸ் micஇல் முழங்கினார்.  அங்கே தொடங்கியது அரசியல். மெரினாவில் போராட்டம் தொடங்கும் வரை,  ஊடகங்கள் கூடும் வரை,லாரன்ஸ் என்ற மனிதன் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை எங்கும் உச்சரித்ததில்லை. முதல் நாளில் இருந்து லாரன்ஸ் 10 லட்சம் கொடுத்த விஷயத்த அவரே ஒரு கோடி தரம் விளம்பரம் செய்தார். தப்பில்லை. ஆனால் மெரினாவிலும், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த மற்ற போராட்ட களங்களிலும் இருந்த லட்ச கணக்கான மக்களுக்கு லாரன்ஸ் மட்டும் உதவவில்லை. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் உதவி செய்தார்கள், ஆனால் அவர்கள் யாரும் அதை பெரிதாக விளம்பரம் செய்யவில்லை.  லாரன்ஸ் ஊருக்கு உதவி செய்யுறாரு, உண்மை தான்.  ஆனா லாரன்ஸ் மட்டும் இல்லை, கமல்ஹாசன் நற்பணி இயக்கம், சூர்யாவின் அறம் அறக்கட்டளை, ஏன் லாரன்ஸ் ஊடாகவே நடிகர் விஜய் ம...

புகைப்படங்கள்

கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்...  நினைவுகளை போல் ஒழுக்கமற்ற  தொகுப்பாய், கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,.. Randomஆ இங்கும் அங்குமாக. . நீர்கொழும்பு,  சிங்கள தேசம். அதிகாலை 4.00 மணிக்கு .. 2017 December.  யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை.. 2017 December. புங்குடுதீவு கண்ணகி அம்மன்..  அபரணை பரோட்டா.  சிங்கள தேசம்  March 2014  காலை உணவு..  காத்தான்குடி  ஒரு மாலை பொழுதில், கிழங்கு - Tsunami Set 2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம்.  அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று.. நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்..  யாழ்ப்பாணம்.. கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்.. இலங்கை விமான படையின் தாக்கு...

SinhaLe

SinhaLe is the ideology that unites Sri Lanka. (More & final rant on the දම්‌මදීප+සිංගදීප  doctrine) Sri Lanka is not "united" by a constitution or a citizenry based identity. Instead, it is under the compulsion to stay or appear united/"unitary" because that is how the modern Mahavamsa-Dharmapala hybrid SinhaLe/Sinhala nationalist ideology envisages the Sinhala nation.  The Sri Lankan State is built upon a theocratic principle. The main agenda of the state is to protect Buddhism. Both the ideas of Dharmadeepa and the SinghaDeepa that drives the Sinhala nationalist ideologues are now institutionalised and have a political face in modern Sri Lanka.  The institutionalisation process started with the Eksath Bikku Peramuna and found a permanent spot in the political chambers after the Buddha Saasana Ministry was established.  The Sinhala nation sees "unitary" as a synonym to the idea of a Singhadeepa and the slogans of unity and slogans that are in favour ...

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

அன்று புரியவில்லை...

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை பகிர ஆசைப்படுகிறேன்.. முதல் அனுபவம் புலிகள் தொடர்பானது. 👇 எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு, பாதை திறந்த சில மாத காலங்களிலேயே நாங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வெளிகிட்டோம்... அப்போதெல்லாம் இயக்கம் சோதனை சாவடியில் pass எடுப்பது, வாகன வரி கட்டுவது என்று நிறைய paper work இருக்கும் , எங்கட அப்பம்மா அதற்கு ஒத்துழைக்க மறுத்து, போராட்டத்தில் எங்கள் குடும்பம் இழந்தவற்றை பற்றி பேசி, அங்கு நின்ற அண்ணன்மாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாக சிங்கள ராணுவ சோதனை சாவடிகளில் அமைதியாக இருக்கும் அப்பம்மா, இங்கே புலிகளுக்கு முன் இப்படி தைரியமாக 'அதிகாரிகளுடன்' பேசுவது, ஒரு சிறுவனாய் எனக்கு வியப்பாக இருந்தது.. அப்பம்மாவின் பேச்சில் ஒரு வித கோபம் வெளிப்பட்டது. ஆனாலும் அந்த அண்ணன்மார் சிரித்த முகத்துடன், பக்குவமாக அவர்களின் சட்ட திட்டங்கள், படிவங்கள் நிரப்புவதன் காரணங்கள், அதன் கட்டணங்கள், வரி எங்கு செல்கிறது என்றெல்லாம் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.. ஆனாலும் அப்பம்மா கேட்பதாக இல்லை, குரலை உயர்த்தி பே...

நடுமுற்றம் உள்ள வீடு

"வெளிய முன்னுக்கு தான் கிணறு இருக்கு.. போய் பார்.. இங்க வா!.. இது தான் அறை, அங்கால குசினி நடுவுல பாரு திறந்த வெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் முற்றம், அதில் அந்த பக்கதில் கட்டியிருக்கும் ஊஞ்சலை சுத்தி தான் எல்லாரும் இருப்பம், இங்க வந்து பார்... அதுல நிண்டா எப்படி தெரியும்? இங்க நிண்டு பார்த்தா தான் பாதை தெரியும்.. அங்க தூரத்துல main roadல வாகனங்கள் வரும் சத்தம் இங்க வரைக்கும் கேட்கும்"... என்று குண்டுகள் விழுந்து,  முழுவதுமாய் அடையாளம் தெரியாத அளவுக்கு இடிந்து விழுந்த கட்டிடத்தின்,  கற்கள் கிடந்த திறந்த வெளியில்... என் பாட்டன், பூட்டன் வாழ்ந்த பூர்விக வீட்டை, இன்னும் இடிந்து விழாத நினைவுகள் ஊடாக,  எனக்கு கட்டி காட்டி மகிழ்ந்த அப்பம்மாவின் முகமும், பெருமை தொனித்த குரலும் தான் மீண்டெழும் எங்கள் தேசத்தின் நம்பிக்கை குரலாய் இன்று வரை எனக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது.. -கிரி

என் சுயத்தின் மொழி

ஆரம்பத்துல யாராவது என் தாயை பழித்து பேசினாலோ, பொதுவாக அநாகரிகமாக பேசினாலோ, அவர்களுக்கு சரி சமமாக அவர்கள் மாதிரியே எதிர்வினையாற்றுவேன். என் அம்மாவ நீ திட்டினா உன் அம்மாவா நான் திட்டுவேன் போன்ற போக்கே என்னிடம் அதிகம் காண கூடியதாக இருந்தது.  உணர்வுகளின்,  சுயத்தின் வெளிப்பாடு தான் மொழியின் முக்கிய அடிப்படை பயன்பாடாகிறது.  ஒருவனின் கோபத்தில் வெளிப்படும் உணர்வே பெரும்பாலும் அவனது பண்பை, ஒரு விடயத்தை அவன் கையாளும் விதத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பாலினத்தை, ஒரு தொழிலை ஒரு அடையாளத்தை இழி சொல்லாக மாற்றி இன்னொருவர் மீது நாம் நம் வெறுப்பை கக்கும் போது, அந்த குறிப்பிட்ட தனி நபர் மீதான நமது வெறுப்பு மட்டும் அங்கு வெளிப்படவில்லை. அங்கு இழி சொற்களாக நான் பயன்படுத்தும் சொற்களில் நம் அரசியலும் வெளிப்படுது. பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகளின் வந்தேறி என்ற சொற் பயன்பாடும், பிற்போக்கு திராவிடர்களின் 'அகதி நாயே' என்ற சொல்லின் பயன்பாடும் வெளிப்படுத்தும் அரசியலானது அவர்களின் மனிதத்தின் தரத்தை உணர்த்தி நிற்கிறது. 'வந்தேறி', 'அகதி நாயே' போன்ற சொற்களில் மட்டும் அல்ல, சாதிய, பாலின அடையாளங்கள...

நான் இன்னும் எழுதி முடிக்காத சிறு கதை

{போன வருடம் ராமாயணத்தை களமாக கொண்டு எழுத ஆரம்பித்து,  பிறகு பாதியிலேயே நிறுத்திய ஒரு சிறு கதையின் முதல் பகுதி, மீண்டும் பதிவிடுகிறேன்... Work in progress. Grammar,spelling errors இருக்கும்..  } 👇 மடிந்த யானையின் உடல் மீது முதுகை சாய்த்தபடி நிமிர்ந்திருந்தான் வேந்தன். அவன் எதிரே மலையொன்றை சாய்த்த களிப்பில், கையில் வில்லுடன் தன் வெட்டு காயங்களை மதிப்பிட்டபடி நின்று கொண்டிருந்தான் ஒரு உளவாளி. இனி இவனால் எழ முடியாது என்று இளநகைத்தப்படி அந்த உளவாளி "எங்கள் இறைவனை வேண்டு வேந்தா. மோட்சமாவது கிடைக்கும்.. இறந்திருக்கும் யானை அறியாது அதன் மடமையை, ஆனால் நீயோ திக்கு திசை தெரியாமல் ஓடும் மதம் பிடித்த யானையல்ல. நீ தெரிந்தே தான் ஒரு கொடூரனின் படையை வழிநடத்தினாய், உன் வீரத்தை நான் போற்றுகிறேன், ஆனால் எங்கள் தர்மம் உன் வீரத்தை விடவும் வலியது. உன்னை காப்பாற்ற மக்களை கேடயமாக்கி, அவர்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கும் உன் தலைவன் வர மாட்டான். என் இறைவன் கரிசனையின் விளைவான என் சுவாசக்காற்று மட்டும் தான் உன் உயிரின் கடைசி செய்தியை இனி ஏந்தி செல்லும். இறைவனை வேண்டி சொல், உன் கடைசி செய்தி என்ன? " ...

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக...

சாப்பிடலாம் வாங்கோ

ஈழத்தில் சோறுக்கு மேல கறிகள் எல்லாத்தையும் உண்டன ஊத்தி சாப்பிடும் பழக்கம், வழக்கமா இருக்கு.  இதை அவதானித்த ஒருவர், மேலே உள்ள படத்தை நான் twitterஇல் பகிர்ந்ததை விமர்சிக்கும் விதமாக,  " பிச்சைக்காரி தட்டு போல எல்லாம் ஒன்னா போட்டுதான் திங்கனுமா?? தட்டை விட திருவோடு கரெக்டா இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.. அவருக்கு நான் கொடுத்த பதில் ; மலை போல சோற தட்டுல/இலையில போட்டு, அதுக்கு மேல காய் கறிய போட்டு, குழம்ப ஊத்தி, குழைச்சு சாப்பிடுவது தான் எங்கள் பழக்கம். கறிய தனியா வெச்சு தொட்டு சாப்பிடுறது எல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. எந்த கறியையும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கோ. தனியா விருப்பம் இல்லாத சில சத்தான உணவுகள் கூட குழையலில், தேனுடன் மருந்து போல் சாப்பிடலாம். சோறு, புட்டு, இடியப்பதுக்கெல்லாம், உண்டன கறியவோ, சொதியவோ விடாமல் ரொட்டி மாதிரி தொட்டு சாப்பிட முடியாது. ஒரு வேளை சாப்பாட்டில் முழு நாளை ஓட்டும் என் தரவழி ஆளுங்களுக்கு இப்படி சாப்பிட்டா தான் 12-14hrs at a stretch வேலை செய்ய முடியும்.. ஒரு முறை தெரியாமல் சரவண பவனுக்குள் நு...