Skip to main content

குஜராத் படுகொலையும்-கருணாநிதியும்! ஒரு Flash Back.

சமீபத்தில் அண்ணன் சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. உடன்பிறப்புகளின் உலகத்தில் ஒவ்வொரு கிழமையும் இது தான் செய்தி. 30 secondsக்குள் எதையாவது வெட்டி ஒட்டி சரி ஒரு கிழமைக்கான தீவனத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் அறிவாலயத்துக்கு வெளியே ஒதுங்கும் திமுகவின் ஊடகமுட்டாளர்களுக்கு தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கினால் தான் வயிறு நிரம்பும்.

அப்படிப்பட்டவர்கள் உருவாக்கிய புது சர்ச்சை தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்ணன் சீமான் பேசிவிட்டார் என்ற இந்த புது புகார்.

அண்ணன் சீமானின் பேச்சானது, தொடர்ந்து பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக எனும் கூட்டத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீதான ஆதங்கம் தான்.

அந்த பேச்சின் தொடக்கத்தில்,
குஜராத் படுகொலையை, மோடி எனும் இந்துத்துவ பயங்கரவாதி நிகழ்த்திய போது, அதை கண்டிக்காது வேடிக்கை பார்த்து, பாஜகவை பல இடங்களில் காப்பாற்றும் வேலையையும் செய்த திமுக மீதான விமர்சனம் மற்றும் அதன் துரோக வரலாற்றின் அம்பலப்படுத்தலோடும் தான் ஆரம்பிக்கிறது. 

ஆதாரம்:

திமுகவினர் இன்று மும்முரமாக பரப்பும் அண்ணன் சீமானின் 30 second வீடியோவில் அவர் திமுகவை அம்பலப்படுத்திய பேச்சு இருக்காது.
குஜராத் படுகொலைக்கு துணை நின்ற துரோகத்தை பற்றி பேசாது கடக்கவே, சாத்தானை பிடித்து தொங்கும் இந்த புது சர்ச்சையை உடன்பிறப்புகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

குஜராத் படுகொலையை பற்றி ஊடகவியலாளர் மணி ஒரு முறை கருணாநிதியை நோக்கி கேள்வி எழுப்பிய போது, "அது இன்னொரு மாநிலத்தின் உள் விவகாரம் அதில் நாம் தலையிட கூடாது" என்று சொன்னவர் தான் கருணாநிதி.

அது மட்டுமா? அன்று குஜராத் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, பாஜக அரசையே ஆதரித்து ஓட்டளிப்போம் என்று கூட கருணாநிதி வெளிப்படையாக சொல்லியிருந்தார்.

ஆதாரம்: 
அன்று உலகெங்கிலும் இருந்து குஜராத் கலவரத்துக்கு எதிராக கண்டனங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் கும்பகோணத்தில் ஒரு மேடையில் கருணாநிதி

"தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள்" என்று மீண்டும் கலவரத்துக்கு எதிரான மக்களின் கண்டனங்களை கூட கொச்சைப்படுத்தி பேசியவர் தான் கருணாநிதி.


இவ்வளவு ஏன்? 2013இல் நரேந்திர மோடி எனும் அந்த படுகொலையாளன் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருந்த போது, அதற்கு எதிராக ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் திமுகவினரின் கையொப்பமும் இருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன், உடனடியாக பதறிப் போய், மோடிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர் தான் இந்த கருணாநிதி.

முரசொலி மாறன் தரகர் வேலை பார்த்து, தனக்கும், ஆ.ராசா மற்றும் பாலுவுக்கு மத்தியில் பதவியை பெற்று, கட்டிய பாஜக-திமுக கூட்டணியை, அன்று குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் பிணங்களின் மேல் நின்று காத்த துரோகி கருணாநிதியின் இந்த துரோகத்தை..... அண்ணன் சீமான், ஐயா பழனி பாபா போல, தொடர்ந்து மேடைக்கு மேடை அம்பலப்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததால், நாளுக்கொரு சர்ச்சையோடும், புது கதைகளோடும், 30 second விடியோக்களோடும் எல்லோருடைய whatsapp வாசலிலும் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஐயோ பரிதாபம்!

கால காலமாக இப்படி தான் திமுக தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இனியும் அது நடக்காது. இது உங்க தாத்தா காலத்து திமுகவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் தமிழர்கள் உங்கள் தாத்தா காலத்து தமிழர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

-Mr பழுவேட்டரையர்
5/8/2023


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...