Skip to main content

ஈழ மலையக உறவு

ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது. 

இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும்  இல்லை, பேசப்படுவதும் இல்லை. 

ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள்,
மலையகத்தில் ஒரு வடிவத்திலும்,
தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும்,
சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது.

இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது. 

வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

தற்போதைய சூழலில் சாதிய கட்டமைப்புகள் சிங்கள தேசத்திலும் மலையகத்திலும் கூட தான்  வலுவாக இருக்கிறது. ஆனால் அதை பற்றிய உரையாடல்கள் இங்கு பெரும்பாலும் நடப்பதில்லை. தமிழர்களின் தாயக நிலமான தமிழீழத்திலும் சாதி எனும் கொடிய நோய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சிங்கள தேசத்தில் இருப்பது போன்று தமிழீழத்தில் சாதியம், இயல்பாக்கப்பட்ட ஒரு தேசிய குணாதிசயமாக இல்லை. மலையகத்தில் இன்றுவரை எம்மவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு கூட்டம், திட்டமிட்டே, தொழிற்சங்கங்களின் சாதியவாதத்தை மூடி மறைக்கின்றனர். 

அதனால் நேர்மையாக ஈழத்தில் சாதியத்தின் இன்றைய நிலை பற்றி நாம் அறிய வேண்டும் என்றால். எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது. 

வரலாற்றில் எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது.. 

எல்லாருடைய நோக்கங்களையம் நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. 

குறிப்பாக ஈழத்தில் தலித்திய கருத்தியலை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் கூட்டத்தின் நோக்கங்கள் உற்பட அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் என்று குறுகிய வட்டங்கள் செய்யும் மூளை சலவைகளை, ஆதாரமற்ற சோடிப்புகளை பற்றியும் பேச வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.


இங்கே ஈழத்தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையில் ஏதோ சண்டை இருப்பது போலவும், அதற்கு பின்னால் சாதிய கண்ணோட்டம் ஒன்று இருப்பது போலவும் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்கவும் நிறையே பேர் பாடுபடுவதை காண கூடியதாக இருக்கு. 

மலையகத் தமிழர்களாகட்டும், ஈழத்தமிழர்களாகட்டும். கால காலமாக ஈழத்தில், தமிழர்கள், தமிழர்களாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே சிங்கள பேரினவாத அரசால் ஒடுக்கபப்டுகிறார்கள், அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த ஒடுக்குமுறையின் மீது கவனம் செலுத்தாமல், இல்லாத சண்டைகளை இருப்பது போல காட்ட முனையும் கூட்டத்தின் நோக்கம் அறிய வேண்டிய தேவை இருக்கிறது தானே ..

ஈழத்தின் அரசியல் வரலாற்றில், மலையகத் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது ஈழத்தமிழர்கள் மட்டும் தான். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல்களும், போராட்டங்களும், சிங்கள மக்கள் மத்தியிலா எழுகிறது ? இல்லை முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்தா எழுகிறது.? மலையகத்தில் தமிழர்கள் போராடினால், அவர்களுக்கான போராட்டம் தமிழீழத்திலும் நடக்கிறது. குடியுரிமை போராட்டம் தொடங்கி  அடிப்படை சமபள உரிமை போராட்டம் வரையில் அந்த ஒற்றுமை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை கட்சியாக, ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற பெரும் கட்சியாக இருக்கும் இலங்கை  தமிழரசு கட்சி, மலையக உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுத்து தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான். 


அந்தளவுக்கு பின்னி பிணைந்திருக்கிறது ஈழ மலையக உறவு.  

ஆனால் இதையெல்லாம் பற்றி ஆராயாமல், பேசாமல், வசதியாக இவ்வாறான வரலாற்று உறவுகளை  எல்லாம் இருட்டடிப்பு செய்து, இல்லா சிக்கல்களை உருவாக்க முயற்சிக்கும் கூட்டத்தின் உண்மையான நோக்கங்களை, அம்பலப்படுத்தி கொண்டே தான் நாம் நிறைய அரசியல் பேச வேண்டி இருக்கு. ஒவ்வொன்றாக இனி கதைக்க ஆரம்பிப்போம். ! 

தொடரும் ..

-Mr.பழுவேட்டரையர் 
23/05/2023

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...