Skip to main content

காத்தான்குடிக்கு முன்: முஸ்லிம் ஊர்காவல் படை செய்த தமிழின அழிப்பு!

காத்தான்குடி படுகொலை இலங்கை முஸ்லிம் சமூகத்தினரால் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அதே சமூகத்தின் மீது இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் அதே அளவில் நினைவுகூரப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

காத்தான்குடி படுகொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் யார் என்று உருப்படியான எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காத்தான்குடிக்குள், ஆயுததாரிகள் புகுந்து பட்ட பகலில் அதுவும் ஒரு பள்ளிவாசலில் படுகொலையை நிகழ்த்தி விட்டு, சர்வ சாதாரணமாக தப்பி போனது எப்படி? சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நொடி, ராணுவம் அங்கு உடனடியாக வந்ததும். சிங்கள அரசு உடனடியாக புலிகள் மீது பழியை சுமத்தி அவசர அவசரமாக அதை வைத்து கட்டமைத்த போலி கதைகள் பற்றியும் விலாவரியாக இன்னொரு பதிவில் பதிவிடுகிறேன். 
ஆனால் அதற்கு முன், காத்தான்குடி படுகொலை நடக்க முன், 

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், காத்தான்குடி சம்பவத்திற்கு முன்னரான மூன்று மாத காலப்பகுதிக்குள், ஈழம் கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் குழுவினரும், இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன், தமிழர்களுக்கு எதிராக 39க்கும் மேற்பட்ட படுகொலைகளையும் கிராமிய அழிப்புகளையும் நிகழத்தியிருக்கிறார்கள்.. அதில் முஸ்லிம் ஊர்காவல் படையும், சிங்கள ராணுவமும் இணைந்து செய்த சில (தரவுகளுடன் ஆவணப்படுத்தப்பட்ட) படுகொலைகளின் பட்டியலை இங்கே பதிவிடுகிறேன். 

நீலாவணை படுகொலை -21/06/1990- நீலாவணையில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 14 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

கல்முனை எரியூட்டல்/ நகர் படுகொலை 21/06/1990
கல்முனை நகரில் 40 தமிழர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டனர் 
கல்முனை 1ஆம் 2ஆம் குறிச்சிகளில் 340 வீடுகள், பாண்டிருப்பில் 210 வீடுகள், நற்பிட்டி முனையில் 35 வீடுகள் சேனைக்குடியிருப்பில் 20 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 

கல்முனை நகரில் 36 பலசரக்கு கடைகளையும் 10 நகை கடைகளையும் கொள்ளையடித்த பின் சேதப்படுத்தினர். 

பாண்டிருப்பில் 80 தமிழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கல்முனையில் உள்ள தமிழர்களின் கடைகளுக்குள் போட்டு எரிக்கப்பட்டனர். 

இவர்களைத்தேடி இராணுவ முகாமுக்குச் சென்ற 60 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பாத்திமா நகர் அகதி முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 90 பொது மக்கள் கல்முனை நகரில் எரிக்கப்பட்டனர்.

பொத்துவில் படுகொலைகள்-

19/06/1990இல் 85 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 16 பேர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர் 

20/06/1990 இல் 1000 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டன.

 ஆலையடி வேம்பில் படுகொலைகள்- 26/06/1990- ஆலையடி வேம்பில் படுகொலைகள் -ஆலையடி வேம்பில் வைத்து 5 பொது மக்கள் கொல்லப்பட்டனர்


27/06/1990- வீரமுனையில் 360 வீடுகள் எரிக்கப்பட்டன, 69 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 
மல்வத்தை கிராமிய அழிப்பு -27/06/1990- மல்வத்தை, மல்லிகைத்தீவு வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
மல்வத்தையில் 170 வீடுகளும், மல்லிகைத்தீவில் 35 வீடுகளும், வளத்தாப்பிட்டியில் 115 வீடுகளும் கொள்ளை அடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன 

4ஆம் காலனி கிராமிய அழிப்பு - 27/06/1990- 4ஆம் காலனி என்ற கிராமம் முற்றாக அழிக்கப்பட்டது, 35 தமிழர்கள் சுடப்பட்டனர். 280 வீடுகள் எரிக்கப்பட்டன.

அக்கரைப்பற்று படுகொலைகள் -24/06/1990-03/07/1990
24/06/1990- 35 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 
25/06/1990- 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர்
28/06/1990-10 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

03/07/1990-20/07/1990 வரை 103 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 1529 வீடுகள் சேதமாக்கப்பட்டன 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டன 20 கடைகளும், 2 மில்லும் எரிக்கப்பட்டன 
 
கோமாரி படுகொலை- 20/06/1990- கோமாரியில் 15 வீடுகளும் 2 கடைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. 3 இளைஞர்கள்கள் கொல்லப்பட்டனர்.

21/06/1990- 20 தமிழர்கள் சுடப்பட்டனர், பின் வீரமுனையில் கைது செய்யப்பட்ட 90 தமிழர்கள் சம்மாந்துறை சந்தியில் வைத்து எரிக்கப்பட்டனர். 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

சம்மாந்துறை படுகொலை-25/06/1990- சம்மாந்துறையில் 80 தமிழ் மக்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் 


27/06/1990- திருக்கோயில் படுகொலை- திருக்கோயிலில் 25 இளைஞர்கள் இரகசியமாக கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

லகுகல காட்டுப் படுகொலை- 28/06/1990 இல் லகுகல காட்டில் அகதிகளாக இருந்த 25 இளைஞர்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர்.

பொத்துவில் காவல்துறை படுகொலை -29/06/1990 பொத்துவில் காவல்த்துறை நிலையம் திறக்கப்பட்டது, 

▪️30-06-1990இல் இருந்து 25/07/1990 வரை 75 பேர் வரை கொலை செய்யப்பட்டனர் 


 சவளக்கடை படுகொலை 30/06/1990- சவளக்கடையில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டனர், 25 வீடுகள் எரிக்கப்பட்டன 

01/07/1990- சம்மாந்துறையில் 52 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 வீடுகள் எரிக்கப்பட்டன.  
சொறிக்கல்முனையில் 25 வீடுகள் எரிக்கப்பட்டன. 3 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். 

03/07/1990 சுற்றிவளைக்கப்பட்டு பாண்டியூரன் உட்பட 65 பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் 

நிந்தாவூர் முருகன் கோவில் படுகொலை 
08/07/1990- 89 தமிழர்கள் நிந்தாவூர் முருகன் ஆலயத்தில் வைத்து சுடப்பட்டு ஆலயத்துள் போட்டு எரிக்கப்பட்டுள்ளனர் 

08/07/1990- சாகாமப் பகுதியில் 15 வீடுகள் எரிக்கப்பட்டன 
09/07/1990- கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரத்தில் 150 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2000க்கு மேற்பட்ட ஆடுகள் மாடுகள் பிடித்துச் செல்லப்பட்டன.

28/07/1990- மீண்டும் கல்முனையையும், பாண்டிருப்பையும் சுற்றிவளைத்து 35 தமிழர்கள் சுட்டு கொன்றனர். 
இந்த 35 பேரும் கல்முனை நகரில் கடை வைத்திருந்த தமிழர்கள் ஆவர்.

சம்மாந்துறை 
வீரமுனையில் கைது செய்யப்பட்ட 40 தமிழர்கள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் எரிக்கப்பட்டனர்.

28/07/1990-கோமாரி அகதிகள் முகாமில் இருந்து 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

சித்தாண்டி படுகொலைகள் 20,27.07.1990 -137 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

02/08/1990 அட்டவவள்ளத்தில் 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேர் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். வயலில் அருவி வெட்ட சென்ற 7 பேர் கொல்லப்பட்டனர்.

02/08/1990 வரை காரைதீவு கிராமத்தில் 108 தமிழர்கள் கொல்லப்பட்டனர் 

01/08/1990- பொத்துவில் அகதி முகாம் சுற்றிவளைக்கப்பட்டு 200பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 100 பேர் சுடப்பட்டனர். 
02/08/1990 மேலும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர் 


இந்த தாக்குதல்கள் அனைத்தையும் முஸ்லிம் ஊர்காவல் படை/ஆயுததாரிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து செய்தது. 

இது வெறும் காத்தான்குடி படுகொலைக்கு முன் நடந்த படுகொலைகள் மட்டும் தான். அதன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளின் பட்டியல் இதை விட பெரிது. 
இங்கே காத்தான்குடியை தமிழர்களுக்கு எதிரான ஒரு அடையாளமாக மாற்றியவர்கள், கால காலமாக காத்தான்குடி எப்படி முஸ்லிம் ஊர்காவல் படை, ஜிகாத் குழு.. ஏன் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக இருந்த சஹ்ரான் குழு வரை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தது என்ற வரலாரை மூடி மறைக்கிறார்கள் என்றும் கேட்டு சொல்லுங்கள். 

-Mr. பழுவேட்டரையர்.
05/08/2026

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...