Skip to main content

புகைப்படங்கள்

கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்... 

நினைவுகளை போல் ஒழுக்கமற்ற 
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

Randomஆ
இங்கும் அங்குமாக.

.


நீர்கொழும்பு, 
சிங்கள தேசம்.
அதிகாலை 4.00 மணிக்கு ..
2017 December. 


யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை..

2017 December.

புங்குடுதீவு கண்ணகி அம்மன்.. 
அபரணை பரோட்டா. 

சிங்கள தேசம் 
March 2014 
காலை உணவு.. 

காத்தான்குடி 

ஒரு மாலை பொழுதில்,
கிழங்கு - Tsunami Set

2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக
கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம். 

அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று..

நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்.. 

யாழ்ப்பாணம்..
கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்..

இலங்கை விமான படையின் தாக்குதலுக்கு பின் மிஞ்சியது.. 

யாழ் நூலகத்திற்கு, சிறு வயதில் இருந்து நான் சேகரித்து வாசித்த முக்கியமான புத்தகங்களை அன்பளிக்க சென்ற போது, Librarian அக்கா busyஆக UK Prime Ministerக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். 

"இருங்கோ தம்பி வாரன்" எண்டுட்டு அக்கா வெளிய போன போது clickகியது. 😂 

ஈழம்
பாலாவி | மாதோட்டம்... 


கல்பிட்டிய,

சிங்கள தேசம். 

தந்தை செல்வா.

மன்னார் 
China Bay துறைமுகம், திருகோணமலை

(2014) 

தலவில அன்னம்மாள் தேவாலயம்.

சிங்கள தேசம். 


அனுராதபுரம்.(2013)

சிங்கள கடை ஒன்றில் காலை உணவை முடித்துவிட்டு

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன ஓட்டுநர் அண்ணேயிடம்

"உங்களுக்கு கெஹெல்வத்தயில் லவரியா வித்த ரண்சிங்க எனும் பொடியனின் கதை தெரியமோ" எண்டு கேட்டப்படி எடுத்த புகைப்படம் .. 


கொழும்பில் கடந்த வருடம்..

நண்பர்களுடன் வழக்கமான இரவுணவு, 

மாட்டிறைச்சி கொத்தும், தேத்தண்ணியும்.. 


பொலன்னறுவ, 2013

சோழர்கள் உருவாக்கிய நகரம்.

பொலன்னறுவ வேளைக்காரர் படையின் கல்வெட்டு. 

'புத்தரின் பல்'ல பாதுகாத்த தமிழ் காவலர்கள். சிங்கள அரசன் விஜயபாகு, சோழர்களுக்கு எதிராக போரிட உத்தரவிட்ட போது, உத்தரவை மறுத்து சிங்களவரக்ளுடன் மோதி வீர காவியமான வீரர்களின் படை வேளைக்காரர் படை. 
ஒரு சில வருடங்களுக்கு முன் ஈழத்தில்,. எந்த ஊர் என்று நியாபகம் இல்லை..

தாமரை இலை மேல்
பன்றியிறைச்சி கறி, கோழியிறைச்சி கறி மற்றும் மீன்.. 


2018, யாழ்ப்பாணம்.

விடிய 6.00 மணி இருக்கும் எண்டு நினைக்கிறன், யாழ்ப்பாணம், நல்லூர் சொக்கர்(ன்) கடையில் காணும் முதல் முகம் மக்கள் திலகம் தான்.

நல்ல பால் தேத்தணி கிடைக்கும் இடம்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில்
Geoffrey Bawaவின் படைப்பு..
எந்த வருடம் எடுத்தது எண்டு நியாபகம் இல்லை.

இங்கே பலமுறை பதிவிட்ட படம் இதுவாக தான் இருக்கும், இருந்தாலும் இன்னொருக்கா,.. 
யாழ்ப்பாணத்து கறுத்த கொழும்பான் மாம்பழம்.🙂  
பிறகு நண்பர்கள் படை சூழ சாப்பிட போனால், பாலாண்டியும் பரோட்டாவும் 
Must have அல்லோ 🙂 
குருணாகல, 2014,

பொல் ரொட்டி.

சிங்கள தேசம். 

காலை உணவு (2017) 

ஈழத்தில் வழக்கமா எல்லா சைவ கடைகளிலும் கிடைக்கும் காலை உணவு...

இடியப்பம், சொதி(essential), சாம்பார், வடை, சம்பல்(essential).

(வடையை பிய்த்து இடியப்பத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்)

வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிட்டது, அதனால் பெரியாரும் இணைந்து கொண்டார்..🙂 

Comments

  1. எழுத்தும் தமிழும் ...🔥🔥!!!

    //நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
    தொகுப்பாய்,
    கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

    Randomஆ
    இங்கும் அங்குமாக///

    ஈழத்து உணவுகள் ஊடான நினைவுகள் 😍✨

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...