Skip to main content

Posts

Showing posts from February, 2021

யாரோ தமிழர்களாம்..

திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு.  சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர். மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர். டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி இருநூறுவர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. அவர்களுக்கு நேரெதிரே தமிழினம்! புலிக்கொடி ஏந்தி ஒரு படை! அதில், பெண்களும் ஆண்களும் சரி சமமாக களத்தில் நிரம்பி நிற்கிறார்கள். மனிதர்களை தாழ்வாக பார்க்கும் ஆதிக்க யானைகள் மேல் துஞ்சும் பண்ணையார் குஞ்சுகள் அங்கில்லை. எல்லோரும் சமநிலையில் தோளோடு தோள் உரசி நிற்கிறார்கள்.. சாதியவாதிகள் இயக்கும் ஊடக புரவிகள் தமிழர் படையில் இல்லை, உண்மை எனும் ஜீவ நதி மட்

நான் நாத்திகனாக இருந்தாலும்,

நான் நாத்திகனாக இருந்தாலும், மெய்யியல் தொடர்பான எனது வாசிப்புகள் தேடல் என்னை சங்க கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களிடம் தான் அழைத்து சென்றிருக்கிறது. அது என்றுமே என்னை சத் குருக்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்களிடம் அழைத்து சென்றதில்லை. மெய்யியலுக்கும், பக்திக்கும் கூட ஒரு பாரம்பரியம் இருக்கு, அதை அறிய ஒரு தேடல் அவசியப்படுகிறது, அந்த தேடலுக்கு ஒரு சுய முனைப்பு தேவைப்படுகிறது. இருந்த இடத்திலேயே,  அலையாமல்,  தேடாமல்,  சிந்திக்காமல்,  வாதிடாமல், நூல்களை, மனிதர்களை, இடங்களை , வாசிக்காமல்,  யாசிக்காமல், "மெய்ஞானம்" என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஒரு பொருள் உன்னை தேடி வந்தால்,அந்த பொருளை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது விளம்பரமும், வணிகமும் தானே தவிர ஆன்மிகம் அல்ல.  சித்தர்களின் செய்திகள் sponsored postsஇல் வருவதில்லை. -Mr. பழுவேட்டரையர் 10/2/2021