Skip to main content

தமிழ் மொழி- நாகரிகத்தின் மொழி!

3000, 4000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொல்லும் தந்தை பெரியாரின் கருத்து, அறிவியலுக்கு முரணான, Civilisation/நாகரிகத்தின் தோற்றம் பற்றிய புரிதலற்ற பிதற்றலாக தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்வது ஒரு வித திராவிட மூடநம்பிக்கை.

அறிவியலின் அடிப்படையில்,
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்க போனால், 
காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதர்கள், பெரியாரின் மொழியில் சொல்லப்போனால் "காட்டுமிராண்டிகள்", 
ஒரு நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அங்கே கூடி குடியிருந்து , கட்டமைப்புகள் உருவாக்கி, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி வளர்த்து, விவசாயம் செய்தி, கால்நடைகள் வளர்த்து, ஆவணப்படுத்தல், அறிவு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் கூட்டமே நாகரிகமாக அடையாளப்படுகிறார்கள். 

இங்கே காட்டுமிராண்டியையும், நாகரிகத்தையும் வேறுப்படுத்தும் விடயங்களில் மொழி முக்கியமான இடத்தில் இருக்கிறது.

எழுத்து, பேச்சு, இலக்கணம், என வளர்ச்சி அடைந்த மொழி - நாகரிகத்தின் அடையாளமாக, அடிநாதமாக இருக்கிறது. 

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள், தமிழோடு சேர்ந்து பரிணாமித்து நாகரிகத்தின் மனிதர்களாக, தமிழர்களாக அடையாளப்படுகிறார்கள். 

இங்கே காட்டுமிராண்டியை நாகரிக மனிதனாக மாற்றியது தமிழ் என்று கூட சொல்லலாம். 

அதனால் தமிழ்! நாகரிக மனிதனின் மொழியாக இருக்கிறது. !
நாகரிகத்தை உருவாக்கிய மொழியாக இருக்கிறது! ஆகையினால் தமிழ், 
தொன்மை மிக்க நாகரிகத்தின் முதன்மை அடையாளமாக இருக்கிறது! 

அதை காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொல்வது, மொழியின் பரிணாம வளர்ச்சியை பற்றிய, நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய புரிதலற்ற பேச்சாகவே பார்க்க வேண்டியதாக இருக்கு. 

அறிவியலுக்கு முரணனான நிறைய கருத்துக்களை பெரியார் பல இடங்களில் சொல்லிவிட்டு செல்கிறார். அதில் ஒன்று தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற அவரது கருத்தும்.

அந்த கருத்தை இன்று வரை ஆழமாக நம்பி பரப்பும் திராவிடர்கள், மூடர்களாகவும், மூட நம்பிக்கை கொண்டவர்களாகவும் தான் தென்படுகிறார்கள்.    
-Mr. பழுவேட்டரையர் 

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...