Skip to main content

ஆண்மை என்றால்

ஆண்மை, பெண்மை

ஆண்மை, பெண்மை என்பது உயிரியல், அல்லது உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவை ஒரு சமூக கலாச்சார கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு காலத்திற்கு காலம் மாறும். ஆண்மையும், பெண்மையும், ஆண், பெண் பாலினங்கள் பற்றிய ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புகளின்(social expectations)
கட்டமைப்பு.

It defines the social expectations of the various genders.இந்த எதிர்பார்ப்புகள் நடை, ஆடை, நடத்தை, தொழில், பேச்சு, கட்டுப்பாடு என்று ஒரு பாலினத்தின் இயக்கத்தையே நிர்ணயிக்கிறது. They then construct the gender roles in the society.

அன்பு, பரிவு, அடக்கம், நாணம், இப்படி பல விதமான "குணங்களின் ஐக்கியம்" 'பெண்மை'யாகவும். வீரம், துணிச்சல், ஆளுமை, அதிகாரம் போன்ற பண்புகள் ஆண்மையாகவும் கட்டமைக்கப்படுகிறது.

பொது பண்புகளை, ஆண்மை பெண்மை என்று வகைப்படுத்தி, அந்த பண்புகளுக்கேற்ப பெண் என்பவள் இந்த தொழில் தான் செய்ய வேண்டும், இந்த படிப்பை தான் படிக்க வேண்டும், என்று சமூகம் நிர்ணயிக்கிறது. மனிதர்களின் பொது பண்புகளை, பாலின பண்பாக மாற்றும் கருத்தியல் தான் 'ஆண்மை பெண்மை.

பெண்கள் அதிகாரத்தில் பங்கு கோரவோ, தாம் விரும்பிய கல்வியை, வேலையை, வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவோ, முதல் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த ஆண்மை,பெண்மை எனும் சமூக எதிர்பார்ப்புகள் வழி உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்புகள் தான்.

ஆண்மையை விந்துக்கள் தொடர்பான ஒரு கருத்தாக, உடல், ஆணுறுப்பு சம்பந்தப்பட்ட ஒரு sex drive, sexual activityஉடன் தொடர்பு படுத்தி பார்ப்பது மடத்தனமம். இது ஒரு சமூகவியல் subject.

'பெண்மையின்'அடிப்படையாக 'கற்பு'  எனும் கருத்தியல் முன்நிறுத்துப்படுகிறது. P.T.S ஐயங்கார் போன்றவர்கள் "கற்பின் நிறுவணமயமாக்கள் தான் ஆணாதிக்க சூழலை உருவாக்கியது" என்று வாதிட்ட போது,ஈழத்து பேராசிரியர் க.சிவத்தம்பி "இல்லை, ஆணாதிக்கத்தின் தயாரிப்பு தான் கற்பு என்று வாதிட்டிருக்கிறார்"

Dr.Sivathamby disagrees with the formulation made by P.T.S Iyengar that the institution of Karpu, form of marriage & the development of private property led to the patriarchal form of society....& says that the REVERSE process that patriarchal form of society led to the institution of Karpu is correct." (இப்ப புரியதா ஏன் இந்த ஜெயமோகன் மாதிரி ஆளுங்களுக்கு மார்க்சிய ஈழத்து அறிஞர்களின் விமர்சனங்கள் பிடிப்பதில்லை என்று 😉.. I'll not deviate, will discuss this later)

Cultural notions of “feminine” and “masculine” behavior are shaped in part by observations about what women and men do. This kind of “gender marking” tends to discourage women or men from entering “gender-inauthentic” occupations (Faulkner, 2009).

ஆண்மையின் கட்டுமானம் என்பது அதிகாரத்தின் முற்றுரிமையாக கட்டமைக்கப்பட்டது, ஆண்மையின் அதிகார இருப்பை பாதுகாக்க உருவாக்கப்பட்ட புனிதம் தான் பெண்மை. ஈழத்து தேசவழமை சட்டங்களில் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. வரதட்சணை வழியாக கிடைக்கும் so called சொத்துக்களை ஒரு பெண் விற்க ஆணின்(கணவனின்) சம்மதம் வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. இதை புலிகள் ஒழித்தார்கள்.

புலிகள் இயக்கத்தில் ஆண்மையின் பொருள் மாற்றப்பட்டது. தேசியத் தலைவர் முன்வைக்கும் பெண்ணியம் கூட ஆண்மை பற்றிய உரையாடலாக தான் இருக்கிறது.தலைவரின் பார்வையில் ஆண்மை கற்பிக்கும் பெண்மை எனும் புனித பிம்பங்கள் தான், பெண் விடுதலையின் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது.

Sexuality, masculinity, feminity எல்லாம் ஒன்றல்ல. பெண் பற்றிய உனது sexual கற்பனைகள் அல்ல பெண்மை. நான் உடலுறவு கொள்ள விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நான் தீர்மானிப்பது sexuality தொடர்பானது.

பெண்மை என்பது sexuality தொடர்பான ஒரு கருத்தியல் அல்ல, அது ஒரு "சமூகத்தின்" பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு ஆண் சமூகத்தின் ஒட்டுமொத்த பார்வை!

நீ உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களை நீ இந்த சமூகம் வரையறை செய்திருக்கும் 'பெண்மை' எனும் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. We men have a free hand with our sexuality and sexual preference noh?

ஆனால் நீ திருமணம் செய்யும் பெண்ணிடம் 'பெண்மையின்' கோட்பாடுகளை எதிர்பார்க்கிறாய், ஏனென்றால் திருமணம் ஒரு சமூக நிறுவனம். அங்க உனது முடிவை தீர்மானிப்பது sexuality அல்ல! இந்த சமூகம், ஆண்மை!. உனது மேலாதிக்கத்தை நிறுவ பெண்மை தேவைப்படுகிறது.

ஆண்மை என்றால் என்னவென்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள்
அதன் அடிப்படையில்,  அதற்கு அடிபணியும் விதமாக பெண்மை என்றால் என்னவென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். 

பெண்மை என்றால் என்னவென்று எந்த ஒரு பெண்ணும் தீர்மானிப்பதில்லை. ஆண் சமூகமே அதை தீர்மானிக்கிறது.

ஆகையினால், பெண்மை என்றால் என்னவென்று தீர்மானிக்கும் ஆதிக்க ஆண்மை அழியவேண்டும்! நீ உடலறவு கொள்ள விரும்பும், காதலிக்க விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் இருவருடைய தனிப்பட்ட முடிவு, அதில் ஆண்மை பெண்மை எனும் சமூக கோட்பாடுகள் தேவைப்படாது.

பெண்மை எனும் புனிதம் அழிய வேண்டும் என்றால், அதன் வேர் ஆக இருக்கும் ஆண்மையெனும் ஆதிக்கமும் அழிய வேண்டும். 
அதுவே சமத்துவம்.

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர் 
9/3/2019


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...