Skip to main content

அரகலய அக்காவை மன்னியுங்கள்

அரகலய அக்காவை மன்னியுங்கள்.

அந்த 'அரகலய கொழும்பு லிபரல்' அக்கா தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை வன்மத்துடன் விமர்சித்து பேசியதை கேட்டவர்கள் வியப்படைய தேவையில்லை. அந்த அக்காவின் target market சிங்கள மக்கள் தான். சிங்களவர்கள் மத்தியில் "நல்ல தமிழர்" என்று பெயரெடுக்க கால காலமாக முரளிதரன்கள், கதிர்காமர்கள், போன்றோர் செய்து வரும் அதே சில்லறைத்தனமான வேலையை தான் அரகலய அக்காவும் செய்யுறா.


சிங்களம், ஒரு model தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அப்படி சிந்திக்க பழகிய கொழும்பு மையவாத அடிமைகள், எப்படி தமிழர்களின் குரலாக ஒலிப்பார்கள்? அவர்கள் இயல்பே இப்படி தானே இருக்கும். Malcolm X சொல்லும் அந்த House Negro mentalityஇன் உற்பத்தி தான் ஒரு இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக நிறுத்தும்.

அரகலய அக்காவுக்கும் அந்த புத்தி தான்.

அதுவும் தமிழர்களின் போராட்டத்தை புற்றுநோயுடன் ஒப்பிட்டு பேசுவது எவ்வளவு insensitiveஆன ஒரு விடயம். அரகலய அக்காவுடன் தைய தக்கவென குதிக்கும் சகாக்களின் சிவப்பு சட்டைகளை அலங்கரிக்கும் தலைவர்களின் வரலாறுகளில் உள்ள வன்முறை வெறியாட்டங்களை அவர் எந்த நோயுடன் ஒப்பிடுவார்.? ஒப்பிடும் தைரியம் அக்காவுக்கு இருக்கா. ஏன் தமிழர்களுக்கு எதிராக கால காலமாக நடந்து வரும் இனக்கலவரங்களுக்கு ஆட்கள் சேர்த்து கொடுத்த சிங்கள தொழிற்சங்கங்களையும் அக்கா இப்படி விமர்சிப்பாவா? யாழ் பொது நூலகத்தை எரித்த சிங்கள காவல்த்துறை காடையர்களுடன் வந்த காமினி திசாநாயக்கவின் சிங்கள தொழிற்சங்கவாதிகளை அக்கா எந்த நோயுடன் ஒப்பிடுவா?

(சரி இதையெல்லாம் விடுங்க Cancer பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத ஒரு சூழலில், அதை பற்றிய social taboosஅ reaffirm பண்ணுற மாதிரி வேற அக்காவின் பேச்சிருக்கு, இதை நான் எங்க போய் சொல்ல😔)

அரகலய அக்கா ஒரு அடிமை மனநிலையின் வெளிப்பாடு.

"சிங்களவர்களே! சிங்களவர்களே! இதோ பாருங்கள் நான் உங்களை விட கடுமையாக புலிகளை விமர்சிக்கிறேன் பாருங்கள்! நான் ஒரு நல்ல தமிழர்! நான் ISO சான்றிதழ் பெற்ற தரமான ஸ்ரீ லங்கன்" என்று அந்த அக்கா இப்படி தான் சொல்லி ஆகணும்

அவக்கு வேற வழி இல்லை. அவவ குறை சொல்ல தேவை இல்லை. அந்தக்காவ மன்னிச்சு விடுங்க..உண்மைய சொல்ல வேண்டும் என்றால், அவ தன்னை தானே வெளிப்படுத்தி கொண்டதை நாம் பாராட்ட தான் வேண்டும்.

ஒரு விடயத்தில் மட்டும் அவதானமா இருங்க. கொழும்பு லிபரல்ஸ எங்கள் அரசியலுக்குள் திணிக்க வரும் கூட்டத்திடம் மட்டும் அவதானமா இருங்கள்.

இனி அரகலய அக்காவ மாதிரி ஆட்களை தூக்கி கொண்டு எங்கட அரசியல் பக்கம் தமிழ் பேசுகிற அரகலய அனுதாபிகள், சுமந்திரன்கள் வந்தா, அவர்களை கவனிக்க வீட்டில் உள்ள பிஞ்ச செருப்புகளை எடுத்து வெய்யுங்கள். 👍 அதில் மட்டும் அவதானமா இருங்க. அக்கா பாவம், அவங்கள மன்னிச்சு விடுங்க.

-Mr. பழுவேட்டரையர்
17/10/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...