Skip to main content

Posts

Showing posts from August, 2020

சிங்கள பேரினவாதத்தின் கருவியான முஸ்லிம் தலைமைகள்

ஈழத்தில் தமிழ்- முஸ்லிம் உறவு பற்றி பேசும் போது , முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கருவியாக செயல்பட்டு வந்ததை பற்றியும் பேச தான் வேண்டும் . தமிழர்களுக்கு எதிரான தனது அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் முழு ஆதரவுடன் தான் சிங்களம் அரங்கேற்றி வந்திருக்கு. தமிழகத்தில் ஐயா காயிதே மில்லத் தமிழ் மொழி உரிமைக்காக போராடிய போது, இலங்கையில், 'சிங்கள மட்டும் மொழி சட்டத்தை' மக்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லி, இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தார், Sir ராசீக் பாரீத் எனும் முஸ்லிம் தலைவர். தனி சிங்கள சட்டத்துக்கு ஆதரவாக களமாடிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். சிங்கள மொழிக்கும், அதன் திணிப்புக்கும் ஆதரவாக மட்டும் அல்ல, தனி சிங்கள கொடிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் தலைமைகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். 16 January 1948 அன்று, இலங்கையின் தேசிய கொடியாக, சிங்கள இனத்தின் தனி சிங்கள சிங்க கொடியை பாராளுமன்றத்தில் முன்னிறுத்தி முதலில் motionஅ table பண்ணது மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அகமது சின்னலெப்பே தான்.