Skip to main content

Mr.பழுவேட்டரையர்

பழுவேட்டரையர் என்ற பெயர் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட பெயர். 
வரலாற்று ஆசிரியர்களுக்கும் இது புதினமான பெயர் அல்ல, அதே நேரம், இது வெறுமனே புதினத்தில் மட்டும் வரும் பெயரும் அல்ல. இது ஒரு உண்மை வரலாற்று கதாபாத்திரத்தின் பெயர். 

சோழர்களின் தளபதியாக இருந்த ஒரு சிற்றரசனன் தான் பழுவேட்டரையர். அவனது பெயரில் ஒரு படையணி கூட சோழர்களின் ராணுவத்தில் இருந்தது. ஈழத்தில் அதிக போர் களங்கள், சண்டைகள் கண்ட படையணி என்ற பெருமை பழுவேட்டரையர் படையணிக்கு இருக்கு.

பொன்னியின் செல்வனெனும் வரலாற்று புதினத்தில் பழுவேட்டரையரின் வரலாறு, கதாபாத்திரத்தின் உணர்வுகளால் விழுங்கப்பட்டாலும், அந்த பெயருக்கான வரலாறு, ஆர்வம் கொண்டு தேடினால் எளிதில் கிட்டும்.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பொன்னியின் செல்வனில் பிடித்த கதாபாத்திரமும் பழுவேட்டரையர் தான்.

போரினால் காயமடைந்த புலிகளை பார்க்கும் போது "பொன்னியின் செல்வனில் வருகின்ற பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத் தழும்புகள் உண்டு" என்று பெரிய பழுவேட்டரையரின் பெருமையை எடுத்துக் கூறி போராளிகளுக்கு தைரியம் கொடுப்பாராம் தலைவர்.

இந்த காரணங்களுக்காக தான் எனக்கும் அந்த பெயர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அதனால் தான் அதை எனது புனைப்பெயராக்கி கொண்டேன்.

பழுவேட்டையரின்
சேர பாரம்பரியத்துக்கும், கல்கியின் கதாபாத்திர அமைப்புக்கும் இழுக்கு ஏற்பட கூடாது என்பதற்காக தான் நம்பியாரின் படத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறேன். 

🙂
-Mr. பழுவேட்டரையர்.

Comments

  1. இராவணன் அந்தணரா?

    ReplyDelete
  2. பொன்னியின் செல்வன் கற்பனை கதை, வரலாற்று புதினம் அல்ல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...