Skip to main content

யாரோ தமிழர்களாம்..

திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு. 

சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர்.

மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர்.

டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி இருநூறுவர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது.

அவர்களுக்கு நேரெதிரே தமிழினம்!
புலிக்கொடி ஏந்தி ஒரு படை!
அதில்,
பெண்களும் ஆண்களும் சரி சமமாக களத்தில் நிரம்பி நிற்கிறார்கள்.

மனிதர்களை தாழ்வாக பார்க்கும் ஆதிக்க யானைகள் மேல் துஞ்சும் பண்ணையார் குஞ்சுகள் அங்கில்லை.
எல்லோரும் சமநிலையில் தோளோடு தோள் உரசி நிற்கிறார்கள்..

சாதியவாதிகள் இயக்கும் ஊடக புரவிகள் தமிழர் படையில் இல்லை,
உண்மை எனும் ஜீவ நதி மட்டுமே  அவர்கள் மனோபலத்துக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கிறது..

பணம் படைத்த பண்ணையார்கள் அங்கில்லை,
குணம் படைத்த மாந்தர் பலர், இனம் காக்க படையென அங்கு கூடி நிற்கிறார்கள்.

ஒரு சிறு புலி கூட்டத்தை எதிர்க்க இவ்வளவு பெரிய திராவிட படையா?

போர்க்கள தராசில் திமுகவின் பக்கம்

பண்ணையார்களின் ஆதிக்க யானைகள், சாதியவாதிகளின் ஊடக புரவிகள், கூட்டணி கேடயங்கள், ஆட்பலம், பண பலம், எல்லாம் அணிவகுத்து நிற்கிறது,

நாம் தமிழரின் பக்கம் தமிழினத்தின் தன்மானமும், இன உணர்வும், அறமும் அணிவகுத்து நிற்கிறது..

திமுகவின் பக்கம் இன்னும் நிறைய பேர் தேவைப்படுகிறார்கள், இன்னும் நிறைய பாரம் தேவைப்படுகிறது.  திராவிடத்துக்கு இன்னும் நிறைய பணம், பலம் தேவைப்படுகிறது.

தமிழர் அறத்தை வீழ்த்தும் வலிமையுள்ள திராவிட போர் வாள்கள் திமுகவுக்கு தேவைப்படுகிறது..

தமிழர்களின் தன்மானத்தை வீழ்த்த டெல்லியில் இருந்து இன்னும் நிறைய அரசியல் தந்திரோபாய நிபுணர்கள் திமுகவுக்கு தேவைப்படுகிறது,

தமிழர்களின் ஒற்றுமையை கலைக்க இன்னும் நிறைய கூட்டணி சிப்பாய்கள் கேடயங்களாக தேவைப்படுகிறார்கள்..

வெறியேற்ற ஒரு முரசம்,
தடவி கொடுக்க ஒரு கை,
பசி தீர்க்க நல்ல மாங்கனி
வெற்றி பெற்றால்
செங்கோலுக்கு ஏதுவாக ஒரு
தாமரை மலர் கொத்து,
என பல ஆசைகளுடன் களத்தில் நிற்கிறது திமுக..


எதிரே இருப்பது ஒரு சிறு புலிப்படை,
யாரோ தமிழர்களாம்..

-Mr. பழுவேட்டரையர்
19/2/2021

Comments

  1. உண்மையான கள நிலவரம் எதிர்த்து சண்டை போடுவோம். உங்கள் போராட்டம் காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  2. Best Motivational thread for NTK.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு
    உண்மைகளை உரக்கச் சொல்வோம்.
    திராவிடனா தமிழனா தலைப்பில் உறவுகளை உற்சாகப்படுத்தும் விதமாக கட்டுரை ஒன்று எழுதுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...