தமிழினப்படுகொலையில் சிங்கள அரசோடு நகமும் சதையுமாக இலங்கையின் முஸ்லிம் அமைப்புகளும் தலைமைகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத, வெளிப்படையான உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் தொடர்பான எல்லா உரையாடல்களிலும் எப்படி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது பேசப்படுகிறதோ, அதே போல கிழக்கில் இருந்து முஸ்லிம் ஊர்காவல் படையால் வெளியேற்றப்பட்ட தமிழர்களின் வரலாறும், மொழியுரிமையில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் வரையிலான அனைத்து விடயங்களிலும் முஸ்லிம் தலைமைகளின் தமிழர் விரோத போக்கும் பேசப்பட வேண்டும். இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சிங்களத்தின் பயங்கரவாதத்தால் அதிக உரிமைகள், உயிர்கள், உடமைகளை இழந்தது ஈழத்தமிழர்கள் தான். ஆனால் இன்றோ ஈழத்தமிழர்கள் மீதே பழியை திருப்பி போட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பா சமீபத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தேசியத் தலைவருடனான சந்திப்பு பற்றி பேசிய ஒரு பேச்சு, தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே பதிவிட்...
The official website of @mrpaluvets from twitter